• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai         »     2014     »     Mar2014     »     நபிநாதரை சந்திப்போம்


நபிநாதரை சந்திப்போம் !
முஹம்மதுஉமர் கையாம் ஹக்கிய்யுல்காதிரிய்

மாணவர்மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆயாஸீன் அறபுக்கல்லூரி –திருச்சி



ஹஜ்உம்ராவிற்கு செல்லும்போதுசிலர் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத்செய்யத் ( தரிசிக்கத் )தேவையில்லைஎனக் கூறிக் கொண்டு திரிகின்றனர் .அவர்கள்கூறும் குருட்டு ஆதாரம் பாதிஹதீஸை மட்டும் எடுத்து மீதிபாதி ஹதீஸை வார்த்தையைப்பார்ப்பதற்கு கண் குருடாகிவிட்டது .மேற்கூறப்பட்டநஹைதுகும் அன் ஜியாரதில்குபூரி நான் உங்களை ஜியாரத்செய்வதை ( முன்னர் )தடுத்திருந்தேன்எனவே ( இப்போது )நீங்கள்மண்ணறைகளை ஜியாரத் செய்துகொள்ளுங்கள் என்று பொருள் .சிலஅதிமேதாவிகள் ஜியாரத் செய்வதைத்தடுக்க பல முயற்சிகள் எடுத்தும்வீணானது எனத் தெரிந்து இறுதியாகநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்( நவூதுபில்லாஹ் )என்றபொய்யைக் கூறுகின்றனர் .ரஸூலுல்லாஹ்வைஜியாரத் செய்யத் தடை விதித்துஅவர்கள் உயிருடனில்லை .நமதுஅழைப்பிற்கு பதிலுரைக்கமாட்டார்கள் .அதுஅவர்களால் முடியாது என்றும்கூறுகின்றனர் .ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்உயிருடனிருப்பதற்கு பலஆதாரங்கள் இருக்கின்றன .அவற்றில்சில ....


நபிமார்கள்அவர்களின் ரவ்ளாக்களில்உயிருடனிருக்கிறார்கள்( இப்னுமாஜா )

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியிருக்கிறார்கள் :

இறைவன்பூமிக்கு நபிமார்களின் உடல்களைஉண்பதை ஹராம் ( தடுத்து )ஆக்கியுள்ளான் .இன்னும்நபிமார்கள் உயிருடன் உணவுஅளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

( இப்னுமாஜா ).


இதுபோன்ற ஹதீஸ்கள் இருக்கின்றன .எனவேநமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்கள் .எனவேஅவர்களை நாம் ஜியாரத் செய்வதுநம் மீது கட்டாயக்கடமையாகும் .கீழ்க்காணும்ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன .


1.யார்எனது ரவ்ழாவை தரிசித்தாரோஅவருக்கு எனது பரிந்துரை( ஷஃபாஅத் )வாஜிபாகிவிடும் .

2.யார்என் மறைவிற்குப் பின் என்னைதரிசிக்கிறாரோ ,நிச்சயமாகஅவர் என்னை உயிருடன் சந்தித்தவராகிவிட்டார் .( தாரகுத்னீ, இப்னுஅஸாகிர் )

3.யார்என்னை ஜியாரத் செய்வதற்காகஎன் ரவ்ழாவிற்கு வந்துசேர்ந்தால் கியாமத் நாளில்அவருக்காக நான் மன்றாடுவேன் .( லுஅஃபா3/457)

4. யார்எனது ரவ்லாவை ஜியாரத்செய்யவில்லையோ அவர் என்னைவெறுத்தவராகிவிட்டார் .( துர்ரதுஸ்ஸமீனா )

5. யார்ஒருவர் ஹஜ் செய்து என்னைஜியாரத் செய்யவில்லையோ அவர்என்னை வெறுத்தவராகி விட்டார் .( இப்னுஅதீ எனவேநாம் அனைவரும் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின்ரவ்ளாவை தரிசிக்கக்கடமைப்பட்டிருக்கிறோம் .எனவேநமக்கு அல்லாஹ் அவர்களைத்தரிசிக்கும் பாக்கியத்தைத்தந்தருள்வானாக .ஆமீன் .