அல்குர்ஆனின்அறிவியல் அத்தாட்சிகள்
கனவுலகநிஜங்கள் !
- ரஹ்மத்ராஜகுமாரன் -9443 446903
இப்னுஸீரீன் ( ரஹ் )அவர்கள் .இவர்களதுமுழுப் பெயர் அபூபக்கர்முஹம்மது இப்னு ஸீரீன் .பஸராவைச்சேர்ந்தவர்கள் .கனவுக்கலைவல்லுனர் .நபியூஸுப் ( அலை )அவர்களுக்குப்பிறகு இக்கலைக்கு பெருமைசேர்த்தவர்கள் இவர்கள்தாம் .அவ்வளவுபரிசுத்தமானவர்கள் .
இப்னுஸீரீன் ( ரஹ் )அவர்கள்தம் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது ஒருவன் ,நான்ஒரு முட்டையை உடைத்து ,அதிலுள்ளவெள்ளைக் கருவை மட்டும்எடுத்துக் கொண்டு மஞ்சள்கருவை வீசிவிடக் கனவு கண்டேன்என்றான் .நீதான்அந்தக் கனவைக் கண்டாய் என்றுஇறைவன் மீது ஆணையிட்டுக்கூறு . அவ்விதமேகனவு கண்டவன் ஆணையிட்டுக்கூறியதும் ,தன்னைச்சுற்றி இருந்த நண்பர்களிடம்இதோ இவன் கஃபன் கள்வன் .இறந்தவர்களின்அடக்கவிடங்களைத் தோண்டி ,அவர்களைப்போர்த்தி இருக்கும் துணியைக்களவு செய்து வயிறு வளர்க்கும்இழிமகன் .இவனைப்பிடித்து சுல்தானிடம் கொண்டுசெல்லுங்கள் என்று கூற கனவுகண்டவன் திடுக்குற்று தன்தவறை ஒப்புக் கொண்டு ,தான்இனிமேல் அச்செயலை செய்வதில்லைஎன்று சத்தியமிட்டுக் கூறிமன்னிப்பு கேட்டுச் சென்றான் .
அதேமாதிரி இப்னு ஸீரீன் ( ரஹ் )நண்பர்களுடன்வீற்றிருக்கும் போது ,ஒருவன்வந்து , தான்பாங்கு சொல்லக் கனவு கண்டதாகக்கூற , உன்னுடையகை வெட்டப்படும் என்று கூறினார் .சற்றுநேரத்தில் இன்னொருவர் வந்து ,பாங்குசொல்லக் கனவு கண்டதாகக் கூற ,நீர்ஹஜ்ஜுச் செய்வீர் என்றுவிளக்கம் சொன்னார்கள் .
அதுகேட்டுவியப்புற்ற நண்பர்கள் ,இருவரும்ஒரே மாதிரியாக பாங்கு சொல்வதாகக்கனவு கண்டிருக்க ,தாங்கள்ஏன் வெவ்வேறு விதமான விளக்கங்கள்கூறினீர்கள் ...?என்றுநண்பர்கள் வினவினர் ;
முன்னவனின்முகத்தில் தீமையின் அடையாளத்தைக்கண்டேன் .பின்னவனின்முகத்தில் நன்மையின் அடையாளத்தைக்கண்டேன் அவ்வளவுதான் என்றார்கள் .இவர்கள்கூறிய வண்ணமே இருவருக்கும்பின்னர் நடந்தது .
அப்துல்லாஹ்இப்னு ஜுபைர் ,தாம்அப்துல் மலிக் இப்னுமர்வானைகீழே வீழ்த்தி நான்கு முறைஅவரது கன்னத்தில் அறைந்ததாகக்கனவு கண்டு ,இதனைதம் பெயரைக் கூறாது இப்னுஸீரீன்( ரஹ் )அவர்களிடம்எடுத்துரைத்து விளக்கம்கேட்டு வருமாறு ஒருவனை அனுப்பிவைத்தார்கள் அப்துல்லாஹ்இப்னு ஜுபைர் அனுப்பியஆள் மேற்கண்ட கனவை தான் கண்டதாகஇப்னு ஸீரீன் ( ரஹ் )அவர்களிடம்கூறினான் .உடனேஅவர்கள்,இக்கனவைநீர் கண்டிருக்க முடியாது .நீபொய்யுரைக்கின்றாய் .இக்கனவைஅப்துல்லாஹ் இப்னுஜுபைர்தான்கண்டிருக்க முடியும் ..!காரணம்இக்கனவின் செய்தி அவருக்குத்தான்வந்துள்ளது என துல்லியமாகஉண்மையைக் கண்டறிந்தார் .வந்தவனிடம் ,நீஉண்மையைச் சொல்லும்வரையில்நான் இதற்குரிய விளக்கத்தைச்சொல்ல முடியாது என்றுகூறிவிட்டார்கள் .பின்னர்அவன் அப்துல்லாஹ் இப்னுஜுபைரிடம் சென்று நடந்ததைக்கூற ,அவர்கள்உண்மையைக் கூறி விளக்கம்கேட்டு வா ...!என்றுமீண்டும் அவனை இப்னு ஸீரீன்( ரஹ் )இடம்அனுப்பி வைத்தார்கள் .அவ்விதமேஇவரிடம் வந்து அவன் உண்மையைக்கூற , அப்துல்மலிக் இப்னுமர்வானுடையசந்ததியினருக்கு கிலாஃபத்பதவி கிடைக்கும் -என்றுஒரே வாக்கியத்தில் அக்கனவிற்குவிளக்கம் அளித்தார்கள் .அவ்வாறுநடந்ததை இஸ்லாமிய வரலாறுஅறியும் .
ஒருநாள் இப்னு ஸீரீன் ( ரஹ் )உடையஅடிமைப் பெண் இவரிடம் ,தாம்விண்ணிலே உயர்ந்து உயர்ந்துசென்று இறுதியில் ,ஜஹ்ராஎன்ற விண்மீனை அடைந்துவிட்டதாகவும் ,அப்பொழுதுஒருவர் இதனை உன் எஜமானார்இப்னு ஸீரீன் ( ரஹ் ) விடம்போய்ச் சொல்லுமாறு சொன்னதாகவும்கூறிய பொழுது அது கேட்டுஸீரீன் ( ரஹ் )அதிர்ந்துபோனார் . அடிமைப்பெண் அவரிடம் ,எஜமானரே !இதைவிடபயங்கரமான கியாமத் நாளைப்பற்றிய கனவெல்லாம் கண்டுசொன்ன போது கூட தாங்கள் பதறாமல்விளக்கம் சொன்னீர்களே ...ஒருநட்சத்திரத்தை நான் அடைந்தகனவில் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள் ..?அதற்குஇப்னு ஸீரீன் ( ரஹ் )என்னுடையமுடிவு நெருங்கி விட்டது .வரும்ஜும்ஆ வுக்குள் நான் இறந்துவிடுவேன் என்று கூறிய வண்ணம் ,வரும்ஜும்ஆ தொழுகைக்கு முன் பஸராவில்இறந்து போனார்கள் ( இன்னாலில்லாஹி ...)
இதுமாதிரி கனவின் ஞானம் இறைவன்அளித்திருந்த நபி யூசுப்( அலை )அவர்களிடம் ,ஒருவர்வந்து , நான்70தீனார்கள்லாபமாகப் பெற்றதாக கனவுகண்டேன் . இதன்விளக்கம் என்ன என்று கேட்டார் .
நீர்70,000தீனாரைலாபமாகப் பெறுவீர் என்றுகூறினார்கள் .கொஞ்சநாள் கழித்து அதே மனிதர்மீண்டும் வந்து யூசுப் ( அலை )அவர்களிடம் ,முன்புகண்டது போலவே 70தீனார்கள்லாபம் பெற கனவு கண்டேன் .விளக்கம்தாருங்கள் என்றார் .
நபியூசுப் ( அலை )அவரிடம் ,உமதுபெயர் கெட்டுப் போகும் ,நீர்மக்களுடைய கோபத்திற்கு ஆளாவீர்என்றார்கள். அதற்குஅந்த மனிதர் நான் கண்ட கனவுஒரே மாதிரியாகத்தானே இருந்தது .தாங்கள்முன்னர் ஒரு விதமாகக் கூறினீர்கள் .இப்பொழுதுஅதே கனவிற்கு முன் கூறியவிளக்கத்திற்கு மாற்றமாய்கூறுகிறீர்கள் .இதுஏனோ ...?என்றுவினவினார் .
நீர்முன் கண்ட கனவும் ,இப்போதையகனவும் ஒன்றாக இருப்பினும்அதற்குரிய காலம் வேறு வேறு .முன்னர்கனவு கண்ட போது ஊரில் மரம் ,செடி ,கொடிகள்பசுமையாகவும் ,வசந்தம்வீசும் சீதோஷ்ண நிலையும்ரம்மிய மானதாகவும் இருந்தது .அக்காலத்தில் அக் கனவுக்கு பலன்நன்மையாக இருந்தது .இப்பொழுதோவறட்சி காலம் .மரம் ,செடி ,கொடிகளெல்லாம்காய்ந்து பட்டுப் போயிருக்கும்காலம் . இதனால்அதே கனவிற்கு பலன் காலத்திற்குதக்கவாறு மாறிக் கொள்ளும்என்றார்கள் .
யூசுப்( அலை )அவர்கள்சிறை சென்ற சமயத்தில் வெவ்வேறுகுற்றங்களுக்காக இரு வாலிபர்களும்அவருடன் சிறைச்சாலை சென்றார்கள் .அவ்விருவரில்ஒருவன் யூசுபை நோக்கி ,நான்திராட்சை ரசம் பிழிந்துகொண்டிருப்பதாக மெய்யாகவேகனவு கண்டேன் என்று கூறினான் .மற்றவன் ,நான்என் தலையில் ரொட்டிகளைச்சுமந்து செல்வதாகவும் ,அதைப்பட்சிகள் கொத்திக் கொத்திப்புசிப்பதாகவும் மெய்யாகவேகனவு கண்டேன் என்று கூறிஇவ்விருவரும் இதற்கு விளக்கம்கேட்டனர் .( குர்ஆன்12:36)
சிறைக்கூடத்தில்இருக்கும் என்னிரு தோழர்களே !உங்களில்ஒருவன் விடுதலையடைந்துஅவன்முன் செய்து கொண்டிருந்தவேலையையும் ஒப்புக்கொண்டுமுன் போலவே தன் எஜமானனுக்குதிராட்சை ரசம் புகட்டிக்கொண்டிருப்பான் .மற்றவனோதூக்கிலிடப்பட்டு அவன் தலையைகாகம் , கழுகுபோன்ற பறவைகள் கொத்திக்கொத்தித் தின்னும் .நீங்கள்கேட்ட கனவின் பலன் உங்களுக்குவிதிக்கப்பட்டு விட்டது .( குர்ஆன்12:41)
இக்கட்டுரையில்இதுவரை வரிசையாக சொல்லப்பட்டகனவுகள் ...முட்டையின்வெள்ளைக்கரு ,கஃபன் துணிதிருட்டாக ,பாங்குசொல்லும் ஒருவருக்கு கைவெட்டப்படுவதும் ,அதேபாங்கை வேறு ஒருவர் சொல்லும்போது ஹஜ்ஜுச் செல்வதும் ,கன்னத்தில்அறையப்படுவது கிலாபத் பதவிஎன்றும் ,விண்மீனிலிருந்துசொல்லப்படும் தகவலில் தனக்குள்ளமரணச் செய்தியை அறிவதும் ,ஒருவருக்கு70தீனார்70,000தீனாராகலாபம் பெறுவதும் ,அதேநபருக்கு 70தீனாரால்மக்களிடம் பெயர் கெட்டுப்போவதும் ,திராட்சைரசம் பிழியும் சிறைவாசிக்குஅதே பணி கிடைப்பதும் ,ரொட்டியைசுமந்தவனுக்கு தூக்குதண்டனையும் ...என்னேஇதெல்லாம் கனவுலகில் நடைபெறும்காட்சிகளுக்கு ,நிஜவாழ்க்கை நடைமுறைகள் வேறுவிதமாய் வித்தியாசம் மாறுபட்டுஇருக்கிறது .இவைஎப்படி சாத்தியமாகின்றன ....?
சரி .விஞ்ஞானரீதியாக கனவைப் பற்றி சற்றுஆய்வு செய்வோம் .கனவுவரக்கூடிய தூக்கத்தைப் பற்றிமுதலில் விஞ்ஞானம் ஆராய்கிறது .தூக்கத்தைஇரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள் .தூங்கும்போது கண்கள் இடமும் வலமுமாகநகர ஆரம்பிக்கின்றன.அந்தத்தூக்கத்தை கண் அசைவுத் தூக்கம்(Rapid Eye movement –REM)என்கிறார்கள் .
அடுத்து ,ஆழ்ந்ததூக்கத்தில் கண் அசைவில்லாமல்இருக்கும் .இதைகண் அசைவில்லாத் Non-REMதூக்கம் .இந்தத்தூக்க ஆராய்ச்சிக்கு EEG( எலக்ட்ரோஎன் செஃபலோகிராம் )என்னும்கருவியைக் கொண்டு தூக்கத்தைப்பிரித்து ஆராய்கிறார்கள் .
இக்கருவியின்மூலமாக , மூளையின்சிறிய மின் அலைகள் தூங்கத்தொடங்கியதும் வெளி வருவதைஅறிகிறார்கள் .இந்தமின் அலைகளை ஆல்பா அலைகள்என்கின்றனர் .இதுஒரு செகண்டுக்கு 10அலைசுற்றுகள் வெளிவருகின்றன .அதன்பின்கொஞ்சம் மந்தமான மூளை அலைசுற்று ...அதன்பின்வேகமாக அலை சுற்றுகள்ஏற்படுகின்றன .இப்போதுதான்கண் அசைவு தூக்கம் REMஏற்படுகிறது .இந்தநிலையில்தான் கனவுகள்தோன்றுகின்றன .REM தூக்கத்தில்காணும் கனவுகள்தாம் பளிச்சென்றுஞாபகமிருக்கின்றன .
கனவுஎன்பது நம் உள்ளத்தில் இருக்கும்டென்ஷனுக்கு ஒருவிதமானவடிகால் .அவ்வளவுதான் .நம்மனதில் இருக்கும் நிறைவேறாதஇச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் விருப்பம்தான்கனவு . எளிமையாகச்சொன்னால் கனவு ஒருவிதத்தில்நிறைவேறாத ஆசைகளின் பொய்யானநிறைவேற்றம் என்பதாக விஞ்ஞானம்கனவாராய்ச்சியைப் பற்றிக்குறிப்பிடுகிறது .
மெய்ஞ்ஞானம்கனவைப் பற்றி சொல்லும் போதுஆன்மாவோடு சேர்த்து வைத்துஆராய்கிறது .ஆன்மாஆலமுஷ் ஷஹாதாவிலிருந்துஆலமுல் மிஸாலுக்கு பயணமாகுவதும்பின் திருப்பி வருவதும் தான்கனவு என்கிறது மெய்ஞ்ஞானம் .
மனிதர்களின்அறிவிற்கும் கண்களுக்கும்புலப்படாத அம்சங்கள் பல உள்ளன .ஒவ்வொருமனிதருக்கும் தேகமிருப்பதுபோல்அதற்குள்ளே இருந்து ஆட்டிவைக்கும் அதிசய சக்தியானசூக்கும ஆன்மாவும் உண்டு .இதைக்கொண்டே மனிதனுடைய வாழ்வும் ,மரணமும்நடைபெறுகின்றன .
மனிதன்இவ்வுலகில் வாழும் வரை சாதிக்கமுடியாத பல கிரியைகளைதேகத்துக்குள்ளே இருக்கும்ஆன்மா சாதித்துக் கெண்டிருக்கிறது !
மனிதன்உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும் போது உள்ளேஇருக்கும் ஆன்மாவிற்குச்சரியான விடுதலை சுதந்திரம்கிடைப்பதில்லை .ஆன்மாமனித தேகத்துக்குள் சிறைபட்டபறவையைப் போல் அடைபட்டுக்கிடக்கிறது !
மனிதனதுதேகம் நித்திரை யாகும்போது ,தேகம்செயல்படாத நிலையில் அமைந்துவிட்டால் ,தேகத்துக்குள்ளேசம்பந்தத்தை வைத்துக் கொண்டுசிறிது சுதந்திரமாய் வெளியில்கிளம்பி பல காட்சிகளையும் ,அதிசயிக்கத்தக்கஅம்சங்களையும் ,தேகக்கண்கள் காணாத அபூர்வ அம்சங்கள்பலவற்றையும் கண்டு தரிசிக்கின்றது .இதற்குப்பெயர்தான் கனவு என்பது .
கனவுகாணாத மனிதர்கள் இவ்வுலகில்இருப்பது மிகவும் அரிது .கனவுகாணும் போது ,மலை ,மாடு ,காடு ,வனந்தரங்களையும் ,உயிர்ப்பிரணிகளையும் ,அழகானநந்தவனங்களையும் ,சண்டைச்சச்சரவுகள் ,மிருகங்கள்பயமுறுத்துவது ,இறந்தவர்களைப்பார்ப்பது ,அதிசயமானபொருட்களைக் காண்பது ...இவற்றையெல்லாம் மனித ஸ்தூலக் கண்கள்கண்டிருக்கவே முடியாது .
கனவின்இலக்கம் பரிசுத்த மேன்மையானஞானத்தைச் சார்ந்த ஓர்அம்சமாகும் .இதனால்தான்விரும்பிய நபிமார்களுக்குஇறைவன் கனவின் ஞானத்தைவழங்கியதாக குர்ஆனில்
யூசுபே !நீர்கனவில் கண்ட இவ்வாறே உன்இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்துகனவுகளின் வியாக்கியானங்களையும்உமக்குக் கற்றுக் கொடுத்துள்ளான் ” குர்ஆன்12:06
மெய்ஞ்ஞானம்கனவுகளைப் பற்றி இன்னும் சிலகுறிப்புகளைத் தருகிறது .சந்திரன்பிறை பிறந்து 6,7, 8, 9, 10, 15, 16, 19, 26, 27, 30 ஆகியபிறைத் தேதிகளில் காணும்கனவுகள் துரிதமாய் பலன் தரும் .பின்னர் ,4, 5, 11, 12, 17 ஆகியபிறைத் தேதிகளில் காணும்கனவுகள் தாமதமாய் பயன்விளைவிக்கும் .13, 21, 22, 24 ஆகியபிறைத் தேதிகளில் காணும்கனவு நன்மையாக இருந்தாலும் ,தீமையாகஇருந்தாலும் அது உண்மையாகவேவெளியாகும் .
மறுமைக்காலம் நெருங்கிவிடின் இறைநம்பிக்கையாளரின் கனவுபொய்யாகமாட்டாது .இறைநம்பிக்கை யாளரின் கனவுநபித்துவத்தில் 46பாகங்களில்ஒரு பாகமாகும் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள் -( புகாரி ,முஸ்லிம் ,அபுதாவூத் ,திர்மிதி .)என்னைஎவரேனும் கனவில் காணின் அவர்உண்மையாக என்னையே கண்டுகொண்டார் .ஏனெனில்நிச்சயமாக ஷைத்தான் என்உருவைக் கொள்ள முடியாது என்றுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அருளிச் செய்தனர் -புகாரி .
பாக்கியமானநன்மாராயம் சொல்லக் கூடியநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் காணும் அற்புதக்கனவை நம்மில் எல்லோரும் நம்சந்ததியினரும் காண வல்லரஹ்மான் வழங்கியருளட்டும் .இவைதாம் கனவுலகின் நிஜங்கள் .