உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள்
அகழ்யுத்தம்
முரசி யம்புவாரியின்
திரைக ளொத்தவாசியின்
பரபரத்த நடையயாலி
பரந்தொலிக்க விடியயன
பெருபெருத்த வொட்டகை
இருபெ ருத்தமிடறுடன்
பருவதத்தை யயாத்தன
பொருக்களத்தின் காட்சியே
கொண்டுகூட்டு :
முரசுஇயம்பு வாரியின் திரைகள்ஒத்த வாசியின் பரபரத்த நடைஒலி இடியெனப் பரந்தொலிக்கபெரு பெருத்த ஒட்டகை இருபெருத்த மிடறுடன் பருவதத்தைஒத்தன பொருக்களத்தின்காட்சியாம்.
பொருள்:
பறையைத்தொடர்ந்து சாற்றிக் கொண்டிருக்கும்கடலின் அலைகள் போன்ற வெண்ணிறக்குதிரைகளின் தீவிரப்பட்டநடை ஒலி இடி போலும் பரந்தொலிக்க,மிகப் பெருத்தகழுத்துடன் நிற்பன மலைகளைஒத்தன இந்த யுத்த களத்தின்காட்சியாம்.
குறிப்பு:
முரசு:பறை,மேளம்.இயம்புதல்: அடித்தல்.வாரி :கடல்.திரை :அலை.வாசி :குதிரை.பரபரத்தல்: சுறுசுறுப்பு,தீவிரப்படல்.இரு :பெரு.மிடறு :கழுத்து.பருவதம்: மலை.பொருக்களம்: யுத்தகளம்