• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      May 2014      »    ஒழுக்கங்கள்  



பள்ளியில் பேணவேண்டிய ஒழுக்கங்கள்


மறைஞானப் பேழை நிறுவனர்

அஷ்ஷைகுல் காமில்

குத்புஸ்ஸமான் ஷ ­ ம்ஸுல் வுஜூத்

ஜமாலிய்யாஅஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

மிஹ்ராஜ்   என்பதுஇறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது   .     இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்திஅவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும்   எந்தப்பிரிவுமில்லை நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய்அருப்பணிப்பதே மிஹ்ராஜ்   எனும் உயர்ச்சியாகும்   .  

-   ரிஸாலதுல்கெளதிய்யா   -   நூலில்சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்   -



மஸ்ஜித்   -   பள்ளியில் பேணவேண்டிய ஒழுக்கங்கள்  

  1.        பள்ளிக்குள் நுழையும் போது ஸலாம் சொல்லி வலது காலை வைத்துநுழைய வேண்டும்   .
  2.       உட்காருவதற்கு முன்பாக பள்ளிக்காக இரண்டு ரக்அத்துகள் காணிக்கைத்தொழுகை தொழ வேண்டும்   .
  3.       விற்பனை செய்வதோ   ,   வாங்குவதோ   (   வியாபாரம்   )   கூடாது   .
  4.       வாள்   ,   கத்திபோன்ற ஆயுதங்களை தொங்கவிடக் கூடாது   .
  5.       காணாமல் போன பொருளைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது   .
  6.      அல்லாஹ்வுடைய திக்ருகள்   ,   ஸலவாத்துக்கள்தவிர வேறு எந்தப் பேச்சிற்காகவும் சத்தம் போட்டு கூச்சல் போடக் கூடாது   .
  7.       உலக சம்பந்தமான எந்தப் பேச்சுகளையும் பேசக் கூடாது   .
  8.       மக்களின் பிடரிகளைத் தாண்டி   ,   இடித்துக்கொண்டு செல்லக்கூடாது   .
  9.       உட்காரும் இடத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது   .
  10.       தொழுகை அணி வகுப்பில்   (   ஸஃப்பு   )   ஒருவருக்கொருவர்நெருங்கிக் கொண்டு   ( ருகூவு   ,   ஸஜ்தாசெய்ய இயலாத சூழ்நிலைக்கு   )   நிற்கக்கூடாது   .
  11.       பள்ளியில் எச்சில் மற்றும் உடல் அசுத்தங்களைச் செய்யக் கூடாது   .
  12.       நெட்டி   (   சுடக்கு   )   முறிக்கக்கூடாது   .
  13.       தொழுகை தொழும் நபர்களை உள்ளே கடந்து செல்லக் கூடாது   .
  14.       அசுத்தங்களை விட்டும்   ,   சிறுவர்களைவிட்டும்   ,   பைத்தியக்காரர்களை விட்டும்   ,   தண்டனைகள்நிறைவேற்றுவதை விட்டும் பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்   .
  15.      அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்தும்   ,   பூமான்நபி   (   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   )   அவர்கள்மீது அதிகமாக ஸலவாத் ஓதிக் கொண்டும் இருக்க வேண்டும்   .     இவைகளை மறந்து பொழுதுபோக்காக   ,   வீண்பேச்சுகளை பேசிக் கொண்டு இருக்கக் கூடாது   .

குறிப்பு   :   மேற்கண்டஅனைத்து வி   ­   யங்களும் புகாரீ   ,   முஸ்லிம் , அபூதாவூது , இப்னுமாஜா , நஸயீ , திர்மிதீபோன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன   .  


          பள்ளியின்ஒழுக்கங்களைப் பேணுவோம்   !   இறையருளைப்பெறுவோம்   !!  


        தொகுப்பாளர்   :   காயல்இப்னு யூசுப் என்கின்ற ஜெஸ்முத்தீன்