திருமறைப் பக்கம்
அறியாதமக்கள்
மேலும்நீங்கள் அறியாதவற்றைஅல்லாஹ்விடமிருந்து நான்அறிவேன் ! (8.-7-63)
இந்தவாக்கியம் ஹள்ரத் நூஹ்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களைஏற்றுக் கொள்ளாத தம் சமுதாயமக்களைப் பார்த்துக் கூறியது !
மனிதனின்உறுப்புகள் ஓர் வரையரைக்குஉட்பட்ட சக்தியைப் பெற்றவை .அதிலும்ஒருவர் பெற்ற ஆற்றல் போன்றுஇன்னொருவர் பெற்றிருப்பதில்லை .ஒருவனதுமூளைத்திறன் -சிந்திக்கும்ஆற்றல் -இன்னொருவனுக்குகிடைப்பதில்லை .ஒருகுடும்பத்துப் பிள்ளைகள்நன்கு படிப்பார்கள் .அதேகுடும்பத்து உறவினர் பிள்ளைகள்படிக்கும் திறன் குறைவாகஇருப்பர் .
நண்பர்இருவர் ,படிக்கும்காலத்தில் ஒன்றாக இருந்துபின்னர் கால ஓட்டத்தில்பிரிந்து என்றாவது ஒரு நாள்மீண்டும் சந்திக்கும்போதுஅதிலொருவன் மிகையாற்றல்பெற்றிருந்தால் அடடே அவனாஇவன் ? எனநம்பமுடியாமல் வியந்துபோவதுண்டு .நம்தெருவில் .....நம்வீட்டுக்கு அருகே வாழ்ந்தஒருவர் ...திடீரெனபெரிய மாற்றத்துடன் நம் முன்வந்து நின்றால் நாமும்அப்படித்தான் வியந்து போவோம் .
இதேபோன்றுதான் மக்களோடு மக்களாகவாழ்ந்த இறைத் தூதர்கள்திடீரென ஒரு நாள் இறைவனால்தேர்வு செய்யப்பட்டு ,பிறமக்களுக்குக் கொடுக்கப்படாதஅறிவுகள் கொடுக்கப்பட்டு ,இரகசியங்கள்காட்டப்பட்டு ,தம்மோடுவாழ்ந்த மக்களுக்கே வழிகாட்டுபவர்களாக நியமிக்கப்படும்போது , கூடஇருந்தவர்களால் நம்ப முடிவதில்லை .அப்போதுநபிமார்கள் ,தாம்ஏன் இவ்வாறு பேசுகிறோம் என்பதைநீங்கள்அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்துநான் அறிவேன் ! எனஉணர்த்துகிறார்கள் .
தங்களுக்கும்அவர்களுக்கும் ஏதோ வித்தியாசம்இருக்கிறது ...நாம்அறியாதவற்றை அவர்கள்அறிந்துள்ளார்கள் என ஒப்புக்கொண்டவர்கள் இறையடியார்களாகமாறிவிடுகிறார்கள் .நம்பமுடியாமல்மறுப்பவர்கள் அவர்களின்எதிரியாக மாறி ,அதன்மூலம் இறைவனுக்கே எதிரியாகமாறிப்போகிறார்கள் .
நபிமார்களுக்கு நடந்த இதே கதைதான் இன்றும் தொடர்கிறது . இறைநேசர்களான வலிமார்கள் பிறருக்கு ஏற்படாத அறிவை - அனுபவத்தை- தாங்கள்உணர்ந்து அனுபவித்து மக்களுக்குக் கூறும்போது ஆஹா ! இஃதென்ன புதிய கதையாக இருக்கிறதே ! நம்மோடுநாமாக வாழும் இவர் இறைநேசராம் ... அவ்லியாவாம் ..எனஏகடியம் பேசி வழிகெட்டுப்போகிறார்கள் . வஆதைனாஹுமின்லதுன்னா இல்மா - நம்புறத்திலிருந்து நாமே அவருக்கு அறிவு புகட்டுகிறோம் என இறை மறை கூறும் இரகசியத்தை விளங்கியவர்கள் தமக்கும்அவர்களுக்கும் உள்ள அறிவின் இடைவெளியைப் புரிந்து நேர்வழிபெறுவார்கள் .