• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jun 2014      »     ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்

எம் இறைவனே ! எக்காலமும் அதிகமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேரிலும்அவர்களின் அனைத்து கிளையார் பேரிலும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக .


அல்லாஹுவை அறிவதிலே முயற்சி செய்தார்களே அந்தக்கூட்டம் ஜயம் பெற்றது . அவனுடைய மாட்சிமை சிறப்படைந்தஇறைவனின் வாயிலின் வழியே அவர்கள் மாட்சிமையடைந்தார்கள் .


லைலாவிலே தட்டழிந்தவர்கள் போலும் , மயங்கியவர்கள் போலும் , அவனைத் தவிர்ந்த எல்லாவற்றையும்முழுமையாக மறந்தார்கள் . இன்னும் மிக்க மோகம் கொண்டவர்களானார்கள் .


அல்லாஹுவால் கொடுக்கப்பட்ட பணத்தை அவனுக்காகவாணாள் முழுதும் செலவழித்தார்கள் . தங்களுடைய செல்வத்தையும்பிள்ளைகளையும் குடும்பத்தையும் வெறுத்தார்கள். அவர்கள் வாழ்விற் செழுமையையும் உறக்கத்தையும்வெறுத்தார்கள்.   அவர்கள் நாம் என்ற மமதையை நீக்கிக் கொண்டார்கள்.. திரைகளையும் நீக்கிக்கொண்டார்கள் .


உள்ளாலும் வெளியாலும் அவனல்லாதவைகளுக்கு அவர்கள்அஞ்சவில்லை. அவர்கள் உகந்தவனான அல்லாஹுவாகிய ஹபீபைக் கொண்டே தனித்திருந்தார்கள். விஸால் எனும்  இரண்டறக் கலத்தலையும்அடைந்து கொண்டார்கள் அவர்கள் ஞானிகளும் பிரபஞ்ச விவகாரங் களனைத்தையும்  நிருவகிக்கிறவர் களுமானார்கள்



இறைவனை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறவர்களை ( திக்ரு செய்கிறவர்களை ) இறை பாதையில் நடக்கிறவர்களைஇவர்களுடைய பாதைகளைப் பற்றிக் கொள்ளுங்கள் . அப்போது ஹக்குடன்இரண்டறக் கலத்தலெனும் பேற்றையடைவீர்கள் .


நேர்மையெனும் ( உண்மையெனும் ) இருப்பிடத்திலே அவர்கள் தங்கள்முழங்கால்களை மடித்தார்கள் . லாஇலாஹ இல்லல்லாஹு என்கிறது கொண்டுஅவர்கள் அவர்களுடைய விருப்பங்களை அடைந்தார்கள்

(ராதிபதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவில் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸையித்யாஸீன் மெளலானா ( ரலி ) அவர்கள் )