• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »     Mar 2014     »     ஹதீஸ்பக்கம்

ஹதீஸ்பக்கம்


சுன்னத்வல் ஜமாஅத்

இஸ்ரவேலர்கள்எழுபத்திரண்டு கூட்டங்களாகப்பிரிந்தார்கள் .எனக்குப்பின் என்னுடைய உம்மத்துகள்எழுபத்து மூன்றாகப் பிரிவார்கள் .அதில்ஒருகூட்டத்தார் மாத்திரம்சுவர்க்கவாசிகள் .மற்றவர்கள்வழி தவறியவர்களாவார்கள் எனநபிகள் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அருளியபோதுஅண்மையில் இருந்த சஹாபாக்கள் ,“யாரசூலல்லாஹ் !!அந்தஒரு கூட்டத்தினர் யார் ?என்பதைஎங்களுக்கு அறிவிக்க வேண்டும்என வேண்டியபோது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ,“ நானும்என்னுடைய சஹாபாக்கள் நடக்கின்றவழியைப் பின்பற்றி நடப்பவர்கள் எனக்கூறினார்கள் .இந்தக்கூட்டத்தினரையே நாம் ஸுன்னத்வல்ஜமாஅத் என்று அழைப்போம் .


சுன்னத்வல் ஜமாஅத் எனும் பெயர் வரக்காரணம் .

ஹிஜ்ரிநான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தஇமாம் அபுல் ஹஸன் அஷ்அரிரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்தமது ஆசிரியர் அபூ அலிய்யில்ஜிப்பாயி என்ற முஃதஸிலி( மாற்றுக்கொள்கைக்காரர் )தலைவருடன்வாதாடி அவருடைய கொள்கைக்கருத்துகளை முறியடித்துவிட்டுசுன்னத் என்னும் நபி வழியையும் ,ஜமாஅத்என்னும் ஸஹாபாக்கள் ,தாபியீன்கள் ,தபஉத்தாபியீன்கள் ,நான்குமத்ஹபுகளின் இமாம்கள் ரலியல்லாஹுஅன்ஹும் ஆகியோரது வழிமுறைகளைபின்பற்றி நடக்கத் தொடங்கினார்கள் .அதற்குப்பின் ஆயிரத்திற்கும் மேலானவருஷங்களாக இமாம் அஷ்அரீரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடையசீடர்களுக்கும் அவர்களுடையகொள்கையை ஏற்றுக் கொண்டஅனைவருக்கும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் என்னும்பெயர் வழங்கப்படலாயிற்று .




சமமாகவா ?


ஒருநாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தஹஜ்ஜுத்( இரவுத்தொழுகை )தொழும்போதுஇளைஞர் ஹள்ரத் இப்னு அப்பாஸ்( ரலி )அவர்கள்பின்னால் தனியே நின்றுதொழுதார்கள் .அண்ணலார்அவரைப் பிடித்து தங்களுக்குச்சமமாக நிறுத்தினார்கள் .அண்ணலார்தொழுகையில் இலயித்து இருந்தபோதுஇப்னு அப்பாஸ் ( ரலி )அவர்கள்மீண்டும் பின்னால் வந்துநின்று கொண்டார்கள் .நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தொழுது முடித்ததும்உன்னை சமமாக நிறுத்தியிருந்தேனே !ஏன்பின்னால் சென்றாய் ?எனக்கடிந்து கொண்டார்கள் .அதற்குஅவர் ...யாரஸூலல்லாஹ் !தங்களுக்குச்சமமாக நின்று தொழ யாருக்குத்தான்முடியும் !?தாங்கள்அல்லாஹ்வின் தூதரல்லவா ?தங்களின்கம்பீரம் என்னைப் பின்னுக்குவரச்செய்துவிட்டது என்றார்கள் .இப்னுஅப்பாஸ் ( ரலி )அவர்களின்பதில் பெருமானாருக்கு மிகவும்பிடித்திருந்தது .எனவேயா அல்லாஹ் !இவருக்குக்கல்வியையும் ஞானத்தையும்அதிகமாக்குவாயாக !எனஅண்ணலார் பிரார்த்தித்தார்கள் .