• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      May   2014      »      நிறைவுக் கருத்து


வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில் ..

                                                                       நிறைவுக் கருத்து

 


அனைவரும் நன்கு விளங்கி அறியும் பொருட்டு ஓர் உதாரணம் கூறுகின்றோம். சாதாரண இரும்பை யாரும் கையால் தொடலாம். அதனால் எத்தகைய தீங்கும் இல்லை . ஆனால் அதை நெருப்பில் போட்டாலோ அதற்குச் சூடுண்டாக்கி  சிவந்து அதுவும் நெருப்பாகவே காணப்படுகின்றது . தனது சுய நிறமாகிய கருப்பைப் போக்கி நெருப்பின் நிறமாகச் செம்மையைப் பெறுகின்றது. அது சமயம்எவரும் அதைத் தொட முடியாது . தொட்டாலோ கரித்துப்போடும் . இவ்வாறே அல்லாஹ்வின் ஜலாலியத்தெனும் நெருப்புத்தன்மையைப் பெற்ற அவுலியாக்கள் முதலில் , சாதாரண மனிதர்களாய் இருந்த போதிலும் அவனின் குணத்தைக் கொண்ட பிறகு தனிப்பட்ட மகத்துவமும் மாண்பும் சக்தியும் பெற்ற மேதாவிகளாகி விடுகின்றார்கள்.



எனவே குர்ஆன் , ஹதீது , இஜ்மாஃ , கியாஸ் ஆகியவற்றைக் கொண்டு மேலே ஒருவாறு கூறியுள்ளோம். அவற்றுக்கு ஆதாரமாக முஃதபரான கிரந்தங்களில் சிலவற்றை மேற்கோளாகக் காண்பித்திருக்கிறோம் .



குர்ஆன் , ஹதீது , இஜ்மாஃ , கியாஸ் இவற்றுள் சிலதை ஒப்புக் கொண்டு சிலதைத் தள்ளுவானேயானால் அவன் ஸுன்னத்து - வல் - ஜமா அத்தை விட்டும் நீங்கினவனாவான் .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு விடுத்தம் நடந்த ஸுன்னத்தாகவிருந்தாலும் சரி , பல விடுத்தம் நடந்த ஸுன்னத்தாக விருந்தாலும்சரி, அவற்றுள் ஒன்றை இலேசாகக் கண்டாலும் , இன்கார் செய்தாலும் குப்ரு உண்டாகி விடுமென்று மார்க்கத்திலேற்பட்டிருக்க, ஒரு விடுத்தம் நடந்த ஸுன்னத்துதானே என்று சொல்வது மின்றி , அந்தஸுன்னத்தைத் தொடராமல் இன்காரும் செய்கின்றார்கள் . இது மிகமிக ஆச்சரியம்! என்று மெளலானா ஷாஹ் முஹிய்யுத்தீன் ஸாஹிபுவேலூரி ( ரஹ் ) அவர்கள்பஸ்லுல்கிதாப் 82 ஆவது பக்கத்தில் தெளிவுபடக் கூறியுள்ளார்கள்.



எனது உம்மத்துகள் பிற்காலத்தில் எழுபத்து மூன்று கூட்டங்களாகப் பிரிவார்கள் . அதில் எழுபத்திரண்டு கூட்டங்கள் நரகவாதிகள். ஒரு கூட்டத்தார் மாத்திரம் ஈடேற்றமடைவார்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   கூறியபோது , அந்த ஒரு கூட்டத்தார் யார் என்று கேட்கப்பட்டது .



 நானும் எனது அஸ்ஹாபிகளும் எந்த ஒன்றின் பேரில் தரிபட்டிருக்கிறோமோ அந்த ஒன்றின் பேரில் தரிப்பட்டவர்களாக இருக்கும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கப்படுத்தினர்கள் . ( திர்மிதி - இப்னுமாஜா - அபூதாவூது )



மேற்குறிப்பிட்டபடி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களும் , அவர்களின் அருமைத் தோழர்களும் எந்த ஒன்றின் பேரில் தரிப்பட்டிருக்கிறார்களோ , அந்த ஒன்றின் பேரில் தரிப்பட்டவர்கள் தாம் ஸுன்னத் வல் ஜமா அத்துக் கூட்டத்தாராக இருக்கும் . இவர்கள் தாம் அந்த 73 கூட்டத்தாரில் ஈடேற்றம் பெற்ற ஒரு கூட்டத்தாராகஇருக்கும் .

மேலும் , சன்மார்க்கத்தேர்ச்சி பெறாத சில அவாம்களான ஜனங்கள் தப்ஸீர் ஞானமோ , ஹதீதின்தாத்பரியமோ விளங்காமல் தமது மனத்திற்குத் தோன்றிய பிரகாரமெல்லாம் குர்ஆன் ­ ரீபின்ஆயத்துக்களுக்கு ஸபபு நுஸூல் - தெரியாமல்   தப்புந் தவறுமாகப் பொருள் கூறி மேற்கோள்காட்ட முற்பட்டிருக்கின்றனர் .



குர்ஆனுக்குத்தனது சொந்த போதனையைக் கொண்டு வியாக்கியானஞ் செய்வானேயானால் அவன் காபிராகி விட்டான் எனவும் , எவன் தன்னுடைய சுய அறிவைக் கொண்டு ( தனது நோக்கத்தின் படி ) குர்ஆனுக்கு வியாக்கியானம் செய்கிறானோஅவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் எடுத்துக் கொள்வான் எனவும் திருத்தூதர் முஹம்மது முஸ்தபாஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள் .



மார்க்கம் இன்னதெனத் தெரியாதவர்கள் நாங்களும் இஸ்லாத்திற்காகச் சேவை செய்கின்றோம் - இஷாஅத்துச் செய்கின்றோம் என்று பறைசாற்றிக் கொண்டு குர்ஆன் ஆயத்துக்களுக்குத் தாறுமாறாக மனதில் தோன்றியபடியெல்லாம் அர்த்தம் கூறி , அனர்த்தம் செய்து , உண்மையான உலமாக்களையும் ஆரிபீன்களையும் தூணிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். அன்னவர்களுடையவே ­ ஷம் வெளுத்து அவர்களுடைய துவேஷச் செயலைஉலகுக்கு உணர்த்த இவ்வெளியீடு உதயமாகி இருக்கின்றது .



குர்ஆனுக்குளாஹிர் , பாத்தின் ( உள்ளரங்கம் , வெளியரங்கம் ) இருவிதப்பெயர்களுண்டு . இவ்விரண்டையும் கடைப்பிடித்து ஒழுகி நடப்பவர்களே உண்மை உலமாக்களாவர். மேலே , இருவித அபிப்பிராயங்களையும் காண்பித்திருப்பதால் விளங்கிக் கொள்ளச் சக்தியற்றவர்கள் குதர்க்கஞ்செய்யாது , ளாஹிர் - பாத்தின்இரண்டையுமறிந்த உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாக !



கிருபையுள்ளஅல்லாஹு தஆலா நம்மனைவரையும் அந்த வழிகெட்ட எழுபத்திரண்டு கூட்டங்களில் நின்றும் விலக்கி , ஈமானைஇழக்காமலும் , குப்ரை நெருங்காமலும் காப்பாற்றி வெற்றிபெற்ற ஸுன்னத் - வல் - ஜமா அத்துக்கூட்டத்திலேயே நிலைபெறச் செய்து , அழகான முத்திராங்கமான , ஹுஸ்னுல் - காத்திமாவான நல் முடிவைத் தந்தருள்வானாக . ஆமீன் .

  ( நிறைவுபெற்றது )