• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai         »     2014     »     Mar2014     »     அகிலநாதர் அற்புதங்கள்


அகிலநாதர் அற்புதங்கள்
ஆங்கிலமூலம் :எம் .சித்தீக்குமுஸ்

தமிழில் :டி . மகதும்ஜான் எம் . . பி . எட் .முதல்வர்மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆயாஸீன் அறபுக் கல்லூரி ,திருச்சி .



பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய மிகப்பெரியமுஃஜிஸாத் ( அற்புதம் )திருக்குர்ஆன்தான் . அனைத்துகவிஞர்களும் இலக்கியவாதிகளும்அதன் கவிதை நடையையும் ,பொருள்சுவையையும் வெகுவாகப்பாராட்டுகிறார்கள் .அந்தஆயத்துக்களைப் போன்றஆச்சரியமூட்டும் வசனங்களைஅவர்களால் உருவாக்க முடியவில்லை .அதனுடையசொல் வன்மையும் ,நடைஅழகும் சாதாரண மனிதர்களைப்போல் அல்ல .ஏதோஒரு வார்த்தையைச் சேர்த்தாலோ ,நீக்கினாலோஅதன் அமைப்பு அழகு குறையும் ,பொருள்மாறுபடும் .அதில்ஒரு வார்த்தையை நீக்குவதற்குசெய்த முயற்சியும் வீணாகிவிட்டது .அதனுடையகவிதை நடையும் பிற அரேபியக்கவிஞர்களுடையது போன்றதுஅல்ல . அதுநடந்த நடக்கின்ற நிகழ்ச்சிகளைப்பற்றி அறிவிக்கின்றது .நீங்கள்அதைப் படித்தாலும் ,கேட்டாலும்இன்னும் படிக்க வேண்டும்அல்லது கேட்க வேண்டும் என்றஊக்க உணர்வு ஏற்படும் .


நீங்கள்சாதாரணமாக களைப்பாக இருந்தாலும்அலுப்புத் தோன்றாது
.திருக்குர்ஆனைஓதுவதோ ஓதுவதைக் கேட்பதோமனச்சோர்வை நீக்குகிறதுஎன்பது பல நிகழ்ச்சிகளின்மூலமாக அனுபவப்பட்ட உண்மை .பார்த்துஓதுவதாலோ ஓதுவதைக் கேட்பதாலோஉண்டாகக்கூடிய ஒருவகை அச்சம்அல்லது திடுக்கம் காரணமாகசிலர் இறந்தும் இருக்கின்றார்கள் .இதுஎப்போதோ நடக்கும் சம்பவமில்லை .மன்னிக்காதபகையுணர்வு கொண்டவர் கூடசாந்த சொரூபியாகி விடுவார் .


திருக்குர்ஆனைஓதினாலோ அல்லது கேட்டாலோ
.மேலும்ஈமான்தாரி ஆகிவிடுவார்கள் .இஸ்லாமியப்பெயரிலே உள்ள மாற்றுக்கருத்தாளர்கள் .வேடதாரிகள்திருக்குர்ஆனின் புனிதத்தன்மையை நீக்க ,மாற்ற ,தரம்தாழ்த்த செய்த முயற்சிகளெல்லாம்பயனற்றதாகி விட்டன .பரிசோதனைமூலம் கிடைக்க முடியாத அறிவியல்உண்மைகள் ,அழகியஅறநெறிக் கொள்கைகள் ,மனிதன்உயர்நிலை அடைவதற்கான வழிமுறைகள்,இம்மையிலும்மறுமையிலும் மகிழ்வு தரும்நற்றன்மை ,ஆதிபடைப்புகள் ( மற்றும்அழிந்த இனங்கள் )மனிதன்எவற்றிலிருந்தெல்லாம் பயன்அனுபவிக்கலாம் ;மனிதனுக்குதீங்கு விளைவிப்பன என்பவைபோன்ற அனைத்து விபரங்களும்வெளிப்படையாகவோ ,சூசகமாகவோதிருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன .


சூசகமாகசொல்லப்பட்டவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய மக்களஇருக்கிறார்கள்
.தோரா ,பைபிள் ,ஜபூர்இவற்றின் வெளிப்படையான மற்றும்மறைவான கருத்துகளை உருக்கொண்டதே திருக்குர்ஆன் ஆகும் .திருக்குர்ஆன்தெரிவிக்கும் அனைத்துவிபரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கேபுரியும் .அதில்பெரும்பாலானவற்றை தன்னுடையஹபீபாகிய ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குத்தெரியப்படுத்தினான் .ஹள்ரத்அலீ ( ரலி )அவர்களும்அவற்றின் பெரும்பகுதி எங்களுக்குவிளங்கும் எனக் கூறியுள்ளார்கள் .குர்ஆனைஓதுவது என்பது இறை நமக்குக்கொடுத்த பெரும் பாக்கியம் .அல்லாஹுதஆலா பெருமானாரின் உம்மத்தாரானநமக்கு பெருங்கிருபைசெய்திருக்கிறான் .மலக்குகளுக்குஇந்த பாக்கியம் கிடையாது .இந்தக்காரணத்தால்தான் மக்கள் எங்கேகுர்ஆன் ஓதுகிறார்களோ அங்கேமலக்குகள் கூடி அதைக்கேட்கிறார்கள் .தஃப்ஸீர்எனும் விளக்கங்கள் அனைத்தும்திருக்குர்ஆனில் உள்ளவிபரங்களில் ஒரு சிறு பகுதியையேவிளக்குகின்றன .நியாயத்தீர்ப்பு நாளிலே ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரிலேஏறிதிருக்குர்ஆனை ஓதுவார்கள் .யார்அதைக் கவனிக்கிறார்களோ அவர்கள்பூரணமாக விளங்கிக் கொள்வார்கள் .


பிரபஞ்சம்முழுவதும் அறிந்ததும்பெருமானாரின் சிறப்புக்குரியதுமானஅற்புதங்களில் ஒன்று அவர்கள்சந்திரனை இரண்டாகப் பிளந்தது .வேறுஎந்த நபியும் இந்த அருள்பெறவில்லை .பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வயது அப்போது52. ஒருநாள் மக்காவில் ஈமானற்ற குறைஷித் தலைவர்கள் ரசூலுல்லாஹ்விடம்வந்து நீங்கள் உண்மையான நபியாகஇருந்தால் சந்திரனை இரண்டுதுண்டுகளாகப் பிளந்துகாட்டுங்களேன் என அனைவரும்சவால் விட்டார்கள் .குறிப்பாகதங்களது உற்றார் உறவினர்ஈமான் கொண்டு விடுவார்கள்என்ற உணர்வில் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இருகரம் உயர்த்திஇறைஞ்சினார்கள் .அல்லாஹ்அவர்களின் இறைஞ்சுதலை ஏற்றான் ;சந்திரன்இரண்டாகப் பிளந்தது .ஒருபகுதி நிலவு குன்றின் மீதும் ,மற்றொருபகுதி வேறொரு குன்றின் மீதும்தெரிந்தது .நிராகரிப்பவர்கள்முஹம்மது தந்திரம் செய்கிறார்என்று கூறி அவர்கள் நிராகரிப்பிலேயேநிலை நின்றார்கள் .