சங்கைமிகுஇமாம் ஷாஃபிஈ ( ரஹ் )
அறபுத்தமிழில் :மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில்மதாஹிப்
அழகுதமிழில் :கிப்லாஹள்ரத் ,திருச்சி .
கண்ணியத்திற்குரியகலீபா பெருந்தகைகள் குறித்துஇமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்கள்கீழ்க்காணும் பைத்தை ( அரபுப்பாடலை ) அடிக்கடிக்கூறுவார்கள் .
இதாநஹ்னு ஃபள்ளல்னா அலிய்யன்ஃஇன்னனா ரவாஃபிளுனா பித்தஃப்ளீலிஇன்த தவில் ஜஹ்லி ,வஃபளுலஅபீபக்ரின் இத மா தகர்துஹூருமீது பிநுஸ்பின் இன்ததிக்ரிய லில் ஃபளுலி ஃபலாஸில்து தாஃபளுலின் வநுஸ்பின்கிலைஹிமா பிஹிப்பிஹிமா ஹத்தாஉவஸ்ஸத ஃபிர்ரம்லி
ஹள்ரத்அலீ ரலியல்லாஹூ அன்ஹு அவர்களைக்குறித்து நாம் சிறப்பித்துக்கூறுவோமேயானால் அறிவீனமானவர்கள்( கவாரிஜ்கள் )நம்மைரவாஃபிளுகள் என்கிறார்கள் .
ஹள்ரத்அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹூஅவர்களைக் குறித்து நாம்சிறப்பித்துக் கூறுவோமேயானால்ரவாபிள்கள் நம்மைச் சங்கடப்படுத்தநாடுகிறார்கள் !
எனினும்நான் மரணித்து அடக்கம்செய்யப்படும் வரை அவ்விருவரையும்நான் சிறப்பித்து நேசித்துப்பாடிக் கொண்டே இருப்பேன் !
அதனால்வரும் தங்கடத்தையும் ,நெருக்கடியையும்நான் ஏற்றுக் கொள்வேன்
( அஞ்சிடேன் !)
ஹள்ரத்அலீ ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின்அதி உன்னத சிறப்புகள் யாவை ?எனஒருமுறை வினவப்பட்டது ! அதற்குஇமாம் ஷாபிஈ ( ரஹ் )கூறினார்கள் :
ஹள்ரத்அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ,
1. இவ்வுலகைவெறுக்கக் கூடியவர்களாகஇருந்தார்கள் .
2. அறிவிற்சிறந்தவராக இருந்தார்கள் .
3. சுத்தரத் தன்மையுடையவராக இருந்தார்கள் .
4. நற்குணங்கள்பெற்ற பரிசுத்தமானவராகஇருந்தார்கள் .
( மற்றுமொருகலீபாவைப் பற்றி – இமாம் ஷாபிஈ( ரஹ் )அவர்கள்கூறிய பரபரப்பான தகவல்கள் ...இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் ...)