ஜமாலிய்யா தோட்டத்தில்
கலிமத்துத்தய்யிபா
லாயிலாஹ இல்லள்ளாஹுவின் பொருள்: நானும்சர்வமும் அல்லாஹுவாயிருக்கும்; முஹம்மதுர்ரஸூலுள்ளாஹி என்பதன்பொருள்;முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹுவின் ஒளிவென்றும்தோற்றமென்றும் அல்லாஹுவுடையசுயமென்றும் சொல்லப்படும். இதனைஒப்புக்கொள்வதுதான் சுத்தஈமானாகும். இதற்கு இல்முல்யகீன் என்றும்நிர்ணய அறிவு என்றும் இந்தவிசுவாசம் மட்டும் உள்ளோரைமுஃமின் எனவும் முஸ்லிம்எனவும் அழைக்கப்படும். மேலும் இவ்வாறுவிசுவாசிப்பதுடன் தன்னையும்சகல வஸ்துகளையும் அல்லாஹுவாயிருக்குமெனக்காண்பதே இஸ்லாம் எனவும்இன்னும் கேட்டறிந்ததற்கொப்பப்பார்த்து வருவது அல்லதுகாண்பதே ஐனுல் யகீன் அல்லதுநிர்ணயமான பார்வை எனவும்அவ்வாறு கண்டதை அநுபவிப்பதேஹக்குல் யகீன் அல்லதுநிர்ணயமான அநுபவம் எனவும்சொல்லப்படும் .
தியாகம்என்பது என்ன ? தியாகங்களில்முக்கியமானது எது ?
உன்உடல் உயிர்அனைத்தையும் இறைவனுக்காகத்தியாகஞ் செய்வதே தியாகம்அனைத்திலும் மிகவும் முக்கியமானது .அதாவது :நீஉன்னை இவ்வளவு தான் எனமட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளாதே .அஃதுஉன்னை மட்டம் தட்டிவிடும் .உன்உடலில் உள்ள சக்திப் பொருள்களெல்லாம்எங்கும் எல்லாவற்றிலும்உள்ளன .அவ்வாறுஉள்ளமையால் எல்லாவற்றுடனும்தொடர்புள்ளவன்என்பதை உணர்ந்து கொள் .உதாரணமாக :உன்உடலிலுள்ள நீர் ஆவியாகிமற்றெல்லா ஆவிகளுடனும் கலந்துமேகமாகி மழையாய்ப் பொழிகிறது .அதனைநீயும் அருந்துகிறாய் .ஏனையோரும்அருந்துகின்றனர் .மற்றவைகளும்அதனை உபயோகிக்கின்றன .நீஇதனை அறியாவிட்டாலும் இவ்வாறானதொடர்புகள் உன்னை மற்றவர்களுடன்ஒன்றுபடுத்துகின்றன .இப்படியேசிந்தித்துப் பார் .அப்போதுநீ மற்றப் பொருள்களுடன் கலந்துபெரும் தியாகி என்ற உள்ளமைக்குஆளாக அந்தப் பேருண்மை உன்னைஆட் கொள்கின்றது .பேருண்மையாம்அப்பரம் பொருள் உன்னை ஆட்கொள்ள நீ நடப்பதே பேரருந்தியாகமாகும் .
ஹகாயிகுஸ்ஸஃபா-நூலிருந்து ...)