நினைத்ததெலாம்நடந்தது !
இவ்வருடம் 5.5.2014 அன்று பெரம்பலூர் விஜயத்தில் மிக ஸ்வாரஸ்யமான விஷயங்கள் பல நடந்தன ..... நடத்தியது யார் ? வேறு யாராக இருக்க முடியும்? வாப்பா நாயகம் அவர்கள் தாம் !!!
முன் ஏற்பாடுகள் ...
இந்த வருடம் நாயகம் அவர்கள் முதன் முதலாக இரவு ஒரு நாள் தங்கியிருந்து காலை உணவுக்குப்பின் திருச்சி செல்வதாக சொல்லப்பட்டது . நாங்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியில் காலை பஜ்ருக்குப் பிறகுஞான மஜ்லிஸ் வைக்கலாம் என்று மைக் , ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தோம் . பிறகு இரண்டு முரீதுப் பிள்ளைகள் வீட்டுக்குச்சென்று வருவது எனவும் முடிவு செய்து ஒரு பெரிய பிளான் செய்து லிஸ்ட் எல்லாம் ஏற்பாடு செய்து முதலில் நூர்ஜஹான் பீ அவர்கள் வீட்டிற்கும் பிறகு கலீபா முஹம்மது காசிம் அவர்கள் , அல்ஹாஜ் ஷ ர்புதீன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து காலை கிளம்பும் போது கடைசியாக அப்துல் சமது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டிற்கும் சென்று விட்டு திருச்சி புறப்படுவதாக ஏற்பாடு செய்தோம் .
ஆனால் !!! நடந்தது ....
4.5.2014 அன்று மதுரஸாவில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ராவுத்தர் அண்ணன் அவர்கள் வாப்பாவிற்கு உடல்நலத்தைக் கருதி நாளை காலை 11.30 மணிக்கு வந்து விட்டு இரவு 8.00 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார்கள் என சொன்னதும் நாங்கள் துயரத்தில் ஆழ்ந்தோம் . அதே போல் இந்த வருடம் யார் வீட்டுக்கும் வாப்பா போக வேண்டாம் ! உடல் நிலை காரணமாக ஒரே வீட்டில் வைத்துப்பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள் . நாங்கள் அனைவரும் மனம் கசிந்தவர்களாக அங்கேயே வாப்பா எங்கள் வீட்டிற்கும் தாங்கள் வரவேண்டுமென்று துஆ செய்தோம் .
5.5.2014 காலை .....
வாப்பா நாயகம் அவர்கள் காலை 12.00 மணிக்கு முதலில் ஆஷிக் டிராவல்ஸ் A. அப்துல் சமது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டிற்கும் பிறகு நூர்ஜஹான் பீ ( ஷம்சு , அமானுல்லா - குவைத் ) அவர்கள் வீட்டிற்கும் சென்று துஆ செய்துவிட்டு , கலீபா காசிம் அவர்கள் வீட்டில் தொழுகை , மதிய உணவிற்குப் பின் அல்ஹாஜ் ஷர்புத்தீன் அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு மாலை பல முரீதீன்கள் முஹிப்பீன்கள் 6.30 மணி வரை சந்திக்க , பிறகு 1.30 மணி நேரம் பெரம்பலூர் முரீதீன்களை அழைத்துப்பேசினார்கள் . பிறகு இரவு உணவுக்குப் பின் திருச்சிக்குப்புறப்பட்டார்கள் .
வாப்பா நாயகம் அவர்கள் “ இந்த வருடம் முடியாது; அடுத்து வருடம் முதலில் உங்கள் வீட்டிற்குவந்து விட்டு பிறகு கலீபா வீட்டிற்கு வருகிறோம் ” என்று சென்ற வருடம் சொன்னார்கள் .
ஆனால் இந்த வருடம் நாங்கள் போட்ட திட்டத்தில் அப்துல் சமத் அவர்கள் வீட்டிற்கு கடைசியாகப்போவது எனத்தான் ஏற்பாடு . ஆனால் வாப்பா நாயகம் அவர்கள் முதலில் அப்துல் சமதின் வீட்டிற்குத் தான் சென்றார்கள் .
சொன்னதை செய்யும் நாயகம் என நாங்கள் போற்றி புகழ்ந்தோம் .
விஷயம் - 2
நாங்கள் வாப்பா நாயகம் அவர்கள் தலைமையில் மஜ்லிஸ் நடக்கவில்லையே எனப் பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது மணி ( மாலை 5.30) ஆனால் 6.30 மணி அளவில் வாப்பா நாயகம் அவர்கள் எல்லாமுரீதீன்கள் முஹிப்பீன்கள் எல்லோரையும் சந்தித்து விட்டு ஓய்வாக இருந்தார்கள் அப்போது நாங்கள் சென்று பேசினோம் . சுமார் 1.30 மணி நேரம் எங்களிடம் பேசினார்கள் . நாங்கள் பல சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற்றோம் . அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறாக நாங்கள் இரண்டு நாளில் போட்ட திட்டம் அனைத்தையும் ஒரு அரைநாளில் மிக திருப்தியாக நாயகம் அவர்கள் முடித்துக் கொடுத்தது எங்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது .
இன்னும்பல ஸ்வாரஸ்யமான கராமத்துகள் எல்லாம் நடந்தன . அவற்றை வேறெரு சமயத்தில் கூறலாம் .
மேலும் நாயகம் அவர்களை வரவேற்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திரும்பும் போதும் பெரம்பலூர் முரீதீன்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் பாதுகாவலர்கள் போல அழைத்து வந்தது ஊரையே திரும்பி பார்க்கச் செய்தது . மேலும் நாயகம் அவர்களுக்கு மிக மன மகிழ்வை ஏற்படுத்தியது .
துயரத்தில் இருந்த எங்களுக்கு மிகப்புத்துணர்வாக இருந்தது நாயகத்தின் வருகை . அல்ஹம்துலில்லாஹ் .
தகவல் : அ . ஆஷிக் அலி ஹக்கிய்யுல் காதிரிய் பெரம்பலூர்