இயற்கை வாழ்வியல்நோயும் சிகிச்சையும் – மூலம் (Piles) L.A. முஹம்மது அப்துல் காதர்
நாளமில்லாச்சுரப்பிகள்
அட்ரீனல் மற்றும் கணையம் சுரப்பிகள் :
மேல் வயிற்றுப் பகுதியில் கணையமும், சிறுநீரகத்தின் மேல் பகுதியில் தொப்பி போன்ற வடிவத்தில் அட்ரீனல் சுரப்பியும் உள்ளன. உடலின் நெருப்பு மூலகத்தைக் கட்டுப்படுத்துகின்றன . இரத்த சர்க்கரை அளவையும் சோடியம் மற்றும் நீரின் அளவை சம நிலைப்படுத்துகின்றன . கணையம் இன்சுலினைசுரக்கிறது .
Solar Plexus : ( சுவாதீஸ்தானம் ) தொப்புள் பகுதியாகும் . அபாய வாயுவைக்கட்டுடப்படுத்துவதால் மலம் , சிறுநீர் கழிக்கவும் உதரவிதானத்திற்கு கீழுள்ள எல்லா உறுப்புகளைக்கட்டுப்படுத்தவும் உதவுகிறது .
மூலாதாரம் ( கருப்பை , விதைப்பை ):
செல் , நரம்பு , தசை , எலும்பு , எலும்புமஜ்ஜை மற்றும் விந்து உற்பத்தி இவைகளை பராமரிக்கிறது . வாலிபக்கவர்ச்சியை ஆண் , பெண் இருபாலருக்கும் தருகின்றது .
நிணநீர் சுரப்பிகள் (Lymph Glands)
இது நாளமில்லாச் சுரப்பி இல்லையெனினும் நோய்த்தடுப்பு முறையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலில் ஏதும் காயம் ஏற்பட்டால் நெறிகட்டி அந்த இடத்தில் சீழ்உருவாகாமல் பாதுகாக்கிறது .