Pezhai » 2014 » Nov2014 » முஸ்லிம் உலகம்
முஸ்லிம் உலகம்
ஜெர்மனி
ஜெர்மானியப் பாட சாலைகளில் இஸ்லாமிய முறைப்படி மாணவர்களுக்குத் தொழுவதற்கான உரிமையை அந்நாட்டின் சமஷ்டி நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்திருந்த சட்ட ரீதியான பிரச்சனைகளுக்குப் பின்னரே இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. ஜெர்மனியில் 4 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாத்தைத் தழுவிய பெற்றோர்களின் 16 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தமது இடைவேளை நேரத்தில் அவர்களின் மேலங்கியைக் கழற்றி அவற்றின் மீது பாடசாலை மண்டபத்தில் தொழுதுள்ளனர். அப்போது பாடசாலை அதிபர் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெர்லின் உயர் பாடசாலைகளின் மைதானங்களில் தொழுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தொழுவதற்கான அனுமதி மறுத்தார். இதன் பின்னரே தீவிர பிரச்சினை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் சமஷ்டி நீதிமன்றமொன்று பாட சாலைகளில் முஸ்லிம் மாணவர்களுக்கு தொழுவதற்கான அனுமதியை வழங்கியது.
1500 வருடங்கள் பழமை வாய்ந்த இரகசிய பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகை பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இயேசு கடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருதுவதாக இஸ்லாமிய நம்பிக்கை கூறுகின்றதுடன், இப்பழமை வாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப் பற்றி இயேசு முன்னறிவிப்புச் செய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல்குனாய் செய்தி நிறுவன மொன்றுக்கு தெரிவத்துள்ளார். 1500 வருடங்கள் பழமை வாய்ந்த இந்நூலானது பர்னபாஸ் கிறிஸ்தவ நூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன், முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னபாஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தாபகராக பாரம்பரிய முறையில் அடையாளப்படுத்தப்படுகின்றார். விலங்குகளின் தோலில் எழுதப் பட்டுள்ள இந்த பைபிளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியுமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துருக்கியின் தலைநகர் அங்காராவில் அமைந்திருக்கும் அங்காரா இன அமைப்பியல் அருங்காட்சியகத்தில் இந்த பைபிளானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள பழமை வாய்ந்த பைபிளின் பெறுமதி 28 மில்லியன் அமெரிக்க டாலருக்கும (40 மில்லியன் லீரா) அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் புயல்
அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் மதம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? அது கிறிஸ்தவ மதமல்ல. 2012 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட, ஐக்கிய அமெரிக்க மத ரீதியான சனத் தொகைக் கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் மிக அதிகமாகப் பரவி வரும் மதமாக இஸ்லாம் விளங்குகின்றது. ஐக்கிய அமெரிக்க மத ரீதியான சனத் தொகைக் கணக்கெடுப்புத்தரவுகள், அமெரிக்க மதஅமைப்புகளின் புள்ளி விபரங்களுக்கான சங்கத்தினால் தொகுக்கப் பட்டுள்ளது. இவ் வமைப்பினால் 2000 - 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் சனத் தொகைத் தரவுகளே வெளியிடப் பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவினுள் வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை யானது 1 மில்லியன் முதல் 2.6 மில்லியன், அதாவது 66.7 சதவீதத்தாலான துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை அமெரிக்காவின் ஒட்டுமொத்த சனத்தொகை விகிதத்துடன் உற்று நோக்கும்போது, கிறிஸ்தவ மதப்பிரிவுகள் வளர்ச்சியானது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ மதமானது தமது செல்வாக்குள்ளவர்களைத் தொடர்ந்து இழந்து வருகின்ற அதே வேளை, இஸ்லாம் மதமானது அங்கத்தவர்களை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றதுடன் வணக்கஸ்தலங்களும் அதிகமாகக் கட்டப்பட்டு வருகின்றன.
நாங்கள் நீண்ட காலத்து கிறிஸ்தவ நாடாக இருக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒருமுறை குறிப்பிட்டிருந்தது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். ஐக்கிய அமெரிக்காவில் 2000ஆம் ஆண்டு 1200க்கும் குறைவான பள்ளிவாசல்களே காணப்பட்டன. ஆனால் தற்போது 2016 பள்ளிவாசல் காணப்படுவதாக புதிய கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும் அமெரிக்காவில் தொடர்ச்சி யாக வளர்ச்சியடைந்து வரும் மதமாக இஸ்லாம் மாத்திரம் காணப் படுவதில்லை. புதிய கணிப்பீட்டின் படி அமெரிக்காவில் 2000 - 2010 காலப்பகுதியில் கிறிஸ்தவம் அல்லாத மதப்பிரிவினர்கள் 32 சதவீதத்தினால் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஏறத்தாழ 150 மில்லியன் மக்கள் எவ்வித மதப்பிரிவுகளையும் பின்பற்றாதவர்கள் என இப் புதிய கணிப்பீடு தெரிவிக்கின்றது. இத் தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையின் அரைவாசியாகும் என்பது கவனத்தில் குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்.ஸின் உண்மை முகம்
உலகமுஸ்லிம்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த ஐ.எஸ். இயக்கத்தின் உண்மை முகம் இப்போது உலகுக்குத் தெரியவந்துள்ளது.
தன்னை முஸ்லிம்களின் கலீபா என பிரகடனப்படுத்திக் கொண்ட அதன் தலைவர் அபூபக்கர் பகுதாதி என்பவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத்தின் கையாள். யூதப் பெற்றோருக்குப் பிறந்த அவரது உண்மைப் பெயர் ஷைமோன் எலியூட். தன் உளவுப்பணிகளுக்காக மொசாத் அமைப்பு இராணுவப்பயிற்சி உட்பட அனைத்துப் பயிற்சிகளும் அளித்து இறக்கிவிட்டுள்ளது. ஐநாவின் பயங்கரவாதப்பட்டியலில் ஐ.எஸ். இருந்தாலும் அதற்கு மறைமுகமாக பொருளுதவி செய்வது அமெரிக்கா தான். அதற்கு அமெரிக்க காங்கிரஸ் 2104 செப்டம்பர் வரை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துரோகி 2004 முதல் 2009 வரை குவாண்டமோ சிறையில் இருந்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒருங்கிணைத்து திரட்டி அவர்களை அழிப்பதும் அவர்களால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படாதிருக்கவும், அவர்களின் ஈவிரக்கமற்ற கொலைகளால் முஸ்லிம்கள், இஸ்லாத்தின் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தத்தான்!
தகவல்: அல் முஜ்தமா அறபு மாத இதழ்.