தலையங்கம்
தாய்மை இந்தியா !
இப்போது இந்தியாவே காவிமயமாகக் காட்சியளிப்பதாக ஒரு தோற்றம் புலப்படுகிறது!
ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்புகள். நீதிமன்றங்களில் அனுமதி. ஊடகங்களில் அடிக்கடி வரும் செய்திகள்!. பலமாநிலங்களில் அவர்களின் தொடரும் ஆட்சிப்பிடிப்புகள்!. அவர்கள் பலமடைவது போலத்தெரிகிறது!
இப்போது நாட்டிற்கு என்ன தேவை?
பிரிவினை வாதம் பெருகும்போதெல்லாம் ஒற்றுமை கீதம் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். அது இயற்கையின் விதியாகவும் அமைந்திருக்கிறது!.
எய்ட்ஸ் நோய் உலகையே பயமுறுத்திக் கொண்டிருந்தது. அதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அதுபற்றிய அச்சமே மக்களுக்கு இல்லாமற் போய்விட்டது!
அடுத்து எபோலா அச்சுறுத்தியது!
இப்போது அதற்கும் மாற்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது!
இதுபோல இயற்கைக்கு மாற்றமான ஒன்று தோன்றி முளைக்கும்போதெல்லாம் இயற்கையே அதற்கொரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும்!
பிரிவினை வாதம் பலம் பெறும்போதெல்லாம் ஒற்றுமை கீதமும் தானாகவே ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிடும்!
ஆன்மிகவாதிகள் மக்களுக்கிடையே ஒற்றுமையை - நல்லிணக்கத்தை - சகிப்புத்தன்மையை வளர்த்தால் பிரிவினை வாதம் தானாகவே வலுவிழந்து போகும்!
தூய்மை இந்தியா என ஒலிக்கும் இந்தியாவில் - எல்லோரும் ஒருதாயின் பிள்ளைகள் என்ற தாய்மை இந்தியாவை உருவாக்குவோம்!