• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »      2014     »      Mar 2014     »      அமுதமொழிகள்


சங்கைமிகுஷைகுநாயகம்அவர்களின்

அமுதமொழிகள்


சென்னைஅட்வகேட் கலீபா அப்துர்ரவூஃப்ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில்ஆற்றிய அருளுரை



அளவில்லாதஒன்று தான் பரிபூரணம் .அதுஅளவற்றது .உலகத்தைஎடுத்துக் கொண்டால் அதற்கொருமுடிவு உள்ளது .நாங்கள்கொழும்பிலிருந்து புறப்பட்டுஉலகம் முழுவதையும் சுற்றிவர எண்ணிப் புறப்பட்டால்மீண்டும் கொழும்பிலேயே வந்துஇறங்கிவிடலாம் .ஆனால்பிரபஞ்சத்தை சுற்றிவரப்புறப்பட்டு தொடங்கிய இடத்திற்குவந்து சேர முடியுமா எனில்அது முடியாது .இந்தஉலகிலிருந்து புறப்பட்டுப்போய் மீண்டும் இந்த உலகிற்குவந்து சேர முடியாது .ஏன்முடியாது என்றால் Spaceமுழுவதும்அதுதான் .வலதுபக்கம்கையை நீட்டி அந்தப் பக்கம்போனால் அது போய்க் கொண்டேஇருக்கும் .இடதுபக்கம் கையை நீட்டி இந்தப்பக்கம்போனால் அது போய்க் கொண்டேஇருக்கும் .மேலே ,கீழே .....போய்க்கொண்டே இருந்தால் எவ்விதத்தடங்கலுமின்றி போய்க் கொண்டேஇருக்கும் .அதற்கொருமுடிவில்லை .அளவில்லை .இவ்வளவுதான்என்பதில்லை .


விஞ்ஞானிகள்பெருவெடிப்புக் கொள்கை என்றஒன்றைக் கூறி ( பிக்பாங்க்தியரி ),ஏதோவெடித்து அதிலிருந்து பிரபஞ்சம்உண்டாகி விட்டதாகக் கூறுகின்றனர் .நாம்கேட்கிறோம் .வெடித்ததாகக்கூறப்படும் பொருள் வெடிக்கும்நேரத்தில் அது எங்கிருந்தது ?அதற்குப்பிறகுதான் பிரபஞ்சம் வந்ததாகக்கூறுகின்றனர் .அதுபிரபஞ்சத்தில் தானே இருந்திருக்கமுடியும் !விஞ்ஞானிகண்ணை மூடிக் கொண்டுசொல்லியிருப்பார் ( சிரிப்பு )இதுதான்விஞ்ஞானிகளின் முடிவு .பிரபஞ்சத்தில்பிரயாணப்பட்டு அதற்கானஆயத்தத்துடன் அதற்கான வாகனத்தில்போனால் போய்க்கொண்டேதான்இருக்கும் .எப்போதுஎரிபொருள் தீருகின்றதோ அங்கேபிரயாணம் நின்றுபோகும் .ஆனால்பிரபஞ்சம் முடியாது .


நாம்இந்தச் சிறிய பூமியிலிருந்துதான்இவ்விதமெல்லாம் சிந்தனைசெய்து கொண்டுள்ளோம் .பூமிபிரபஞ்சமல்ல .எல்லாக்கோளங்களும் ,எல்லாஅண்டங்களும் அடங்கியதேபிரபஞ்சம் .இன்னும்எத்தனையோ சூரியன்கள் ,சூரியக்குடும்பங்கள் இருப்பதாகச்சொல்கிறார்கள் .நாம்காணவில்லை !பாருங்கள் !அப்படியானால்இந்தப் பிரபஞ்சத்துடைய விரிவுஎவ்வளவு ? ஒரேஒரு சூரியனை நாம் பார்த்துவிட்டுஅதைப்பற்றித்தான்பேசிக்கொண்டிருக்கிறோம் .அதற்குப்பக்கத்தில் உள்ளதைப் பற்றிக்கூடகண்டுபிடிக்க முடியாமல்திண்டாடுகிறார்கள் .அதுவிரிவடைவதில்லை .விரிவாகவேஇருக்கிறது .அதுகுறையாது . குறைவதற்குவழியே இல்லை .விரிவடைந்துகொண்டிருக்கிறது எனவும்சொல்லக்கூடாது .அதுவிரிவடைந்தே இருக்கிறது .யுனிவர்ஸ்என்றால் என்ன வென்று முதலில்நாம் வாசித்துப் பார்க்கவேண்டும் .


அப்போதுஈரோடு அட்வகேட் மஹ்பூப் பாஷாஅவர்கள் , ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மிஃராஜுக்குச் சென்றுஓர் எல்லையில் சந்தித்தார்களல்லவா ?என்றுவினவினார் .அதற்குசங்கைமிகு வாப்பா நாயகம்அவர்கள் .அதுதான்கடைசி எல்லையா ?இல்லை .அதுகடைசி முடிவில்லை .ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எங்கே போனர்கள் ?எங்குஅல்லாஹ்வைக் கண்டார்கள் ?அல்லாஹ்அங்கு ....இருக்கிறான் .ரஸூலுல்லாஹ்இங்கிருந்து .....போனார்கள் .ஸித்ரத்துல்முன்தஹாவில் ஜிப்ரயீல் ( அலை )அவர்கள் ,இதற்குஅப்பால் எனக்கு வர இயலாது ;தாங்கள்தாம் செல்ல வேண்டும் எனக்கூறிவிட்டார்கள் .இப்படியயல்லாம்பேசும் நேரத்தில் அங்கே( வானில் )அல்லாஹ்வைவைத்துக் கொண்டு ,பெருமானார்கஷ்டப்பட்டுப்போய் ,ஜிப்ரயீல்( அலை )அவர்கள்பின் வாங்கிக் கொண்டார்கள்என்றால் ....இதற்கெல்லாம்கருத்து என்ன ?பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பரிபூரணமாகிவிட்டார்கள்என்பதுதான் கருத்து .இத்தனைகதைகளும் – அதற்குத்தான்வந்துள்ளது .


எனவேஅந்த அளவுதான் பிரபஞ்சம்இருக்கிறது என முடிவு கட்டிவிடாதீர்கள் .ரஸூலுல்லாஹ்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் போய் அல்லாஹ்வைசந்தித்த இடத்தில்தான்பிரபஞ்சத்தின் முடிவு இருக்கிறதுஎன்று தீர்மானித்து விடாதீர்கள் .அதுமுடிவின்றி போய்க் கொண்டிருக்கிறது .


ஒரேஓர் அல்லாஹ்தான் !பலஅல்லாஹ் இருந்தால் பல பிரபஞ்சங்கள்வந்திருக்கும் .பிரபஞ்சம்அல்லாதது எதுவுமில்லை .அப்போதுஅட்வகேட் எழுந்து ஒருவர்நடைமுறை வாழ்வில் பரிபூரணமாவதற்கு .....எனவினவத் தொடங்கினார் .அதற்குவாப்பா அவர்கள் .நடைமுறைவாழ்வில் ஒருவர் பரிபூரணமாகிவிட்டார் எனக் கூற முடியாது .ஒருவர்நீண்ட ஜுப்பா ,நீண்டதாடி , பச்சைத்தலைப்பாகை அணிந்து ,நடையும்நல்ல கம்பீரத்தோடு நடக்கிறார்என்பதற்காக அவர் பரிபூரணமாகிவிட்டார்எனக் கூற முடியாது .அவர்எந்த இடத்தில் ( நிலையில் )இருக்கிறாரோ ?யார்அறியமுடியும் ?ஆக ,தேவையானவிஷயம் என்ன வென்றால் நாம்அல்லாஹ்வை அறிந்து அவனில்பரிபூரணம் அடைவதே !ஒருவிஷயத்தைத் தெரிந்தால்தான்பரிபூரணமடைய முடியும் !தேனீரைகுடித்துப் பார்த்தால்தானேஇது தேனீர் எனப் புரியமுடியும் ?அதுபோலஅவர்கள் பரிபூரண மானால்தான்அவர்களுக்குப் புரியும் !


எனவேபிரபஞ்சத்துக்கு ஓர் அளவில்லை .அதனால்அல்லாஹ்வுக்கும் ஓர் அளவில்லை .அல்லாஹ்என எழுதும் எழுத்துக்குமட்டும் ஓர் அளவு இருக்கிறது .ஆனால்அது அல்லாஹ் ஆகாது .எனவேபரிபூரணத்துக்கும் எந்தமுடிவுமில்லை .அல்லாஹ்வுக்கும்எந்த முடிவுமில்லை .அல்லாஹ்வைஇவ்வளவில்தான் சந்திக்கமுடியும் என்பதும் இல்லை .ஆனாலும்பரிபூரணமான அந்த நிலைக்குவந்தபின்தான் சந்திப்புஉண்டாகும் .எனவேபெருமானார் மிஃராஜில் சந்தித்தஇடந்தான் பிரபஞ்சத்தின்முடிவு எனச் சிலர் நினைத்துக்கொண்டிருப்பார்கள் .அப்படிஇல்லை . அதுகதைக்காக பெருமானார் சிலவிஷயங்கள்சொல்லியிருக்கிறார்கள் .அதுஉண்மையிலேயே நடந்ததுதான் .பெருமானாருடையஉடல் போகவில்லை என்றாலும்அவர்களின் ஆத்மா அவ்வளவுவேகமாக சென்றிருக்கிறது .ஆத்மாபோனதாகக்தான் சூஃபியாக்கள்சொல்வார்கள் .அந்தஆத்துமார்த்தம் எப்படியென்றால்உடலோடு போனமாதிரிதான் .உடலோடுபோனால் எப்படியிருக்குமோஅதேபோன்றுதான் ரஸூலுல்லாஹ்மிஃராஜுக்குப் போனார்கள் .ஆத்மாவேஉடலாக - ஆத்மாவைஉடலாகக் கொண்டு போனார்கள் .எனவேஅந்த இடம் முடிவென்றுசொல்லக்கூடாது .ஏனென்றால்அதிலே ஷிர்க்கு வருகிறதுபாருங்கள் !அல்லாஹ்அங்கு இருக்கிறான் .ரஸூலுல்லாஹ்இங்கிருந்து போகிறார்கள் .இப்படியெல்லாம்இரண்டாகப் பேசும்போது ஷிர்க்உண்டாகிவிடும் .பரிபூரணமாகஇருக்கும் ஒருவனை அப்படிப்போய்சந்திக்க முடியுமா ?ஏன் ?தனக்குள்ளேசந்திக்க முடியாதா ?அவன்எங்கும் இருக்கிறான் !அவர்கள்தமக்குள்ளே சந்தித்தார்கள் .அதைஉருவகமான காட்சியாகசொல்லியிருக்கிறார்கள் .


அவன்எங்களுடனேயே இருக்கும் போதுஅவனை ஏன் அங்கு போய் சந்திக்கவேண்டும் ?இங்கேஅருகிலேயே ஊசிவாங்க இடமிருக்கிறது .அதைவாங்க ஈரோட்டுக்குப் போகவேண்டுமா ?அல்லாஹ்அருகிலேயே நெருங்கியே -கலந்தேஇருக்கிறான் .நெருங்கியிருக்கிறான்என்றாலும் அருகிலே ...நெருங்கி ...என்றுபொருள்படும் .ஆனால்கலந்து இருக்கிறான் !எப்படிகலந்து இருக்கிறான் .ஐஸும்நீரும்போல கலந்து இருக்கிறான் .அப்படியிருக்கும்போதுரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவ்வளவுதூரம் போக வேண்டுமா ?


( அமுதம்பொழியும் )





சிலர்அடிக்கடி வீடுகளை மாற்றிக்கொள்வதுண்டு .வீடுராசி இல்லை எனக் காரணமும்கூறிக் கொள்வார்கள் .இதனைநாம் ஏற்றுக் கொள்ள முடியாது .நல்லவீடும் - நல்லவாகனமும் -நல்லமனைவியும் குடும்பத்திற்குஅபிவிருத்தியளிக்கும் எனஎம்பாட்டனார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் கூறியிருப்பதுஉண்மைதான் .


நல்லவீடு எனப் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்குறிப்பிட்டது நன்கு காற்றோட்டமானசுத்தமான -சுகாதாரக்கேடுகளற்ற வீட்டையே குறிக்கும் .அவ்வாறில்லாமல்சில வீடுகளில் பேய் பிசாசுஉண்டு , ஷைத்தான்நடமாட்டம் உண்டு என நம்புவதும்- அதனால்தான் உடல் நலக் குறைவும் -பொருளாதாரநசிவும் ஏற்படுகின்றன எனநம்புவதும் மிகவும் மோசமானவிஷயங்களாகும் .வீடுகளைசுத்தமாகவும் மனதை தைரியமாகவும்வைத்துக் கொண்டால் எவ்விததீங்கும் -நோயும்பிணியும் அணுகாது .இவற்றைவிட்டுவிட்டு ராசிகளைப்பார்த்துக் கொண்டு மனதைக்குழப்பிக் கொள்வது நல்லதல்ல .

( 26-2-1993வெள்ளிக்கிழமைகாலை சென்னையில் சங்கைமிகுஷைகு நாயகம் அவர்கள் அருளியது .கூறக்கேட்டவர் :ஆஷிகுல்கலீல் ,திருச்சி )