• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai         »     2014     »     Mar2014     »     உடையா ? உபாதைய


உடையா? உபாதைய?

உடலைஇறுக்கிப் பிடிக்கும் ஆடைகளைவிரும்பி அணியும் காலம் இது .இளம்பெண்கள் உடை அணிந்ததே தெரியாதஅளவுக்கு ,லெகின்ஸ் ,டைட்ஸ்என மாடர்ன் கலாச்சாரத்தில்சிட்டாகப் பறக்கின்றனர் .நடந்துசெல்வதற்கும் ,வண்டிஓட்டுவதற்கும் இறுக்கமானஉடைதான் செளகரியம் என்பதுஅவர்களின் கருத்து .ஆனால் ,உடலைஒட்டிப் பிடிக்கும் உடைகள்உகந்தவைதாம ?எனஆராய்வோம் !


காலச்சூழலுக்கு ஏற்ப உடைகளை அணியவேண்டுமே தவிர ,சதாசர்வகாலமும் இறுக்கமான உடைகள்அணிவது நல்லது அல்ல .பெண்கள்இறுக்கமான உடைகளை அணியும்போது , வியர்வைவெளியேற முடியாமல் ,அதாவதுவெளியே வர வாய்ப்பு இல்லாமல்கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்குஉயர்ந்து விடும் .இதனால் ,வேர்க்குரு ,உஷ்ணக்கட்டிகள் மற்றும் கோடைக் காலநோய்கள் சருமத்தைப் பாதிக்கும் .மேலும்அணியும் உள்ளாடைகள் ,சாக்ஸ்உட்பட இறுக்கமாக இருந்தால் ,உடலில்துர்நாற்றம் வீசுவதோடு ,படை ,சொறிசிரங்கு ,அரிப்புபோன்றவை வரும் .


உடலில்இரத்த ஓட்டம் குறைந்து ,சுவாசத்திறன் பாதிக்கும் .தோள்பட்டை , முதுகுவலி ஏற்படலாம். ஓரளவுதளர்வான பருத்தி ஆடைகளைஅணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் ,கொளுத்தும்கோடைக்கும் ஏற்றது .காற்றுஉட்புகவும் ,அதிகப்படியானவியர்வை வெளியேறவும் வழிவகுக்கும் .ஈரத்தைநன்கு உள்வாங்கும் .உடலுக்குநல்ல குளிர்ச்சியையும்தரக்கூடியது !


இறுக்கமானஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும்பாதிப்புகள் :

இறுக்கமானஆடை அணிவது என்பது இரு பாலருக்குமேஏற்றது அல்ல .ஆண்களைப்பொருத்தவரை ,அவர்களுடையமறைவிடத்திற்கு கொஞ்சம்கூடக் காற்று வசதி இல்லாமல்போய்விடுகிறது .இதனால் ,வியர்வைசுரந்து அதிகப்படியானதுர்நாற்றத்தை ஏற்படுத்தும் .மிகஇறுக்கமான வழக்கமாகவைத்திருப்பவர்களுக்குஆண்மைக் குறைவு மற்றும்சிறுநீரகம் சம்பந்தமானபிரச்சனைகள் உண்டாகவும்வாய்ப்புகள் இருக்கின்றன.தொடை ,கால்மரத்துப்போய் வலி ஏற்பட்டு ,நரம்புகளில்ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும் .


சட்டையில்இறுக்கமான காலர் பட்டனைப்போட்டுக் கொள்ளுதல் ,டைஅணிதல் போன்றவற்றால் கண்ணும்மூளையும் பாதிக்கப்படுவதுடன் ,அடிக்கடிதலைவலியும் மயக்கமும் உண்டாகும் .பெல்ட்அணிந்து கொண்டு அளவிற்குஅதிகமான உணவினை எடுத்துக்கொண்டால் ,வயிற்றுப்பகுதிஇறுக்கப்பட்டு ,இரைப்பையின்செயல்திறனைப் பாதித்து ,நெஞ்சுஎரிச்சலையும் ,அசிடிட்டியையும்உண்டாகிச் செரிமானத்தைத்தடை செய்யும் .அதோடு ,இறுக்கமானசாக்ஸ் அணிவதால் ,நடப்பதற்கேசிரமப்பட வேண்டியிருக்கும் .காலில்உள்ள இரத்தக்குழாய்கள்அழுத்திக் கால் வீக்கத்தைஉண்டுபண்ணும் .அதிலும் ,குறிப்பாகநீரிழிவு நோய் உள்ளவர்கள்எப்போதும் ,தளர்வானஆடைகளையே அணிய வேண்டும் .

இணையதளத்திலிருந்து ...சாந்திப்பிரியன் ,திருச்சி .




புரதானபைபிள் !



துருக்கி : துருக்கிஅரசால் கடந்த 13நூற்றாண்டுகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த1500ஆண்டுகாலபழமையான பைபிள் பிரதி பொதுமக்களின்பார்வைக்கு வர இருக்கிறது.2000- ஆம்ஆண்டு சுங்கச் சோதனையின்போது 1500ஆண்டுகள்பழமையான பைபிள் பிரதியொன்றைத்துருக்கி காவல்துறையினர்கைப்பற்றினர் .தங்கஎழுத்துக்களால் எழுதப்பட்டஅப்பிரதி ,ஏசுவின்தாய் மொழியான அராமிக் மொழியில்எழுதப்பட்டுள்ளது .


சுமார்14மில்லியன்யூரோ மதிப்பிடப்பட்டுள்ளஇந்தப் பழமையான பைபிள்பிரதியில் ,தமக்குப்பின்னர் முஹம்மது என்ற தூதர்உலகிற்கு வருவார் என ஏசுபோதித்ததான விபரம் தெளிவாகக்காணப்படுவதாக கூறப்படுகிறது .


பர்னபாஸ்சுவிசேஷம் எனக் கருதப்படும்இப்பழமையான பிரதியினைப்பார்வையிட போப் பெனடிக்ட்ஆர்வம் காட்டியுள்ளார்
.இதனைத்தொடர்ந்து கடந்த 13நூற்றாண்டுகளாகபாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தஇப்பிரதியினை அங்காராஅருங்காட்சியகத்துக்குத்துருக்கி அரசு கைமாற்றியுள்ளது .


மிகவிரைவில் பொதுமக்களின்பார்வைக்கு இப்பழைய பைபிள்பிரதி வரும் என எதிர்பர்க்கப்படுகிறது .அவ்வாறுவரும்போது ,முஹம்மதுநபியின் வருகை குறித்து அதில்ஏசு தெரிவித்திருந்தததாகக்கூறப்படும் செய்தி உண்மையாகஇருக்கும் பட்சத்தில் உலகில்மத நம்பிக்கையாளர்களிடையேஅது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்எனக் கருதப்படுகிறது .


 இணையத்திலிருந்து ...