• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »    2014    »    May2014    »    இங்கே   ..   துயிலுகிறார்கள்   !


இங்கே .. துயிலுகிறார்கள் !


ஹாஜ்ஜா , பாத்திமுத்துசித்தீக - ஹைதராபாத்

 

கோல்கொண்டாக் கோட்டை உச்சிக்கு மூச்சு வாங்க ஒரு வழியாக வந்து சேர்ந்தோம் . சில்லென்று வீசிய குளிர்ந்த காற்று தந்த சுகத்தில், ஏறி வந்த களைப்பு எங்கே போனது என்று தெரியாதவர்களாக அதன் அடிவாரத்தில் விரிந்து படர்ந்து கிடந்த ஹைதராபாத் நகரின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே நின்றிருந்த கைடு ஒருவன் இப்படி ஒருசுகத்தை அனுபவிக்கத்தான் குதுப் குலி மன்னன் தனாஸா இதைக் கட்டி வைத்தார் .... இதற்குப்பெயரேதனாஸா கி கர்த்தி அதாவது தனாஸாவின் அரியணை ...” என்று கைடுகளுக்கேயுரிய பாணியில் எங்கள் கவனத்தைத் திருப்பியவன், “அதோ தெரியுதே அங்கே தான் இவங்க நிரந்தரமா தூங்குறதுக்குன்னு மண்டபங்களைக் கட்டி வச்சிருந்தாங்க ...”என்ன செல்லுகிறான் என்பது புரியாதவர்களாய் அவனைக் கேள்விக் குறியோடு நோக்க ... “ ஆமாம் ... அங்கே தான் கோல்கொண்டா குதுப் ஷாஹி சுல்தான்களுடைய மசோலியங்கள் இருக்கின்றன ...!” என்றதும் எங்களுக்குப் புரிந்து விட்டது. அவை குதுப் ஷாஹி டூம்ஸ் என்பது.



கோல்கொண்டா கோட்டை வாயிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வெங்காய வடிவ கும்பத்துடன் சதுரப் பெட்டிகளைப் போல் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு... பரந்து கிடந்த ஒரு ஏரியின் அருகாமையில், ஓங்கி வளர்ந்து நிற்கும் மரக்கூட்டத்துக்கிடையே கம்பீர வீரர்கள் போன்று நிமிர்ந்து நிற்கும் மசோலியங்களை அன்றைக்கே பார்த்து விட வேண்டும் என்ற உந்துதலில் ஒரு பத்து ரூபாய் நோட்டை அந்த கைடின் கையில் திணித்து விட்டுக் கிளம்பினோம், பார்க்க எண்ணிய இடத்தை நோக்கி.



கையிலிருந்த நுழைவுச் சீட்டைக்காட்டிவிட்டு மனதுக்குள் பெரியதொரு ஆவலை சுமந்து கொண்டு நுழைகிறோம் பரந்து கிடந்த அந்த கல்லறைப் பூங்காவிற்குள் . கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெரிய கூட்டம். அந்தக் கூட்டம் போதாதென்று நம்மோடு வந்த கூட்டமும் நடையை எட்டிப்போட்டு அந்த இடத்திற்கு விரைகிறார்கள். திரும்பிய இடமெல்லாம் கார்கள் வரிசை வரிசையாக ...



அதென்ன அப்படியொரு விஷேசம்.. ஒரு கல்லறை வளாகத்திற்குள் இவ்வளவு தூரத்திற்கு ஜனங்களை காந்தமாக இழுப்பதற்கு? என்று எண்ணியதும் நம் கால்களும் அவர்களைப் போலவே இயங்க ஆரம்பித்தது.. சில நிமிடங்களில் அதே  இடத்தை அடைகின்றோம் ...அது தான் அங்குள்ள அத்தனை மசோலியங்களிலும் மிகப் பெரிய இரண்டில் ஒன்று . பல அடிகள் உயரமான மேடையில் கட்டப் பட்டிருக்கும் முகமது குலிகுதுப்ஷாவின் மசோலியம் அது !

கால்கடுக்க அதன் முன் நூற்றுக்கணக்கில் நின்றிருந்தவர்கள், அந்தப் பெரிய மேடையில் கம்பீரமாக நிற்கும் அந்த மசோலியத்தைப்பார்ப்பதற்காக அல்ல. அந்த மேடையில் யாரோ ஒருவர் ஆடிப் பாடுகிறார், பின்னணி இசை ஒன்றுக்கேற்ப.   அவரைச் சற்றிகேமராக்கள்... லைட்டுக்கள்... விஷயம் புரிந்துவிட்டது. அங்கு நடந்துகொண்டிருந்தது தெலுங்குப் பட ஷீட்டிங்என்று. எங்கள் டிரைவர்அதற்குள் தனக்குத் தெரிந்த வி ­ ஷயங்களோடு ஆங்காங்கு சேகரித்துக் கொண்டு வந்ததையும் சேர்த்துக்கலந்து அளந்தார்!



நிறைய ஹிந்திப் படங்கள், தெலுங்குப்படங்களுக்கான ஓரிரண்டு காட்சிகளை யாராவது இங்கு படம் பிடிப்பார்கள்... மசோலியத்தைப்பார்க்க வரும் கூட்டத்தை விட சினிமா ஷீட்டிங்கைப் பார்க்க வரும் கூட்டமே அதிகமாக இருந்தது. குழுமி நின்றிருந்த கூட்டத்தின் போக்கைப் பார்த்த போது.



அது அவர்களை திசை திருப்பாத நிலையில் தூரத்தில் நின்றே அந்த மசோலியத்தின் அழகையும் கலை நயத்தையும் நாங்கள் கண்டுவியக்கிறோம் .



ஹைதராபாத்தை நிர்மாணித்த முகம்மது குலி குதுப்ஷா வின் அந்த மசோலியம் தான் அங்குள்ள கல்லறைகளிலே மிகப் பெரியது . இரண்டடுக்குடன் கூடியது ...இவ்வளவு பெரிசாவா ஒரு கல்லறையைக்கட்டுவார்கள் என மனம் வியந்ததை, “ஏன் தாஜ்மஹால் இல்லையா ..?” என்று மூளை சட்டென்று பதில் சொல்லி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.



கலையுணர்வு மிக்க இந்த சுல்தானின்ம சோலியத்தை கண்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மனதுக்குள் அவரைப் பற்றி வாசித்திருந்த தகவல்கள் புற்றீசல்களாய்ப் புறப்பட்டு வருகின்றன. சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈரடிக் கவிதைகளைத் திருக்குறளைப் போல் உருது மொழியில் சுல்தான் முகமது குலிஇ இயற்றியிருந்ததை , அவர் இறந்து 350 வருடங்களுக்குப் பிறகுதான் இதாரா இஅதாபியாத் இ உர்து நிறுவனம் தொகுத்து அழகிய நூலாக பிரசுரம் செய்துள்ளது.   உருது மொழிக் கவிதை இயற்றிய  முதல் சுல்தான் என்னும் புகழுக்குரிய இவருக்கு இயல்பாக இருந்த தேசப்பற்றையும், பிறந்த மண்ணின் மீது வைத்திருந்த காதலையும் கவிதைகள்  நெடுக பளிச்சிடுவதைப் பார்க்கலாம் .

உலகம் ஒரு மோதிரம் என்றால் எங்கள் தக்காணம் அதன் நடுவில் பதித்து மின்னும் மாணிக்கம் !



தக்காண  மாணிக்கம் இல்லையேல் அழகேது அந்த மோதிரத்துக்கு ?



எனும் பொருள்பட அமைந்துள்ள கவிதை ஒன்றே அவரின் நாட்டுப் பற்றுக்கு ஒரு சோற்றுப் பதமாகச் சொல்லலாம். இவரது உருதுமொழிப் புலமைக்கு சிறிதும் குறைந்ததல்ல இவரின் தெலுங்கு மொழிப் புலமை. அதோடு பெர்ஷிய மொழியிலும் அவர் பாண்டித்தியம் தனித்திறமை பெற்றவராக இருந்தார்.



அதோ... தெரியுதே அந்தச் சிறிய மசோலியம் தான் கோல் கொண்டாவைக் கைப்பற்றி தக்காணத்தின் தலை விதியையே மாற்றியமைத்த சுல்தானுடையது என்று விரல் நீட்டி சுட்டிக் காட்டியதும் எங்கள் கால்கள் சற்றுத் தூரத்தில் நின்ற அந்த சிறிய மசோலியத்திற்கு வந்து சேர்ந்தன.



இதுதாங்க குலி குதுப்ஷா வுடைய கபர்ஸ்தான்என்றான் அங்கு யாருக்கோ விளக்கிக் கொண்டிருந்த கைடு.



ஆதியிலே பாமினி சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக இருந்து காலப் போக்கில் குதுப் உல் முல்க்காக கோல் கொண்டாவின் ஆட்சியையே பிடித்து அதற்கு முகமது நகர் என்று புதுப் பெயரை சூட்டி ஆண்டிருக்கிறார். இவரை படே மாலிக்என்று மரியாதைதந்து மக்கள் கொண்டாடினார்களாம். அவரது இயற்பெயரைக் கூடக் கூறாமல். ஏறக்குறைய 200 வருங்கள்  தக்காணத்தை  குதுப்ஷாஹி வமி­ம்   ஆளுவதற்குவித்திட்ட சுல்தான் குலி 99 வருங்கள் உயிர் வாழ்ந்திருந்தாராம். இவர்தான் அரச குடும்பத்தினரை அடக்கம் செய்வதற்காக லங்கர் ஃபெய்ஸ்   அஸர் எனும் பிரத்யேகமான பூங்கா போன்ற இடத்தை தெரிந்தெடுத்து அழகுபடுத்தி வைத்திருந்தாராம். கோல் கொண்டாவுக்குள் அவர் நிர்மாணித்த முதல் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவு செய்து கொண்டிருந்த நேரத்தில் ,அவர் மீது வெறுப்புக் கொண்டிருந்த அடாவடித்தனமான மகன் ஜம்ஷீத் ஆள் வைத்து இவரைக் கொலை செய்து விட்டாராம். இவரது உடல்தான் முதன் முதலில் இங்கு அடக்கப்பட்டது .   இவர் கட்டியிருந்த மசோலியத்தில் !



அந்த மசோலியத்தின் முன்னால் நிற்கும் போது அவரது தியாகத்தையும் வீர வரலாற்றையும்  நினைவு  கூர்ந்து பேசாத சுற்றுலாப்பயணிகளே இல்லை எனலாம்.



அதற்கு அருகாமையிலேயே இன்னொரு இரண்டடுக்கு மசோலியம் நிற்கிறது, எட்டுப் பக்க அமைப்புடைய இது, நான்கு பக்கசதுர அமைப்புடைய மற்ற மசோலியங்களிலிருந்து மாறுபட்டு  தனித்  தன்மையுடன் இருக்கிறது.



அங்கு எழுதி வைத்துள்ள விபரக்குறிப்பிலிருந்து இது குலி குதுப்ஷாவைக் கொன்ற மகன் சுல்தான் ஜம்ஷீத் (1543 - 50) தின்  மசோலியம்எனத் தெரிந்தது. குலி குதுப்ஷாவுக்குப் பிறகு ஜம்ஷீத் அரியணையேறினாலும், உயர் மட்டத்திலுள்ள பிரபுக்கள், பிரதானிகள் மத்தியில் மட்டுமின்றி குடிமக்கள் அளவிலும் கூட அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கவில்லை . காரணம், அவர் ஒரு கொடூரமான மனிதர் என்று ஏற்கனவே பெயர் வாங்கியிருந்ததுதான் . இதில் ஒருவேடிக்கை என்னவென்றால் இந்தக் கொடூரமான மனிதருக்குப் பிடித்த பொழுதுபோக்கே கவிதைகள் புனைவதும் , கேட்பதும் தானாம்!



தந்தையைப் போல நூறு வருடங்கள் நாட்டை ஆளப் போகிறோம் என்று அரியணை ஏறிய சுல்தான் ஏழு ஆண்டுகளில் புற்றுநோய் பிடித்து இறந்து போனார்.   அவருக்குப்பின் ஏழு வயதுச் சிறவனாக இருந்த அவரது மகன் சுபான் குலி குதுப்ஷாவை அவசரம் அவசரமாக அதனுடைய தாய் பல்கீஸ் பீவி அரியணையேற்றி வைத்தாள்.... அரசவையோ, நாட்டு மக்களோ அதற்கு ஒப்புதல் தராத நிலையிலும் கூட. ஆறு மாதங்கள் கூட இருக்காது . சுபான்குலிக்கு பதிலாக சுல்தான் ஜம்ஷீதீன் இளைய சகோதரர் இப்ராஹிம் குலியை சுல்தானாக்கிக் கொண்டார்கள். அதன் பிறகுசுபான்குலி என்னவானார், எப்போது இறந்தார் ... போன்ற தகவல்கள் எதுவுமே பதிவேடுகளில்இல்லையாம்!   தந்தையைப்போலவே இப்ராஹிம் குலி மக்களின் செல்ல மன்னராக ஆட்சி செய்தார் , 1550 லிருந்து 1580 வரை . இவர் காலத்தில் தான்வைர வணிகம் தழைத்தோங்கி மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறார்கள். ஆட்சி பரிபாலனத்திலும்நகர விரிவாக்கத்திலும், நீதித் துறையிலும் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். ஆயக் கலைகளத்தனையும்சிறப்புடன் வளரும் விதமாக உரமிட்டார் .



அன்றைக்கு ஹைதராபாத்தின் தாகத்தை தணிக்கும் ஹுசைன் சாகரை நிர்மாணித்ததும் இவருடைய ஆட்சிக் காலத்தில் தான்!



இவர் காலத்தில் சமய நல்லிணக்கம்மிகைத்திருந்தது. பண்டிகைகளும், திருமணச் சடங்குகளும் கூட இன்றளவும் பின்பற்றப்பட்டுவருகின்றன.



சரித்திர ஆசிரியர்களே ஒரு முகமாக பிற்கால சுல்தான்கள் அத்தனை பேருக்குமே இவர் தான் முன்மாதிரி மன்னர் என்று பாராட்டுகிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட அற்புதமான மக்கள் மன்னராக இருந்திருப்பார் என்பதை யாருமேபுரிந்து கொள்ளலாம்.



சுவாரசியமான சரித்திரக் கதை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருந்த போது, இதென்ன , அரை குறையாக, முற்றுப் பெறாமல் அதோ நிற்கிறதே அது...? என்று சற்று தூரத்தில் நின்ற ஒரு சிதிலமான கட்டிடத்தை கேள்விக்குறி  தொங்க எங்கள் பக்கத்தில் நின்றவர்கேட்க, ஓ அதுவா ...? அதுவே ஒரு பெரிய விஷயமாச்சே... என்று கைடு எங்கள் ஆவலைத் தூண்டி விட்டு சொன்ன கதை சற்று வேதனையாக இருந்தது. குலி வமிசத்துகடைசி சுல்தான் தனாஷா எனும் அபுல் ஹஸன் தனது மண்ணறையை தான் அரியணையில் இருக்கும் போதேகட்ட ஆரம்பித்து சிறிது கட்டிக் கொண்டிருந்த போது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்டு அவுரங்கபாத்   சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பனிரெண்டு வருடங்கள் சிறையிலிருந்த சுல்தான் இறக்க, அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவருக்காக அவர் கட்ட ஆரம்பித்திருந்த கல்லறை அவரை அடக்கம் செய்யாத நிலையில் அரை குறையாக இப்படிநிற்கிறது.



இதைக் கேட்ட போது, எவரொவருக்கு எந்த மண்ணை இறைவன் நிணையித்திருக்கிறானோ அதன்படி தான் கிடைக்கும் எனும் தத்துவம் மனதில் நிழலாடியது. பாரதத்தை ஆண்ட முகலாய மாமன்னர் பகதூர்ஷாவுக்கு ஆறடி நிலம் கூட அவர் ஆண்ட மண்ணில் கிடைக்காமல், பர்மாவின் எங்கோ ஒரு மூலையில் தான் இருந்தது! இப்படி அந்ததுக்ககரமான செய்தி கேட்டு மனம் அலைந்து கழிந்து கொண்டிருந்த போது எனக்குள் ஒரு கேள்வி. அதெப்படிஅவர் உயிருடன் ஆட்சியில் இருந்தபோதே தனது மண்ணறையைக் கட்டிக் கொண்டிருந்தார் ?

(
அடுத்த இதழில் )