ஒரு மார்க்க மேதையின்பத்வா
அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அறபுக் கல்லூரியின்நிறுவனர் அஃலா ஹள்ரத் கிப்லா ( ரஹ் ) அவர்களின் ஆசிரியரான மவ்லானா குலாம் காதிர் மதராஸி ( ரஹ் ) அவர்கள் அளித்த ஃபத்வாக்களில் சில ...
சிராதுல் இஸ்லாம் வசிராதுந் நஜாத் என்ற நூலின் ஆசிரியரான குலாம் காதிர் மதராஸி ( ரஹ் ) அவர்களிடம் அஃலா ஹள்ரத் அவர்கள் 7 வருட காலம் மார்க்கக் கல்வி பயின்றுள்ளார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அன்னாரது அரபி உர்தூ ஃபத்வாக்கள் மிகவும் பிரபலமானவை.
உதாரணத்திற்குச் சில :
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபாஅத் செய்வதற்கு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? இல்லையா?
பதில்: தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கேள்வி: வஹ்தத்துல் வுஜூத் கொள்கை சத்தியமா? வழிகேடா, அதை ஏற்றுக் கொள்பவன் முஃமினா? காஃபிரா?
பதில்: சத்தியமே. அதை ஏற்றுக் கொண்டவர் முஃமின் ஆவார்.
கேள்வி: யாரசூலல்லாஹ்! யா ஷெய்கு அப்துல் காதிர்! ஷை அன்லில்லாஹ் என்று கூறுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது ஷிர்கா?
பதில் : அனுமதிக்கப்பட்டது; ஷிர்க் அல்ல.
கேள்வி : மீலாது விழா கொண்டாடுவது நன்மையா ? பாவமா ?
பதில் : நன்மையே .
கேள்வி : நபி அவர்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயரால் ஃபாத்திஹா ஓதப்பட்ட உணவு ஹலாலா ? ஹராமா ?
பதில் : ஹலால் .
பதில் : கூடும் .
கேள்வி : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்போன்று வேறொருவர் உருவாவது சாத்தியமா?
பதில் : சாத்தியமில்லை .
கேள்வி : நபிகளார் மற்றும் இமாம் ஹுஸைன் ( ரலி ) போன்றோரின் நினைவுச் சின்னங்கள் , திருமுடி ஆகியவற்றைத் தரிசிப்பதும், கண்ணியப்படுத்துவதும் அனுமதிக்கப்பட்டதா ? அல்லது குஃப்ரா?
பதில் : அனுமதிக்கப்பட்டதே .
கேள்வி : இமாம்களைப் பின்பற்றினால் தான் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றியதாக ஆகுமா?
பதில் : ஆம். இதை மறுப்பவன் ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டும்வெளியேறினவனே. இவ்வாறே தஹ்தாவி என்ற நூலில் பாபுத் தப்ஹ் ( பிராணிகளை அறுப்பது பற்றிய ) பாடத்தில் வந்துள்ளது ..
கேள்வி : ( தப்லீக் வாதிகள் போற்றும் ) தக்வியதுல் ஈமான் என்ற நூல், அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு ஆதரவானதா ? எதிரானதா ?
பதில் : எதிரானது .
கேள்வி : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் மறைவான ஞானத்தை அறிந்துள்ளார்களா ?
பதில் : அறிந்திருக்கிறார்கள். எனினும், அதன் எல்லையை நாமோ, நீங்களோ விளங்கிக் கொள்வதென்பது பாரதூரமான இயலாத காரியமாகும்.
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும், ஏனைய நபிமார்கள் வலிமார்களிடமும் வாழும் காலத்திலும், அவர்கள் மறைவிற்குப் பின்பும் உதவி தேடுவதுகூடுமா?
பதில் : கூடும் .
கேள்வி : தலாயிலுல் கைராத் நூலை வழமையாக ஓதி வருவதால் நன்மையா ? தீமையா ?
பதில் : நன்மை .
கேள்வி : ஹஷ்து பஹஷ்த் என்ற நூலை படிப்பது நன்மையா ? தீமையா ?
பதில் : நன்மை .
கேள்வி : வஹ்ஹாபிய பிரிவினர் அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவரா ? இல்லையா ?
பதில் : அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைவிட்டும் வெளியேறியவர்களே . ஏனெனில், சுன்னத் ஜமாஅத்தினரையும், அதன் அறிஞர் பெருமக்களையும் கொலை செய்வதைக்கூடும் என அவர்கள் வாதிடுகின்றனர் . இவ்வாறு தான் ஷாமீ ( ரத்துல் முஹ்தார் என்ற நூலில் பாபுல் புஙாத் ( அழிச்சாட்டியம் செய்வோர் பற்றிய ) தலைப்பில் வந்துள்ளது .
கேள்வி : தக்வியதுல் ஈமானில் உள்ள கொள்கைகளை ஏற்றுக்கொள்வோர் பற்றி மதராஸ் உலமாக்களால் ஃபத்வா கொடுக்கப்பட்டு நவாப் அஜீம் ஜாஹ் பஹதூர்அவர்களாலும் கையயழுத்திடப்பட்ட மார்க்கத் தீர்ப்பு சத்தியமானதா ?
பதில் : சத்தியமானதே .
கேள்வி : ஆய்வு செய்யத் தகுதியில்லாதவரும், பாமரரும் ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிட்டு , நான்கு இமாம்களை ஏற்றுக் கொள்வதில்லையே. இது கூடுமா ?
பதில் : கூடாது .
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நூரிலிருந்து தான் மற்ற படைப்புகள் படைக்கப்பட்டன என்பது ஹதீஸ்களின் கருத்துக்கு எதிரானதா ?
பதில் : ஹதீஸ்களின் கருத்துக்கு எதிரானது அல்ல .
பதிலளித்தவர் : குலாம் காதிர் உஃபிய அன்ஹு
நன்றி : அஹ்லுஸ் சுன்னா மாத இதழ்