• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

திருமுல்லைவாசல் தர்ஹா ­ ஷரீஃபில் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் 50 ஆம்ஆண்டு கந்தூரி விழா !

பொன்விழா சிறப்பு மலர்
இறையருட்பா - குறுந்தகடு வெளியீடு !



12.09.2014 வெள்ளியன்று திருமுல்லைவாசல் தர்ஹா ­ ஷரீஃபில் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் ( ரலி ) அவர்களின் 50 ஆம் ஆண்டு கந்தூரிப் பெருவிழா 1435 துல்கஃதா பிறை 7(02.09.2014) செவ்வாய் மாலை புதன் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி பிறை 17(12.09.2014) வெள்ளி மாலை சனி இரவு கந்தூரி நிறைவு பெற்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது !


சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் உத்தரவுப்படி மதியம் 2.30 மணிக்கு பர்ஸன்ஜிய் மெளலிது ஓதப்பட்டது . அஸர் தொழுகைக்குப் பின் பொன்விழா கந்தூரி சிறப்பு மலர் வெளியீட்டு விழா சங்கைமிகு சையித் மஸ்வூத் மெளலானா அல்ஹாதீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சையது ஆதிஃப் மெளலானா ஹ.காதிரிய், அவர்கள் கிராஅத் ஓத , ஆலிம்புலவர் நபிபுகழ்ப்பா பாடினார் .  தலைவர் அவர்களின் தலைமை உரைக்குப்பின் இ.யூனியன் முஸ்லிம் லீக் மாநில உபதலைவர் தளபதி மெளலவி ­ ஃபீகுர் ரஹ்மான் மன்பயீ உரையாற்றினார் . ஆலிம்புலவர் மலர்பற்றியும் குறுந்தகடு பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார் . அதன் பின் மெளலவி , ஹாபிழ் , அஸதுல்லஹ் என வாப்பா நாயகம் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் சிறப்பானதோர் உரை நிகழ்த்தினார் . திருச்சி கிப்லா ஹள்ரத் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் .


பொன்விழா மலரை சையத் நூருல் அமீன் மெளலானா அவர்கள் வெளியிட முதல் பிரதிகளை மெளலவி , ஹாபிழ் , ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத், தளபதி மெளலவி ­ ஃபீகுர்ரஹ்மான் மன்பயீ , சையித் யாஸீன் அலி மெளலானா மற்றும் திருமுல்லை வாசல் பிரமுகர்கள் , கலீபாக்கள் , சபை முக்கியஸ்தர்கள் பெற்றுக் கொண்டனர்தமிழக பிரபல திரைப்பட பின்னணிப்பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ , உன்னிமேனன் மற்றும் பாடகர்கள் பாடியுள்ள சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் இறையருட்பா குறுந்தகடினையும் சையத் நூருல் அமீன் மெளலானா அவர்கள் வெளியிட முதல் பிரதிகளை துபையிலிருந்து கந்தூரி விழாவிற்காகவே வருகை தந்திருந்த சையித் அலி மெளலானா , மற்றும் மதுக்கூர் ஜமாஅத் தலைவர் முஹிய்யுத்தீன் மரைக்காயர் , தலைமை கலீபா எச் . எம் . ஹபீபுல்லாபி . எஸ் . ஸி . ஆகியோர்  பெற்றுக் கொண்டனர் .

மக்ரிபு தொழுகைக்குப்பின் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராதிபு சங்கைமிகு மஸ்உத் மெளலானா அல்ஹாதீ அவர்கள் தலைமையில் ஒதப்பட்டது. ராதிப் துஆவுக்குப் பின் ரவ்ழா ­ ஷரீப் சந்தனம் பூசப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெற்றது .

முன்னதாக பத்துநாட்கள் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராதிபு ஓதப்பட்டு தினமும் உள்ளூர் முறைகாரர்கள் வழங்கிய தப்ரூக்குடன் கூடுதலாக உணவும் வழங்கப்பட்டதுஅதனை முறையே சென்னை ஜம்ஷீத் பாஷாஹகாதிரிய், திண்டுக்கல்  நஜ்முத்தீன் ஹ.காதிரிய், ஜே.முஹம்மது ரஹ்மத்துல்லா பி..,பி. காம் ..காதிரிய் , ஜே . முஹம்மது சதக்கத்துல்லா ஹ . காதிரிய் , ஷேக் ஜாபர்அலி ஹ. காதிரிய்அப்துல்லாஹ் ஹ.காதிரிய், மஹ்பூபு சுப்ஹானி ஹ.காதிரிய், எஸ்காஜா நஜ்முத்தீன் ஹ.காதிரிய், திருச்சி பேராசிரியர். கான் முஹம்மது ஹ.காதிரிய், ஜமைக்கா முஹம்மது இஸ்ஹாக் ஆகியோர் வழங்கினர் .


கந்தூரியன்று பகல் உணவினை சென்னை பொறியாளர் ஹைதர் நிஜாம் பி.இ, அவர்களும் , இரவு கந்தூரி உணவினை சென்னை ஜனாப் ஒ.எம்.ஸி . ஜீலானி அவர்களும் வழங்கினர். தர்ஹா ­ ஷரீப் உள்ளேயும் வெளியிலும் வெகு அழகாக சென்னை ஹயாத் அவர்களாலும்சென்னை ஆயிரம் விளக்கு முரீதுப் பிள்ளைகளாலும் அலங்கரிக்கப்பட்டது .


கந்தூரி விழாஏற்பாடுகளை சையித் மஸ்உத் மெளலானா அல்ஹாதீ
, சையித் யாஸீன் அலி மெளலானா அவர்களின் வழிகாட்டலில் ஈரோடு அட்வகேட் மஹபூப்பாஷா , திண்டுக்கல் ஜே. முஹம்மதுரஹ்மத்துல்லா பி.. பி.காம்.
திருச்சி அன்ஸாரி , திருப்பூர் ஜியாவுல் ஹக் , . காதிரிய்கள் , மற்றும் யாஸீனிய் மெளலவிகள் , மதுரஸா மாணவர்கள் , ஈரோடு பக்தர்கள் , திருச்சி சபை முரீதுகள் சிறப்பாக செய்திருந்தனர். தேநீர் வழங்கும் பொறுப்பினை திருச்சி மார்க்கட் பக்ருத்தீன் குழுவினரும் , பாக்கம் கோட்டூர் அப்துல் ஹமீது பாக்கவி குழுவினர் தப்ரூக் லட்டினையும் வழங்கினர் . திருச்சி சபை சார்பில் அழகிய வண்ணப்பை அனைவருக்கும் வழங்கப்பட்டது . விழாவில் முரீதுகளான ஆண்கள் , பெண்கள் , உள்ளூர் , வெளியூர் ஜமாஅத்தார்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .



 பொன்விழா சிறப்பு மலர்


குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் ( ரலி ) அவர்களின் 50 ஆம் ண்டு பொன்விழா கந்தூரி சிறப்பு மலர் விற்பனைக்குத் தயாராக உள்ளது. கந்தூரி விழாவிற்கு வருகை தந்த சமயம் ஊர் திரும்பும் அவசரத்தில் மலரை வாங்காமல் சென்றிருக்கலாம். இந்த மலர் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான செய்திகளை உள்ளடக்கிய நூல் உங்கள் ஊர் இமாம்கள், பள்ளிவாசல் முத்தவல்லிகள் , ஊர்ப்பிரமுகர்கள் , நிஸ்வான் மதுரஸாக்கள் , தர்ஹாக்கள் , நூலகங்கள் என பரவலாக பலருக்கும் போய்ச்சேர வேண்டிய நூல் .

இந்த மலரைப் படிப்பதன் மூலம் யாஸீன் நாயகம் ( ரலி ) அவர்களையும் , வாப்பா நாயகம் அவர்களையும் , நமது சபையையும் , மதுரஸாவையும் புரிந்து கொள்ள வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை .

உங்கள் இல்லத் திருமணத்தின் போது செலவோடு செலவாக இந்த உயர்ந்த கருத்துப் பெட்டகத்தையும் வாங்கி திருமணத்திற்கு வரும் அன்பர்களுக்கு திருமணப் பரிசாக வழங்குங்கள்மொத்தமாக வாங்குவோருக்கு ரூ 100/- விலையுள்ள இந்நூல் சலுகை விலையில் ரூ 70/- க்கு வழங்கப்படும் .



இறையருட்பா - குறுந்தகடு


சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் வாரிதாத்துப் பாடல்கள் 9 இந்தக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளன . தமிழக பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்களான எஸ்.பி. பாலசுப்ரமணியம், மனோ, உன்னிமேனன், மற்றும் பாடகர்கள் பாடியுள்ளனர். மலேஷியாவின் டத்தோ முஹம்மது சாதிக் அவர்களின் முயற்சியில் வெளியானது இத்தொகுப்பு . கேட்கத் தெவிட்டாத இப்பாடல் குறுந்தகடினையும் வாங்கி நீங்கள் கேட்பதோடு பிறரையும் கேட்கத் தூண்டுங்கள் .

மலரையும் குறுந்தகடினையும் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி  .என்.எம் . அன்சாரி எம். ஹக்கிய்யுல் காதிரிய்,  திருச்சி.  செல் :805698910