இரட்டைக்கடமை
“என்னெப்பெத்தவங்களெ நாம் தான் கடைசிவரை கண் கலங்காமப் பாத்துக்கணும் ...பாவம்அவங்களுக்கும் வயசாகிப்போச்சு ... இதுஎன்னோட கடமை .அவங்கஎன்மேலே உசிரையே வச்சுருக்காங்க ...”எனகணவன் தன் புது மனைவியிடம்சொல்ல “ பெத்தவங்களஅப்படியெல்லாம் பாத்துக்கிடனுங்கிறதுமகனுக்கு மட்டுந்தான் .எனக்குஒரு தனி வீட்டு பாத்து வச்சுட்டுஉங்க அத்தா அம்மாளை நீங்கதினம்தினம் போய் வந்துபாத்துக்கங்க ...ஆனால்என்ன அவங்களோடு சேர்ந்திருக்கனும் ;அவங்களுக்குபணிவிடை செய்யணும்னு மட்டும்சொல்லாதீங்க .நான்ஒண்ணும் சம்பளம் இல்லாதவேலைக்காரி இல்ல .உங்களப்பெத்தவங்களுக்கும் பொங்கிஆக்கிப் போட்டு சீராட்ட நான்ஒண்ணும் சமையல்காரி இல்லை ...எனக்குண்டுஒரு வாழ்க்கை இருக்கு .நான்நிம்மதியா எம் புருஷன் புள்ளைகள்என் வீடுண்ணு தனியா உங்களோடவாழத்தான் ஆசைப்படுகிறேன் ”என்றாள்சட்டென்று .
மனைவியின்மாறுபட்ட கருத்தைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த கணவன்“ அப்புடின்னா ?வயசானகாலத்திலே பெத்தவங்களப் பேணிபாதுகாக்கணும் ...சின்னவயசுலே அவுங்க எப்படி என்மேலே பாசம் காட்டி வளர்த்தாங்களோஅதுபோல் அல்லது அதைவிடவும்அதிகமா பெத்தவங்கள நேசிச்சுநேச பாசத்தோட நடத்தணுங்கிறஅர்த்தத்திலே அல்லாஹ் குர்ஆன்லசொன்னதெல்லாம் பொய்ங்கிறயா ?”என்றுநிதானமாக பதில் கேள்விகேட்கிறான் கணவன் .
மனைவியின்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவாதத்தை அவளது அறியாமை என்பதா ?அவளைப்பெற்றவர்களின் வளர்ப்பில்மார்க்க அறிவு போதிய அளவுஇல்லாமை என்பதா ?ஏழை ,பணக்காரன் ,கிராமம் ,நகரம் ...என்றவித்தியாசமில்லாமல் வீட்டுக்குவீடு இன்று இத்தகைய வாக்குவாதங்களும் ,குழப்பங்களும்ஏற்படுவதற்குக் காரணம் ,இதன்அடிப்படைத் தத்துவத்தைவிளங்கிக் கொள்ளும் அளவுக்குமார்க்க அறிவு இல்லாமல்இருப்பதே !சிறுஅளவில் ,சுருக்கமாகஎனக்குத் தெரிந்ததை எழுதமேற்கண்ட கணவன் -மனைவிசம்பாஷணையே காரணமாக இருந்தது .
“மனைவிஎன்பவள் கணவனின் வீட்டிற்கும் ,குழந்தைகளுக்கும்பொறுப்பாளி .மறுமையில்அவை குறித்து விசாரிக்கப்படுவாள் ”என்கிறதுநாயக மணிமொழி ( புகாரி2554). இங்குகணவனின் வீடு என்பது நான்குசுவர்களும் ,ஜன்னல் ,கதவுள்ளகட்டடமல்ல ...அவனுடையபெற்றோர் ,உடன்பிறப்புக்கள் ,அவன்குழந்தைகள் அத்தனையையும்உள்ளடக்கியது தான் வீடு .அந்தவீட்டுக்கு மருமகளாக வரும்பெண்ணுக்கு கணவனைப் போன்றேஅவனைப் பெற்றவர்களையும்பராமரிக்கும் கடமை உண்டு .இதனைஇஸ்லாமிய அடிப்படையில்பாமரரும் புரியும் விதமாகமிக அழகாக விளக்கம் எழுதியிருக்கிறார்மதிப்பிற்குரிய சகோதரர்வாணியம்பாடி டாக்டர் .ஜாஃபர்சாதிக் . அவரின்சமீபத்திய நூலில் ஒரு சோற்றுப்பதமாக சொல்வதாயிருந்தால்“ ஒவ்வொருதிருமணமான பெண்ணும் கணவனோடுசேர்ந்து வாழ வேண்டியிருப்பதால்புகுந்த வீட்டுப் பெற்றோரு( மாமனார்- மாமியார் ) டன்தான் கடைசி வரை நிரந்தரமாகவாழும் பொறுப்பளிக்கப்படுகிறாள் .
கணவன்தன் பெற்றோருக்கு பணிவிடைசெய்யும் கடமை இருப்பதால்கணவனுக்குக் கீழ்ப்படிவதற்காகவந்த அந்தப் பெண் அவனதுபெற்றோருக்கு பணிவிடை செய்வதில்இரட்டைக் கடமை யைப் பெறுகின்றாள் .
எனவேஒவ்வொரு பெண்ணுக்கும் புகுந்தவீட்டுப் பெற்றோர்தான்உண்மையான பெற்றோர் ஆகின்றனர் .இதுவேஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும் .”( பக்கம்44-45)
பெற்றவர்களைமட்டுமின்றி உடன் பிறந்தவர்களுக்கும்பணிவிடை செய்ய வேண்டும் என்பதைநபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின்தோழர் ஜாபிர் பின் அப்துல்லாஹ்( ரலி )அவர்கள்கூறிய நிகழ்வொன்றில் மூலம்தெரிய வருகிறது .அதாவதுஜாபிர் ( ரலி )அவர்கள்திருமணம் செய்து கொண்டதாகநபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம்கூறிய போது ,நீகன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா ...அல்லதுமணந்து வாழ்ந்த அனுபவமுள்ளபெண்ணையா ? என்று விசாரித்தார்கள் .அதற்கு ,“ சிறுவயது சகோதரிகள் இருக்கும்நிலையில் உஹதுப் போரில்தகப்பனார் இறந்துவிட்டார்கள் .அதனால் ,சகோதரிகளுக்குஒழுக்கம் கற்பிக்கவோ ,பராமரிக்கவோஇயலாதபடி போகலாம் சிறுவயதுப்பெண்ணை மணந்து கொண்டால் ”என்றுஅனுபவமுள்ள பெண்ணை மணந்துகொண்டதாக பதிலளித்தார்கள்( புகாரி2967) கணவனின்சகோதரிகளை கவனித்து பராமரித்துஆளாக்குவதும் மனைவியின் கடமைஎன்பது இதிலிருந்து புலனாகிறது .
இப்படிஜாபிர் ( ரலி )கூறியபோதுநபியவர்கள் “ சரியானசெயல் ” என்றுஅதனை ஆமோதித்தார்கள் .இதேவிஷயத்தை இன்னொரு ஹதீஸிலும்சற்று விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது .அதாவது ,ஒன்பதுபெண்மக்களை விட்டுவிட்டுதந்தை அப்துல்லாஹ் ( ரலி )உஹதுப்போரில் கொல்லப்பட்டதால் தன்சகோதரிகளைப் போன்ற இன்னொருபக்குவமில்லாத சிறு வயதுப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பவில்லை .அவர்களுக்குதலைவாரிவிட்டு கருத்தாகபராமரித்து வளர்க்கும் ஒருபெண்ணை மணமுடிக்க நினைத்தேஇவ்வாறு செய்ததாகக் கூறினேன் .அதற்குநபியவர்கள் நீர் செய்ததுசரிதான் என்றார்கள் ( புகாரி4052).
இதிலிருந்துகணவனின் வீடு ,சொத்துசுகம் என்னும் போது அவனுடையபராமரிப்பிலிருக்கும்அனைத்தும் அவற்றில் அடக்கம்என்பது அர்த்தமாகிறது .மனைவிதன் கணவனைத் தவிர குடும்பத்தில்மற்றவர்களுக்கு பணிவிடைசெய்வது கட்டாயமில்லைஎன்றிருக்குமானால் ,நீஏன் வேறு வீட்டுப் பெண்ணை( உன்மனைவியாக இருந்தாலும் )உன்சகோதரர்களுக்குத் தலைசீவவும் ,ஒழுக்கம்கற்பிக்கவும் உள்ள வேலைக்காரியாகப்பார்க்கிறாய் ?அதுதவறு என்று கண்டித்திருப்பார்கள் .
கணவனுடையசகோதரிகளைப் பராமரித்துஆளாக்குவது அவளுடைய பொறுப்புஎன்றிருக்கும்போது அவனுடையதாய் தந்தைக்குப் பணிவிடைசெய்வது எவ்வளவு முக்கியம்என்பதை புரிந்து கொள்ளலாம் .
இன்றையகாலக்கட்டத்தில் வசதிபடைத்தவர்கள் உதவிக்கு வேலையாட்களை நியமித்து தன்மேற்பார்வையில் மருமகள்பொறுப் பேற்பதும் அன்புடன்கணவனின் பெற்றோர்களைப்பராமரிப்பதும் நல்லது .அதையெல்லாம்விட்டுவிட்டு கணவன் மட்டுமேபராமரிப்புக் குரியவன் என்றுசொல்லித் தன் கடமையைத் தட்டிக்கழிப்பது சரியல்ல .கணவனின்வயோதிகப் பெற்றோரை உதாசீனப்படுத்திவெளியேற்றிவிட்டு தன் இஷ்டப்படிவாழ திருமறையில் அப்படியுள்ளது .....ஹதீஸில்இப்படி யுள்ளது ...என்றுசட்டம் பேசுவதும் தவறு .மறுமையின்கேள்விக் கோட்பாடு நாளுக்காகபயந்து நடப்பது இன்றைய இளம்பெண்களின் கடமை .வயிற்றில்பத்து மாதங்கள் சுமந்துநெஞ்சோடு அணைத்து பாலூட்டிசீராட்டி வளர்த்து ஒவ்வொருகாலக்கட்டத்திலும் பல இன்னல்களைசகித்து வளர்த்து வாலிபமாக்கியதாய்க்கும் ,பொருள்தேடி குடும்பம் காக்கும்( கல்வியறிவு )வழிவகைகளையும்வகுத்து தக்கதொரு இடத்தில்திருமணமும் செய்வித்து ,ஒழுக்கவிழுமங்களைக் கற்பித்துஆளாக்கிய தந்தைக்கும் கண்ணியம்அளித்துப் பேணும்படி இறைவன்கட்டளையிட்ட தோடில்லாமல்என் இறைவனே !என்னைஇவர்கள் எப்படிகருணையோடும்பாசத்தோடும் வளர்த்தார்களோஅப்படி இவர்கள் மீது கருணையைப்பொழிவாயாக (17:23,27)எனும்பொருள்படி பிரார்த்தித்துவரும்படி இறைமறை அறிவுறுத்துகிறது .
மேற்கண்டஇந்தப் பிரார்த்தனை வசனங்களைஓரிரு நிமிடங்களாவது ஒவ்வொருபிள்ளையும் கருத்தூன்றிசிந்தித்துச் செயலாற்றினால் ,வயோதிகநிலையில் பெற்றோர் தனிமையில்ஆதரவின்றி உழலும் அவல நிலைக்குதள்ளப்படமாட்டார்கள் .இன்று !பெண்கள்மனம் வைத்தால் மட்டுமே இன்றையநிலை மாறும் .இளம்பெண்களின் தாய்மார்களுக்குகட்டாயம் இல்லற வாழ்க்கையின்ஷரீஅத் சட்ட திட்டங்கள்தெளிவாக்கப்பட வேண்டும் .தாய்மார்களேதன் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள் .இறைமறைஇறுதித்தூதர் நடைமுறை என்றுஎத்தனையோ விதத்தில் எடுத்துச்சொன்னாலும் புரிந்து நடக்கவிரும்பாதவர்கள் பகுத்தறிவு ,பொதுஅறிவைக் கொண்டு சிந்திக்கலாமே !
பெற்றவர்களைப்பேணிக் காக்க வேண்டும் என்பதுமகனுக்கு மட்டுமே இட்ட கட்டளை ...அதுமருமகளுக்கு அல்ல என்பதைநடைமுறையில் செயல்படுத்தமகன் இறங்கிவிட்டால் அவன்எப்படி வெளிவேலைகளுக்குச்சென்று ஊர் ,தேசம்என்று போய் சம்பாதித்து அவள்விரும்பும் வாழ்க்கையைத்தர முடியும் ?
வெளிவேலைக்குஅவன் ; வீட்டுவேளைக்கு அவள் ;எனும்பட்சத்தில் பொருள் தேடிஉழைக்கும் பணி அவனைச்சார்ந்திருப்பதால் அவனுடையகடமையை அதாவது அவனுடைய பாசநேசத்தோடு பேணிக் காப்பதைஅவனுடைய துணைவி ஏற்றுக்கொள்வது மறைமுகமாக கட்டாயமாகிறது .இப்படிமறைவில் இருக்கும் தத்துவத்தைசெயல் படுத்துவதில் அவள்மூன்று விதங்களில் பயனடைகிறாள் .ஒன்றுகணவனுடைய அன்பும் அரவணைப்பும்அபரிமிதமாக தொடர்ந்துகிடைக்கிறது .இரண்டாவது வயதானவர்களைபராமரிக்கும் நன்மை போனஸாகக்கிடைக்கிறது .மூன்றாவதாககணவன் வெளிவேலை என்று நாட்கணக்கில்மாதக் கணக்கில் ,ஏன்வருடக் கணக்கில் போய்விடும்போது அவளுக்கும் ,அவள்பெற்ற சின்னஞ்சிறுசுகளுக்கும் ,வீட்டுப்பெரியவர்கள் பாதுகாப்பாய்அமைந்து விடுவது .இந்தமூன்றாவது பயனைச் சொல்லும்போது சீனப் பழமொழியொன்றுஞாபகத்துக்கு வருகிறது .ஒருவீட்டில் பெரியவர்கள் இருப்பதுபெரும் பொக்கிஷம் ;அப்படிஇல்லாதவர்கள் இரவல் பெற்றாவதுவைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அது .அதிகப்படிப்பறிவு இல்லாத காலத்தில்கூட நம் பெண்கள் கணவனைப்பெற்றவர்களை ,தங்களைப்பெற்றவர்களைப் போல் உள்ளன்போடுபேணி பணிவிடை செய்து அவர்களின்நல்வாக்கையும் ஆசீர்வாதத்தையும்பெற்று நன்மையடைந்திருக்கிறார்கள் .வேண்டாதசர்ச்சைகளில் தங்கள் நேரத்தையும்சக்தியையும் வீணடிக்காமல் .
இவர்களைப்போலல்லாமல் பெருங்கல்விபெற்றுயர்ந்தவர்கள் இந்தவாழ்க்கைத் தத்துவங்களைஅறிவுப் பூர்வமாக சிந்திக்கமறுக்கிறார்கள் .மேம்புல்மேய்ந்தார் போல சட்டம் பேசிதார்மிகமாக ஏற்றுக் கெள்ளவேண்டிய கடமைகளை தட்டிக்கழிப்பதிலேயேகுறியாயிருக்கிறர்கள் .இவர்கள்இப்படி இருப்பதற்கு மாறிவரும்சூழ்நிலை ,சமூகசீர்கேடுகள் என்று காரணங்கள்பல இருந்தும் இவர்களில்பூதாகரமாக உருவெடுத்து வரும்சுயநலம் தான் முக்கியமானது .இதைக்கொழுந்து விட்டு எரிய வைத்துவைத்து குளிர் காய்பவர்கள்வாலறுந்த நரிகளாய்த் திரியும்இவர்களின் தோழிமாரும் ,பின்விளைவுகளை யோசித்துப்பார்க்காமல் பெற்றோர்கள்அள்ளிவிடும் அறிவுரைகளும்தான் ! சொரிந்தால்சுகமாகத்தானிருக்கும். சுகமாயிருக்கிறது என்று தொடர்ந்துசொரிந்தால் புண்ணாகித்தானேபோகும் !
அடிப்படையில்தன்னிச்சையாக கட்டுப்பாடின்றிவாழ விரும்பும் போக்குத்தான்இவர்களின் சுயநலத்துக்கானகாரணம் . இந்தவாழ்க்கையை அடைய அவள் பலயுக்திகளைக் கையாளுகிறாள் .இதில்பரவலாகக் கையாளுவது தனிக்குடித்தனம் வைக்க கணவனோடுநடத்தும் போராட்டம் தான் .அவனுடையநிறைவேற்றப்படாத பொறுப்புகளைஎல்லாம் கருத்திற் கொள்ளாதுதிருமணமான மறுதினத்திலிருந்தேஇவர்கள் கையாளும் முறைகள்வேடிக்கையாகவும் வியப்பாகவும்சில சமயங்களில் அதிர்ச்சியாகவும்இருக்கும் என்று பலர் தங்கள்அனுபவத்தில் கூறியதையும் ,சமூகஆர்வலர்களின் படைப்புகளிலிருந்தும் தெரியவரும்போதுநம்ப முடியாமல் இருக்கும் .இதைவிளக்குவதற்கு முன் இக்காலஇளம் பெண்கள் விரும்பும்சுதந்திரம் என்ன என்பதைக்கோடிட்டுக் காட்டினால் தான்ஏன் இப்படி பல்வேறு விரும்பத்தகாதயுக்திகளை இவர்கள் பிரயோகிக்கிறார்கள்என்பதைப் புரிய முடியும் .தன்னிச்சையாகஉண்டு , உடுத்தி ,உறங்கிஎந்தக் குறிக்கோளுமில்லாமல்நினைத்த போதெல்லாம் விண்டோஷாப்பிங் ,தோழியர்வீடுகள் ,சினிமாஎன்று அலைந்து வாழ்வதைத்தான்சுதந்திரம் சந்தோஷமான வாழ்க்கைஎன்கிறார்கள் .ஒருவகையில் எந்தக் கட்டுப்பாடுமில்லாதவாழ்க்கை !சிலர்எப்படி வாழ்கிறார்கள் என்றுபார்த்தால் அது எப்படிப்பட்டசுதந்திரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம் .பொழுதுவிடிந்ததிலிருந்து பொழுதடையும்வரை இரவில் அணிந்திருந்தநைட்டியோடு ( உள்ஆடையின்றி )இருப்பார்கள் ...நாள்முழுக்க அலுப்பு சலிப்பின்றிஇண்டர்நெட்டில் அவர்களுடையநெருங்கிய உறவுகள் ,நண்பர்களோடுடெலிகான்பிரன்ஸ் போட்டுகதைத்து மகிழ்வார்கள் .“ ஸ்கைப் ”போட்டுமணிக்கணக்காக போனில் பேசிமகிழ்வார்கள் .இவைபோதா தென்றால் சமூக இணையதளங்கள்ஃபேஸ்புக் ,டுவிட்டர் ...என்றுவேண்டாத பல விஷயங்களையும்தங்களைப் போன்றவர்களோடுவிவாதித்து ( சேட்டிங் )பொழுதைப்போக்குவார்கள் .நாளுக்குஒரு ஹோட்டல் ,தாபாஎன்று கட்டியவனுக்கும் ஏன்பெற்ற பிள்ளைகளுக்கும் கூடதெரியாமல் போய் வர நாக்கைவளர்த்து வைத்திருப்பார்கள் .அசட்டுத்தைரியம் மிஞ்சியவர்களாகசினிமா , கிளப்என்று கிளம்பியவர்களும்இவர்களில் இருக்கிறார்கள் .இப்படிஇவர்கள் கட்டுப்பாடு இல்லாமல்இருக்க விரும்பினால் இதற்குபலியாவது புகுந்த வீட்டுஉறவுகள் ,கண்ணியமானகுடும்ப நட்புகள் .
பிறந்தவீட்டார்க்கு தங்களுடையதன்னிச்சை வாழ்க்கையை மறைக்கபுகுந்த வீட்டாரைப் பற்றிஇல்லாததையும் பொல்லாததையும்சொல்லி வெறுப்படையச் செய்துஅவர்களிடையேயுள்ள உறவையும்உடைத்துவிடத் தயங்கமாட்டார்கள் .பேச்சுவார்த்தை தொடர்பு இருந்தால்இவளைப் பற்றிய விஷயங்கள்பெற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே !இதற்குஅடிப்படைக் காரணம் பெண்சுதந்திரம் என்ற போர்வைக்குள்இவர்கள் மறைந்து கொண்டு வாழநினைக்கும் சுயநலம் தான் !
இப்படியொருவாழ்க்கையை அமைத்துக் கொள்ளஇவர்கள் கையாளும் யுக்திகள்வித்தியாச மானவை .எல்லாவற்றையும்எழுதி மாளாது என்பதால்ஓரிரண்டைச் சொன்னாலே வாசிப்பவர்கள்தங்களுக்கு எற்பட்ட அனுபவங்களைச் சேர்த்துஒரு புதினமே எழுதி விடுவார்கள் .
மகனோடுஒட்டிக் கொண்டிருக்கும்வயதான தாயையும் தந்தையையும்முதலில் வெட்டிவிட நினைக்கும்யுக்தி அனைவருக்கும் தெரிந்தசர்வ சாதாரணமானதும் ,பரவலானதுமாகும் .இதைபிள்ளைகளின் படிப்பு ,விளையாட்டுத்தனம் என்று குறிப்பிட்டுக்காட்டி சாதிப்பார்கள் .பெற்றபிள்ளைகளின் மீது இவளுக்குஇருக்க வேண்டிய கவனக் குறைவுக்கு ,வயதானமாமியார் மாமனார் கொடுக்கிறசெல்லத்தினால் தான் பிள்ளைகள்சரியாகப் படிப்பதில்லை .மதிப்பெண்வாங்குவதில்லை .ஒழுங்கீனமாகஉருவாகிறார்கள் என்று நாளுக்குநாள் கணவனிடம் குறை பாடி ,ஒருநாள்பெரிசுகளே இந்தக் கூற்றைஅறிய வரும் போது மனம் நொந்தவர்களாகதங்களாகவே கிளம்பி விடுகிறார்கள்அந்த வீட்டை விட்டு .ஏதாவதுஒரு சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு !
புகுந்தவீட்டு உறவு ஒட்டுகளை உடைத்தெறியஇவர்கள் கையாளும் யுக்தியும்சற்று வித்தியாசமானது .அக்காள் ,தங்கை ,அண்ணன் ,தம்பிகுடும்பங்கள் வந்து போயிருப்பதால்தான் குடும்பச் செலவுகள்அதிகமாகி தானும் தன் பிள்ளைகளும்வசதியிருந்தும் இல்லாதவர்களைப்போல் வாழ வேண்டியிருக்கிறதுஎன்று கணவனிடம் அடிக்கடிகுறைபாடுவதோடு அவர்கள்சொல்லாதவைகள் ,செய்யாதவைகளை இட்டுக்கட்டி ,கணவனிடம்போட்டுக் கொடுத்து அதனால்ஏற்படும் சண்டை சச்சரவுகளைக்காரணமாக்கி அந்த உறவுகளைஅடியோடு அறுத்து விடுவதில்குறியாயிருக்கிறார்கள் .
இங்குகணவனையே பலியாடாக்கி விடுகிறாள் .இவர்களின்பிறந்த வீட்டாரின் வேண்டாதயோசனைகளுக்கும் ,ஆறுதல்களுக்கும் ,அறிவரைகளுக்கும் பஞ்சம் இருக்காது .எங்கோஎரியும் வீட்டைப் பற்றிஇவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?
எந்தயுக்தியும் பலிக்காத பட்சத்தில்இவர்கள் கையாளும் இன்னொருயுக்தி அசிங்கமானது .இது ,மாமனார்தன் ஒழுக்கத்தைப் பற்றிசந்தேகப் படுகிறார் ...கம்யூட்டர்இண்டர்நெட்டில் உட்கார்ந்தால்ஒரு மாதிரி நினைக்கிறார் .கொழுந்தன்மார்கள்தன்னை வேண்டத்தகாத வகையில்பார்க்கிறார்கள் ,ஜோக்அடிக்கிறார்கள் ...வம்புக்குஇழுக்கிறார்கள் என்பன போன்றகுற்றச்சாட்டுகளை அடுத்தடுத்துஅடுக்கி அவனில் எரிச்சலைபுகைய வைத்து சரியான நேரத்துக்காகக்காத்திருக்கிறார்கள் .மஞ்சள்கண்ணாடி அணிந்த கணவனுக்கும்எப்படியோ இருக்கும் !இந்தவெறி தகப்பனோடும் உடன்பிறந்தவர்களோடும் சில சமயங்களில்வார்த்தை தடித்து முற்றிகைகலப்பிலும் முடிய இரத்தபந்த உறவுகளையே நிரந்தரமாகச்சுத்திகரித்து விடும் !மேற்கண்டவைகற்பனையல்ல .பலவீடுகளில் நடந்த உண்மைச்சம்பவங்கள் .தினசரிகளில்செய்திகளாக வந்தவைகளே !இன்னும்இப்படிப்பட்ட செய்திகள்வந்துகொண்டும் இருக்கின்றன .
சமீபகாலமாக புதுவித யுக்தியொன்றுஎழுதவே அசிங்கமாயுள்ளது .வீட்டுக்குவீடு மாமியார் -மருமகள் ,நாத்தனார்சண்டை சச்சரவுகள் ஏற்படுவதுகாலங்காலமாக உள்ளதுதான் .ஆனால் ,இன்றுகுடும்பத் தலைமை ஸ்தானத்திலுள்ளதகப்பனாருக்கு சமமானமதிப்பிற்குரிய கவுரவஅந்தஸ்திலுள்ளவரை அசிங்கமாகபிறந்த வீட்டில் போயிருந்துபேசுவதும் நெருங்கியவர்கள்மூலம் கேள்விப்படும் தலைமைநபர் மனம் கொதித்து மகன் -மருமகளைதனியாகப் போய்விடுமாறுகூறுவதும் ,முற்றிலுமாகதன் பார்வையிலிருந்து விலக்கிவைப்பதும் அரங்கேறி வருகிறது ,வெற்றிகரமாக !நம்பமுடியாத கணவன் ஆத்திரப்பட்டுஅவளை விசாரித்தாலும் என்ன ?என்னசெய்வீங்க ??தலாக்தானே சொல்லிவிட்டுப்போய்க்கிட்டேயிருங்க என்றுதுணிச்சலாகப் பேசுகிறாள்என்றால் ,மூன்றுகுழந்தைகளின் தாயை கவுரவமானகுடும்பத்தினர் தரக்குறைவானநிலைக்கு இறங்கமாட்டார்கள்என்னும் அசட்டுத் துணிச்சல்தானே ?
அந்தமருமகள் விரும்பியதும் ,திட்டமிட்டதும்குறுக்கீடில்லாத சுதந்திரம்தானே ? குடும்பகவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக ,சாக்கடையில்கல்லை விட்டெறிவானேன் என்றுபெருந்தன்மையாக ஒதுங்கியதை ,தன்வெற்றியாக எண்ணி ,எந்தக்குற்ற உணர்வுமின்றியிருப்பதும்அவளைப் பெற்றவர்கள் எதையும்கண்டு கொள்ளாமலிருப்பதும்நம்ப முடியாத விஷயங்கள் !
தான்ஒரு போஸ்ட் கிராஜூவேட் எனும்திமிரில் இறையச்சமின்றி ,மறுமைகேள்வி கேட்பாடுள்ள நாளைப்பற்றிய பயமின்றி இப்படிப்பட்டஇளம் பெண்கள் பெருகி வருவதுவேதனைக்குரியது .சமுதாயநலம் விரும்பிகள் அவசர காலநடவடிக்கைகளில் இறங்கும்தருணம் இது !ஆவனசெய்வார்களா ?