ஹதீஸ் பக்கம்
புனித ரமளான் ! பூக்கும்நோன்பு !
ஒரு ரமளானிலிருந்து மற்றொரு ரமளான் வரை , ஒரு ஹஜ்ஜிலிருந்து மற்றொரு ஹஜ்ஜு வரை , ஒருஜுமுஆவிலிருந்து மற்றொரு ஜுமுஆ வரை , ஒரு தொழுகையிலிருந்து மற்ற தொழுகைவரையுள்ளஇடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மன்னிக்கப்படும். பெரும்தவறுகள் மன்னிக்கப்படாது
போரில் உங்கள் உயிருக்குகேடயம் பாதுகாப்பு அளிப்பதுபோல நோன்பு உங்களை நரகிலிருந்து பாதுகாக்கும்
அல்லாஹ் வானம் பூமிஅனைத்திற்கும் பேசுவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் ரமளான் நோன்பு வைத்தவருக்கு சொர்க்கம்உண்டு எனும் நற்செய்தியை அவை கூறியிருக்கும்.
நோன்பாளியின் உறக்கம்ஒரு வணக்கமாகும் . அவரது ( நல்ல ) பேச்சுதஸ்பீஹ்- இறைத்துதியாகும். அவரது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . அவரது அமல்களுக்கு பன்மடங்கு நன்மைகள் வழங்கப்படும்.
என் உயிர் எவன் கைவசம்இருக்கிறதோ அ (ந்த இறை ) வன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம்கஸ்தூரி வாடையை விட சிறந்ததாகும் .
நோன்பாளிக்கு இரண்டுசந்தோஷங்கள் உண்டு . ஒன்று நோன்பு திறக்கும்போது . இரண்டுஇறைவனை சந்திக்கும்போது .
நிச்சயமாக சுவனத்துவாசல்களும் வானத்து வாசல்களும் ரமளான் மாதத்தின் முதல் இரவில் திறக்கப் படுகின்றன . கடைசிஇரவுவரை அது மூடப்படுவதில்லை . ரமளான் மாத இரவில் ஓர் ஆணோ பெண்ணோ தொழுதால்ஒவ்வொரு ஸஜ்தாவிற்கும் 1700 நன்மைகள் எழுதப்படும் .