• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      May 2014      »    வாழ்க்கை வரலாறு

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்

வாழ்க்கை வரலாறு !

மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி

 

வாக்கு மூலம்



ஹள்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதே அவ்வெதிரிகளின் முழு நோக்கம். அவ்விதம் அவர்களைத் தாழ்மைப்படுத்த  வேண்டுமென்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து வந்த அப்பரம விரோதிகளும் தங்கள் வாயினாலேயே பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் மேலான குணத்தையும், நன்னடத்தையும் பற்றிச் சிறப்பித்துக் கூறியதனால், நமது வள்ளல் பெருமான் முஹம்மது முஸ்தபா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணச்சிறப்புத்தான் எத்தன்மையானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?



அரசன் : முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப   அந்தஸ்து எப்படி ?


அபூஸுப்யான் : அவர்அறபு தேசத்தில் மிகவும் கண்ணியமும், கீர்த்தியும் வாய்ந்த மேலான குடும்பத்தில் உதித்தவர்.


அரசன் : இதற்குமுன் அவரது குடும்பத்தில் தம்மை யாரும் நபியென்று கூறியதுண்டா?


அபூஸுப்யான் : இதற்கு முன் அவர் குடும்பத்தில் யாரும் தம்மை நபியென்று கூறியதில்லை .


அரசர் : இவர் முன்னோர்களில் யாராவது அரசராயிருந்ததுண்டா?


அபூஸுப்யான் :   இல்லை ; ஒருவருமில்லை .



அரசர் : அவர் தம்மை நபியென்று அழைப்பதற்கு முன்னர் எப்பொழுதாவது பொய் சொன்னதுண்டா?


அபூஸுப்யான் :   இல்லை ; இல்லவேஇல்லை .



அரசன் : அவரை ஆரம்பத்தில் பின்பற்றியவர்கள் ஏழைகளா? செல்வந்தர்களா?


அபூஸுப்யான் : ஏழைகளே !



அரசன் : அவரைப்பின் பற்றியவர்களின் தொகை பெருகிக் கொண்டு போகின்றதா ? அல்லது குறைந்து கொண்டு வருகின்றதா ?


அபூஸுப்யான் :   பெருகிக் கொண்டே போகின்றது .



அரசன் : அவரைப்பின் பற்றியவர்களில் யாராவது அவருடைய மதத்தில் வெறுப்புக் கொண்டு அதை விட்டு விலகியதுண்டா ?


அபூஸுப்யான் : ஒருவரும் விலகியதில்லை .



அரசன் : உங்களுக்கும்அவருக்கும் எப்போதாவது சண்டை நடந்ததுண்டா ?


அபூஸுப்யான் : ஆம் .



அரசன் : சண்டையின் முடிவு என்ன ?


அபூஸுப்யான் : சில சமயம் அவருக்கு வெற்றியும், சில சமயம்எங்களுக்கு வெற்றியும் கிடைத்தது .



அரசன் : அவர் எப்போதாவது வாக்கு மாற்றம் செய்தது உண்டா?


அபூஸுப்யான் :   இதுவரை அப்படிச் செய்ததில்லை . ஆனால்இப்பொழுது எங்களுக்கும் , அவருக்கும்உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதில்அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எங்களுக்குத் தெரியாது.



அரசன்  இவைகளையயல்லாம் கேட்ட பின் அபூஸுப்யானிடத்தில் கீழ்க்கண்ட விஷயங்களை மொழிபெயர்ப்போன் மூலமாகச் சொன்னான் .


நான் உம்மிடம் அந் நபியின் குடும்ப அந்தஸ்தைப் பற்றிக் கேட்டதற்கு அவர் மேலான குடும்பத்தில் தோன்றியதாகச் சொன்னீர். தீர்க்கதரிசிகள் அனைவரும் மேலான குடும்பத்திலேயே  பிறந்திருக்கின்றனர். அக்குடும்பத்தில் ஒருவரும்  தம்மை நபியென அழைத்திருப்பதில்லை  என்பதை நீரே ஒப்புக் கொள்கின்றீர். அப்படியாராகிலும் சொல்லியிருந்தால் அதைப் பின்பற்றியே இவரும் சொல்லியிருப்பார் என்று நினைக்கலாம் .அவருடைய குடும்பத்தில் ஒருவரும் அரசராயிருந்ததில்லை என்றும் சொல்லுகிறீர் . அவ்விதம்யாராவது இருந்தால் இவரும் இழந்த அரசாங்கத்தைப் பெறுவதற்காகவே தம்மை நபியென அழைத்தாரென்றும்சொல்லலாம்.



அவர் ஒருபோதும் பொய் சொன்னதில்லை என்றுநீரே கூறினீர். ஆண்டவனது அடியார்களிடம் எவர் ஒரு போதும் பொய் சொல்லியிருக்க மாட்டாரோ , அவர் ஆண்டவனைப் பற்றிய விஷயத்திலும் எவ்விதம் கட்டுப்பாடான பொய் சொல்லுவார் .   ஏழைகளே அவரைப் பின்பற்றியதாகச் சொல்லுகிறீர். தீர்க்கதரிசிகளைமுதன்முதலில் ஒப்புக் கொள்பவர்கள் ஏழைகள் தாம். அவருடைய மதத்தைத் தழுவிய பின் ஒருவரும் அதைவிட்டு நீங்கியிருப்பதில்லை என்று கூறுகிறீர். விசுவாசத்தின் உண்மை நிலை இதுதான் எப்பொழுது விசுவாசம் மனதில் குடிகொண்டு விட்டதோ அது ஒரு போதும் அதை விட்டு அகலுவதில்லை.



அவரைப்பின்பற்றிவர்களின் எண்ணிக்கையானது கூடிக்கொண்டு போவதாய்க் கூறினீர் . உண்மை மதமானது நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டுதானிருக்கும் . சண்டையில் வெற்றி சில வேளை உங்களுக்கும் சில வேளை அவருக்கும் கிடைப்பதாகச் சொல்லுகிறீர் .   தீர்க்கதரிசிகள் அவர்களின் விரோதிகளுக்கு மத்தியில் இவ்விதமே சோதிக்கப்படுகிறார்கள் . ஆனால்முடிவில் தீர்க்க தரிசிகளுக்கே வெற்றி ஏற்படும். அவர் ஒரு போதும் வாக்கு மாற்றம் செய்திருப்பதில்லைஎன்று சொல்லுகிறீர் . தீர்க்கதரிசிகள் ஒருபோதும் வாக்குமாறு செய்வதில்லை .


அதன் பின்அரசர் அபூஸுப்யானை நோக்கி, அவர் என்ன போதிக்கிறார் என்று கேட்க , அபூஸுப்யான், அல்லாஹ் ஒருவனையே  வணங்குங்கள், அவனுக்கு யாரையும் இணைவைக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்து வந்த தவறான காரியங்களை விட்டுவிடுங்கள்; உண்மையே பேசுங்கள்; தருமம் செய்து வாருங்கள்; பதிவிரதாதர்மத்தைக் கைக்கொள்ளுங்கள். உங்களின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்றே போதிக்கிறார் என்று சொன்னார் .


அரசன் இதைக் கேட்டதும் அபூஸுப்யானை நோக்கி , நீர் இதுவரை கூறி வந்தது உண்மையாக இருக்குமானால் அவர்கள் நபியென்பதைப் பற்றிய யாதொரு சந்தேகமுமில்லை. பிற்காலத்தில் ஒரு நபி பிறப்பார்களென்பது எனக்கு முன்னரே தெரியும் . ஆனல்அவர்கள் அரேபியாவில் தான் பிறப்பார்களென்பது எனக்குத் தெரியாது . அப்படித்தெரிந்திருந்தால் நான் அங்கு சென்று அவர்களைத் தரிசித்து அவர்கள் பாதங்களைக் கழுவியிருப்பேன். இன்னொரு விஷயமும் இப்போதே சொல்லி விடுகிறேன் . அதாவது இன்று  நான் ஆட்சி செய்யும் இத்தேசமும் ஒரு காலத்தில் அவர்கள் வசமாகும் என்று சொல்லிவிட்டுப்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை வாசிக்கும்படிக் கட்டளையிட்டார் . அக்கடிதம்   இன்ஷா அல்லாஹ்...

அடுத்தஇதழில்