• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai        »      2014     »      Mar 2014      »      தவ்பா - பாபமன்னிப்பு


தவ்பா- பாபமன்னிப்பு
மெளலவிசையது அபூதாஹிர் நூரி .சித்தரேவு .


இவ்வுலகில்வாழும் மனிதன் நற்செயலையும்செய்கின்றான் .பாவமானகாரியங்களையும் செய்கின்றான் .பாவம்செய்துவிட்ட மனிதன் தன் தவறைஉணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பாசெய்தால் கருணை உள்ளம் படைத்தஇறைவன் தன் அடியான் செய்தபாவத்தை மன்னித்து விடுகிறான் .அல்லாஹ்தனது திருமறையில் விசுவாசிகளே !கலப்பற்றமனதோடு அல்லாஹ்விடம் தவ்பாசெய்து பாவ மன்னிப்புக்கோருங்கள் .( அல்குர்ஆன்- 66:8)என்றும் ,நிச்சயமாகஉங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கோருங்கள் .நிச்சயமாகஅவன் மன்னிக்கக் கூடியவன் .( அல்குர்ஆன்90:10) என்றும்கூறுகிறான் .


எனவேதவ்பா செய்தால் அல்லாஹ்நிச்சயமாக நமது பாவங்களைமன்னித்து விடுவான் என்பதில்சந்தேகமே இல்லை .பாவமன்னிப்புதேடுவதைப்பற்றி நபிகள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறும்போதுபாவத்திலிருந்து தவ்பாசெய்பவர்கள் பாவமே செய்யாதவர்களைப்போன்று ஆகி விடுகிறார்கள்என்று கூறுகின்றார்கள் .தவ்பாஎன்பதை அல்லாஹ் அடியார்களுக்குஓர் அருமருந்தாக அமைத்துத்தந்திருக்கிறான் .அருள்மறையில்ஸூரத்துத்தவ்பா எனும்அத்தியாயத்தையே இறக்கிஅருளியிருக்கிறான் .மனிதன்பாவங்களினாலும் ,மறதியினாலும்பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறான் .தனதுமனோ இச்சையால் பாவத்தைச்செய்து முடித்து விடுகிறான் .சிலசமயங்களில் குற்றம் எனத்தெரிந்தே செய்துவிடுகிறான் .சிலசமயங்களில் அறியாமையின்காரணமாக குற்றம் செய்கிறான் .தனக்குமன்னிப்பு கிடைக்குமா ?கிடைக்காதாஎன சஞ்சலமடைகிறான் .இத்தகையோரை( பாவம்செய்தவர்களே )அல்லாஹ்வின்அருளை விட்டும் நீங்கள்நிராசையடைந்து விட வேண்டாம் .நிச்சயமாகஅல்லாஹ் எல்லாப் பாவங்களையும்மன்னித்து விடுவான் .( அல்குர்ஆன்-39:53)பாவங்கள்இரண்டு வகைப்படும் .(1) மனோஇச்சையின் காரணமாகச் செய்யப்படுவது(2)தற்பெருமையின்காரணமாகச் செய்யப்படுவது .மனோஇச்சையின்காரணமாகச் செய்யப்படும்பாவத்திற்கு பாவ மன்னிப்புக்கோருவதற்கும் ,பாவமீட்சி கிடைப்பதற்கும்தவ்ஃபீக் உண்டு .உதாரணமாகபாவா ஆதம் ( அலை )அவர்கள்மனோ இச்சையின் காரணமாகதடுக்கப்பட்ட மரத்தின் கனியைப்புசித்து சருகி விட்டார்கள் .பின்னர்பாவ மன்னிப்புக் கோரினார்கள் .பாவமீட்சி கிடைத்தது .அதேசமயம் இப்லீஸ் தனது அகப்பெருமையின் காரணமாக அல்லாஹ்வின்கட்டளைக்கு வழிப்பட மறுத்துபாவம் புரிந்தான் .அதனால்அவனுக்கு பாவமன்னிப்புக்கோரும் வாய்ப்போ பாவமீட்சியோகிடைக்காமல் போய்விட்டது .அடியான்பாவ மன்னிப்புக் கேட்பதைஅல்லாஹ் விரும்புகிறான் .


அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் .மனிதன்ஒருவன் ( பிரயாணத்தில் )ஒருபயங்கரமான இடத்தில் மரம் ,செடி ,கொடிஇல்லாத பாலைவனத்தில் இறங்கினான் .அவனுடன்அவனுடைய வாகனமும் உள்ளது .அதில்அவனுக்குரிய உணவுப் பொருட்கள் ,தண்ணீர்முதலானவை வைக்கப் பட்டுள்ளன .அந்தமனிதன் சற்று இளைப்பாறுவதற்காகபூமியில் தலை வைத்து சிறிதுநேரம் தூங்கினான் .பின்கண்விழித்துப் பார்த்தான்அவனது வாகனம் எங்கேயோ போய்விட்டது .அதைத்தேடி அங்கு மிங்கும் அலைந்தான் .சூட்டினாலும் ,தாகத்தினாலும்சோர்ந்து போய் விட்டான் .அதேஇடத்திற்குப் போய்த் தூங்கிஅப்படியே செத்துப் போய்விடலாம் என எண்ணுகிறான் .அவ்விடத்திற்குச்சென்று கையில் தலையை வைத்துதான் இறந்து போகபடுத்துக்கொண்டான் .தூக்கமும்வந்துவிட்டது .பின்னர்விழித்து விட்டான் .விழித்துப்பார்த்தால் அவனது வாகனம்அவனருகில் நின்று கொண்டிருக்கிறது .உணவுப்பொருட்களெல்லாம் அப்படியேஇருக்கின்றன .இழந்துபோன பொருள் திரும்பக் கிடைத்தமகிழ்ச்சியால் இறைவனுக்குநன்றி செலுத்தும் அவன் தன்னைமறந்து ( தவறுதலாக )யாஅல்லாஹ் ! நான்உனது இரட்சகன் ;நீஎனது அடிமை !என்றுவாய்தவறிக் கூறிவிடுகிறான் .இந்தஉதாரணத்தைக் கூறிய நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இப்பொழுது அந்தமனிதருக்கு தனது வாகனத்தைப்பார்த்தவுடன் எவ்வளவுசந்தோசமும் ,மகிழ்ச்சியும்ஏற்பட்டிருக்குமோ அதை விடபன்மடங்காக ஓர் அடியான் தனதுபாவத்தை விட்டு தவ்பா செய்கிறபோது அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்என்று கூறினார்கள் .

( அறிவிப்பாளர் :அப்துல்லாஇப்னு மஸ்ஊத் ( ரலி )நூல் :முஸ்லிம் )



அல்லாஹ்ஓர் அடியானின் மீது சந்தோஷம்கொண்டுவிட்டால் அதைவிடவேறென்னநற்பாக்கியம் இருக்க முடியும் ?எனவேஎல்லாச் சந்தர்ப்பங்களிலும்நமது பாவங்களை விட்டும்அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும் .பின்னர்பார்த்துக் கொள்ளலாம் என்றுதாமதிக்கலாகாது .ஏனெனில்தவ்பாவுக்கும் ஒரு குறிப்பிட்டகாலத் தவணை உண்டு .அதற்குமுன் செய்து விடவேண்டும் .தாமதித்தால்பயனற்றுப் போய்விடும் .அந்தவரையறை இரு வகைப்படும் .ஒன்று :முழுஉலகத்தவருக்கும் உரியது .மற்றொன்று :ஒவ்வொருமனிதனுக்கும் உரியது .அண்ணல்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்அருளினார்கள் .“ அல்லாஹுதஆலா தவ்பாவின் வாசலை அதன்அகலம் எழுபது வருட தொலைதூரம்இருக்குமாறு செய்து வைத்துள்ளான் .எதுவரைமேற்குத் திசையில் சூரியன்உதயமாகாதோ அதுவரை அந்த வாசல்அடைக்கப்படாது ( கியாமத்நாள் சமீபத்தில் தான் அந்தவாசல் அடைக்கப்படும் )அதன்பிறகு எவருடைய ஈமானும் எவருடையதவ்பாவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது .


நூல்: திர்மிதி .


அண்ணல்நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் .எதுவரைசக்ராத்தின் நிலைவரவில்லையோஅதுவரை அடியார்களின் துஆவைஅல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் .

அறிவிப்பாளர்: இப்னுஉமர் ( ரலி )நூல்: திர்மிதி .


எனவேஇறுதி நேரம் வரும் வரைகாத்திருக்காமல்இன்றே இப்பொழுதே தவ்பா செய்துகொள்ள வேண்டும் .ஏனெனில்மனிதனுக்கு கடைசி நேரம்வந்துவிட்டால் மரணத்தின்மலக்குகள் தெரிய ஆரம்பித்துவிட்டால் மறு உலகம் அவனதுபார்வைக்கு முன்னால் இருந்தால்சுய உணர்வு வேலை செய்யவில்லைஎன்றால் அந்த நேரத்தில் தவ்பாசெய்வதும் ,யாரிடமும்மன்னிப்புக் கோருவதும்பிறருடைய குற்றத்தை தான்மன்னிப்பதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது .இந்நிலைவருவதற்கு முன்பு அல்லாஹ்விடம்தவ்பா செய்து கொள்வோம் .எல்லாம்வல்ல அல்லாஹ் நமது பாவங்களைமன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸ்எனும் உயர்ந்த சொர்க்கத்தைநம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக.

ஆமீன்
. வஸ்ஸலாம் ..