• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      May   2014      »     உமர்   (   ரலி   )   புராணம் 


உமர் ( ரலி ) புராணம் 


ஆசிரியர் 
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா 
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


அகழ்யுத்தம்

( கலிவிருத்தம் )



உளவ றிந்தே யுரைக்க வந்தனன் 
உளம றிந்தவு யர்ஸ பிய்யா 
உளவ னைக்கொல வுரைத்தும் ஸாபித் 
கிளவி கேட்டிலர் கெண்டற் செய்திலர்

கொண்டு கூட்டு

( அந்தயூதன் ) உளவு அறிந்து உரைக்க வந்தனன்உளம் அறிந்த உயர் ஸபிய்யா உளவனைக்  கொல உரைத்தும் ஸாபித் கிளவிகேட்டிலர் கெண்டற் செய்திலர்.



பொருள் :   

அந்த யூத உளவாளி அந்த விடத்திற்குச்சென்று உளவு அறிந்து மற்றவர்களிடம் உரைக்க வந்தனன். இதனை உளத்தால் அறிந்த உயர்வுமிக்க ஸபிய்யா நாயகி ஸாபித்திடம் உளவனைக் கொல்லக் கூறினார். அதனை ஸாபித் கேட்டிலர் அவனைக்கொல்லவு மில்லை .


குறிப்பு
      
உளவன் : உளவாளி . கிளவி : சொல் . கெண்டல் : கொல்லல் .