திருமறைப் பக்கம்
இருபதா ? எட்டா ?
எவனொருவன் நேர்வழி (இதுதான் என்று) அவனுக்குத் தெளிவான பிறகு (அல்லாஹ்வுடைய) இந்தத் தூதருக்கு மாறு செய்கிறானோ , இன்னும் முஃமின்களின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுகிறானோ நாம் ( உலகில் ) அவனைஅவன் திரும்பிய ( தவறான ) வழியிலேயே திருப்பி விடுவோம் , மறுமையில்அவனை நரகினில் நுழையச் செய்வோம் , அது சென்றடையும் இடத்தில் மிகக் கெட்டதாகும் . (4: 115)
புனித ரமளானில் தராவீஹ்தொழுகை 20 ரக்அத்துகளாக உலக முஸ்லிம்களால் தொழப்பட்டு வருகிறது . அதனை 8 ரக்அத்துகள்தான் என மக்களைக் குழப்பி வருகின்றனர் குழப்பவாதிகள் .
20 ரக்அத்துகள் பெருமானாரால் தொழப்பட்டதை ஸஹாபாக்கள் நேரில்கண்டு தாங்களும் தொழுது , அவர்களைப்பின்பற்றி இமாம்களும் தொழுது , கஃபத்துல்லாஹ்விலும்அவ்வாறே இன்றுவரை கடைப்பிடிக்கப்பப்டடு வருகிறது . ஆனால்சமுதாயத்தைக் கூறுபோட நினைக்கும் குழப்பவாதிகள் உம்மத்துகளே ஒன்றுபட்டிருக்க அனைவருக்கும்மாறுபட்டு தனிவழி செல்கின்றனர் . இவர்களின் கீழான நிலையைத்தான் மேலே காணும் திருவசனம் எச்சரிக்கின்றது .
ஒரு சட்டப் பிரச்சினைபற்றிகுர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவான விபரம் கிடைக்கப்பெறவில்லையானால் அப்பிரச்சினைப்பற்றிஸஹாபாக்கள் , தாபியீன்கள், இமாம்கள் ஆகியோரின் கருத்தொற்றுமையை ( ஏகோபித்தமுடிவை ) பின்பற்றவேண்டும் . அதற்குப்பெயர் ‘ இஜ்மாஃ ’ என்று கூறப்படும் . இவ்வாறான இஜ்மாஃ ஆகும் என்பதற்கு மேற்கண்ட திருக்குர்ஆனின் திருவசனம் ஆதாரமாகும் .
இந்தத் திருவசனத்திற்குகாஜின் என்ற தப்ஸீரில் எழுதப்பட்டிருக்கும் விளக்கமாவது :- முஃமின்களின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுவோர் (அதாவது: ஜமாஅத்தைப்பிரிந்து தனித்துச்செயல் படுவது ) ஹராமாகும் . எனவே , முஃமின்களின் ( ஏகோபித்த) வழியைப்பின்பற்றுவது கட்டாயமாகும். ஏனெனில் , அல்லாஹ்வின் தூதரவர்களுக்கு மாறு செய்வோருக்கும் . முஃமின்களின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹு தஆலா கடும் எச்சரிக்கை செய்துள்ளான் . எனவேஇந்த ஆயத்தின் மூலம் இஜ்மாஉல் உம்மா ஆதாரமாகுமென்பது உறுதியாகி விட்டது.
(தப்ஸீர்காஜின்பாகம் 1, பக்கம் 598.)
புனித ரமளான் மாதத்தில்உம்மத்துக்கு மாறுபட்டு நரகத்திற்குச் செல்வோரைப்பின்பற்றி 8 ரக அத்துகளோடுநிற்காமல் 20 ரக்அத்துகள் தொழுது சுவனத்தை அடைவோமாக !