• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

தேனின் சிறப்புகள் !

தகவல் :L.A. முஹம்மது அப்துல் காதர்   D.Pharm/D.ACU.,.


1. எளிதில் ஜீரணமாகும். சர்க்கரை சத்து உள்ளதால் சாப்பிட்டவுடன் உடனடியாக சக்தி தருகிறது .


2. உடலின் வெப்பநிலை சீராக வைத்திருக்க உதவுகிறது.


3. கால்சியம் , மெக்னீசியம் , பொட்டாசியம் , தாமிரம் , இரும்பு முதலிய தாதுக்கள் உள்ளன .


4. குரல் வளம் தருகிறது .


5. வெந்நீரில் எலும்பிச்சம் பழச்சாறுடன் சேர்த்து தேன் அருந்தி வர உடல் பருமன் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் .


6. பாலுடன் தேன் கலந்து சாப்பிட உடல் எடை அதிகரிக்கும் .


7. கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த சோகை நீங்கும் .


8. இரவில் படுக்கும் முன் தண்ணீரில் தேன் அல்லது டீ டிகாக்ஷன் , எலுமிச்சை சாறுடன் தேன்அருந்தி வர

நல்ல தூக்கம் வரும் .


9. பாலை விட 6 மடங்கு சத்தானது .


10. சுவாச சம்மந்தமான நோய்கள் , பித்தம் , வாதம் , கண் நோய்கள் , இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் , சோகை , மூட்டுப்பிடிப்பு நரம்புத் தளர்ச்சி நீங்கும் .


11. இஞ்சி சாறுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்த நரை அகலும் , ஊளைச் சதை குறையும் .


12. மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும் .


13. பார்லி கஞ்சியை வடிகட்டி தேன் கலந்து சாப்பிட , சளி , இருமல் , நுரையீரல் நோய்கள் குணமாகும் .


14. நெல்லிக்கனி , எலுமிச்சைப் பழச்சாறு , தேன் 2:2:1 என்ற விகிதத்தில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் உபாதைகள் குறையும் .


15. வேப்பிலை சாற்றில் தேன் கலந்து 1 மாதம் சாப்பிட்டு வர தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் .


16. பாதம் எண்ணெயுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்புடன் கவர்ச்சி பெறும் .


பயனடைய - பலனடைய வாழ்த்துக்கள்

( ஸல்லல்லாஹுஅலா முஹம்மத் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் )