இறைஇல்லம்
மெளலவி . பைஜுல்லாஆலிம் , ஆசிரியர் ,மதுரஸதுல்ஹஸனைன் ஃபீ ஜாமிஆ
யாஸீன்அறபுக் கல்லூரி ,திருச்சி .
பள்ளிகளின்பணிகள் பல :
பள்ளிகளைக்கட்டுவது ,அதற்குவண்ணம் பூசுவது ,விளக்குஅலங்காரம் செய்வது ,இமாம்மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம்கொடுப்பது ஆகிய பணிகள்செய்துவிட்டால் நிர்வாகிகளின்கடமை முடிந்துவிட்டது எனப்பெருமூச்சு விட வேண்டாம் .தொடர்கிறதுஉங்கள் பொறுப்புகள் .காரணம் ,மஸ்ஜிதுநிர்வாகம் என்பது மஹல்லாவையும் ,முஸ்லிம்களையும்சேர்த்தே நிர்வகிப்பதால்தான்முறையான நிர்வாகமாக அமையும் .
பள்ளிகள்தோறும் நடைபெற்று வரும் மக்தபுமதரஸாக்கள் முற்றிலும்பொலிவிழந்து காணப்படுகின்றன .பிள்ளைகளின்வருகை குறையும் போது நிர்வாகப்பெருமக்கள் தக்க நடவடிக்கைமூலம் மக்தபுகள் ஹயாத்தாகமுயற்சி எடுப்பது தலையாயக்கடமையாகும்.பிள்ளைகள்வந்தால்தானே இமாம்கள் முறையாகமார்க்கக் கல்வியைப் போதிக்கமுடியும் ?
மக்தபுகள்பொலிவிழப்பதற்குக் காரணம்உலகக் கல்விக்குக் கொடுத்தமுக்கியத்துவமும் அதனால்ஏற்பட்ட பாடச்சுமையும் தான் .எனவேமக்தபு மத்ரஸா நேரத்தில்டியூசனை நாட வேண்டிய சூழ்நிலை .இதனைமாற்றிட பள்ளிதோறும் மாலைநேரத்தில் ஸ்கூல் பாடங்களைதிறமையான ஆசிரியர்களைக்கொண்டு டியூசன் நடத்துவதுமஃரிப்புக்குப் பிறகு அதேகுழந்தைகளை வைத்து மக்தபுமதரஸா நடத்துவது .
நமதுசமுதாயம் உலகக் கல்வியில்மேம்படவும் ,கல்வியில்பின்தங்கி விடாமல் இருக்கவும்பள்ளிப் பாடங்களில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டுடியூசன் நடத்துவது காலத்தின்கட்டாயம் .பேகன்என்ற அறிஞன் சொன்னதுபோல கல்விஇல்லாத சமுதாயம் வெற்றியின்முகட்டை எட்ட முடியாது .
மஹல்லாவின்முஸ்லிம் ஜனத்தொகையை தெளிவாகக்கணக்கெடுப்பது .பிறப்பு ,இறப்பின்பட்டியலை முறைப்படுத்திபாதுகாப்பது. படித்தவர்கள் ,வேலைசெய்பவர்கள் ,வியாபாரிகள் ,மருத்துவர்கள் ,பொறியியல்வல்லுநர்கள் ,பட்டதாரிகள்ஆகியோர்களது விலாசம் ,தொலைபேசிபோன்ற விவரங்களைத் திரட்டுவது .
மஹல்லாஏழைச் சிறுவர்களுக்கு சுன்னத்( கத்னா )செய்துவைப்பதுமற்றும் ஏழைக்குமர்களைகண்டறிந்து திருமணம் நடத்திவைப்பது. அனாதைஏழை ஜனாஸாக்களை அடக்கம் செய்யஏற்பாடு செய்வது . இஸ்லாமியநூல் நிலையங்களை நிறுவிசெயல்படுத்துவது .
மஹல்லாமக்கள் வழிமாறி ,தடுமாறிஅஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத்கூட்டமைப்பை விட்டும் விலகிச்செல்லாமல் இருக்க மாதந்தோறும்தனித்தனி தலைப்புகள் வழங்கிஇமாமின் ஆலோசனையின் பெயரில்கூட்டங்கள் நடத்துவது. வாக்காளர்அடையாள அட்டைகள் ,ரேசன்கார்டுகள் இந்தியக் குடிமக்களின்ஜீவாதார உரிமை.அதில்பொடுபோக்காகஇருக்கும் நமது சமுதாயத்திற்குஉணர்வை ஊட்டுவதுடன் அனைவருக்கும்இவைகள் கிடைத்திட படித்த ,சமுதாய ,ஆர்வமிக்கஇளைஞர்களை குழுவாக அமைத்துசெயல்பட வைப்பது .
மஹல்லாதோறும்கட்டாயமாகத் திருமணச் சான்றிதழ்பெறுவது . இதுஇல்லையெனில் திருமணம் நடத்திவைக்க சம்மதிக்கக் கூடாதுஎன்பதுடன் ஒரு மஹல்லாவைவிட்டும் அடுத்த மஹல்லாவிற்குகுடிபெயர்வதாக இருப்பின்மஹல்லாவுக்கு தெரியப்படுத்துவதுடன்சான்றிதழ் கடிதம் பெற்றுஇவர்கள் செல்லும் மஹல்லாவில்சேர்வதுடன் அதனைச் சரிபார்த்துக்கொள்வது நிர்வாகிகளின்பொறுப்பாகும் .
பள்ளிகளின்இமாம்கள் முஅத்தின்கள் மற்றும்பணியாளர்கள் அல்லாஹ்வின்ஊழியர்கள் .எனவே ,அவர்களின்கண்ணியம் காக்கப்பட வேண்டும் .அவர்களின்தேவைகளை அறிந்து நிறைவேற்றவேண்டும் .இதைவிடுத்துஇமாம் மற்றும் முஅத்தின்களின்குமர்கள் போன்ற விஷயமாகநிர்வாகமே தபால் எழுதிக்கொடுத்து பள்ளிதோறும் சென்றுவசூலித்துக் கொள்ளுங்கள்என்று சொல்வது முறையற்றகண்டிக்க வேண்டிய செயல்களாகும்.
இமாம்கள்யார் ? உங்கள்பள்ளி இமாம் .எனவேஅவர்கள் நமது குடும்பத்தின்அங்கம் என்பதை உணர வேண்டும் .உங்கள்குடும்ப உறுப்பினரின் கண்ணியத்தைமானத்தை காப்பாற்றுவது உங்கள்கடமையல்லவா ,எனவே ,கண்ணியம்காப்பீர் !
மஸ்ஜிதுகள்தோறும் கட்டாயமாக பள்ளிக்கூடங்கள்உருவாக்கப்படவேண்டும் .அந்தஊரில் வசதி வாய்ப்பைப் பொறுத்துதொடக்கப் பள்ளியோ அல்லதுநடுநிலைப் பள்ளியோ அல்லதுஉயர்நிலைப் பள்ளியோ அல்லதுமேல்நிலைப் பள்ளியோ நடத்தப்படவேண்டும் .பள்ளிவாசல்கட்டுவதற்கு திட்டமிடுகிறபோதெல்லாம் எங்கெல்லாம்பள்ளிவாசல் உள்ளதோ அங்கெல்லாம்பள்ளிக்கூடமும் உண்டு என்றநிலை வர வேண்டும் .இத்திட்டம்நிறைவேற்றப்பட்டு விட்டால்உலகக் கல்வி விஷயத்தில் நம்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளவெற்றிடத்தை நிரப்பி ஒருமறுமலர்ச்சியை உருவாக்கமுடியும் என்பது திண்ணம் .
( நிறைவுபெற்றது )