• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

கலீபா பெருந்தகைகள்

மெளலவி என் . எஸ் . என் . ஆலிம் . பி . காம் . திருச்சி 


கலீபா வலிய்யுல் கறீம்


ஹக்கின் பேரருளால் சிறப்பான இத்தலைப்பில் இனி நாம் கூறப் போவது கலீபா. வலிய்யுல் கறீம் ஜமாலி அவர்களைப் பற்றிய குறிப்புகள் , அவர்கள் மூலம் சங்கைமிகு குத்புல் ஃபரீது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அருளிய அற்புத அருட்புதையல்கள் மற்றும் சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள்அருளிய ஆன்மிகப் பெட்டகங்கள் ! மற்றும்பல ... திண்டுக்கல் நாகல்நகர்  இரயிலடித் தெருவில் குடியிருந்த வலிய்யுல் கறீம் அவர்களுக்கு ஒருமுறை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் அருளிய பட்டோலையில் ...


மினல்ஹக்கில் முபீனி இலல் வலிய்யில் கறீம்” என அருளியிருந்தார்கள் . எனவே , நாம் அவர்களை “வலிய்யுல் கறீம்”என்றே அழைப்போம் . அவர்களின் இயற்பெயர் : மெளலவி எஸ் . அப்துல்கறீம் ஆலிம் ஜமாலி. வலிய்யுல் கறீம் அவர்களின் முக்கியக் குடும்ப உறவினர்களை முதலில் அவதானிப்போமா ?



மனைவியார் ஜனாபா மரியம் பீவி .


அருமை மகன்கள் : டாக்டர் S.A. அஷ்ரப் அலிஹக்கிய்யுல் காதிரிய் ( எம் . பி . பி . எஸ் .) எம் . டி . டி . எம் . ஹக்கிய்யுல் காதிரிய் ( கேம்ப் : சவூதிஅரேபியா )


மெரின் பொறியாளர் ஜனாப் .S.A. முஹம்மது ஸக்கரிய்யா ஹக்கிய்யுல் காதிரிய் , திருச்சி


பெண் பிள்ளைகள் : மூவர்


நமதுசபையின் தளபதிகளில் ஒருவராய் வீற்றிருந்த சமீபத்தில் மறைந்த ஜனாப் S.S. சையது மைதீன் ஹக்கிய்யுல் காதிரி ( சென்னை ) அவர்கள் , வலிய்யுல் கறீம் அவர்களின் மைத்துனர் . அது போல் , மறைஞானப் பேழையின் வெளியீட்டாளர் ஜனாப் J. முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் , திண்டுக்கல் ஜனாப் .J. முஹம்மது ஸதக்கத்துல்லாஹ் அவர்களுக்கும் ,சங்கைமிகுவாப்பா நாயகமவர்களின் உயிர்ப்பிள்ளை ஜனாப் A. முஹம்மது ஷாஜஹான் ( திருச்சி ) அவர்களுக்கும் வலிய்யுல் கறீம் அவர்கள் மாமா முறையாவார்.


உறவினர் இன்னும் அநேகர் உளர் . விரிவை அஞ்சி தற்சமயம் விடுக்கின்றேன். இத்தொடரில் அவ்வப்போது உறவினர் சிலரைக் குறிப்பிட வேண்டியிருக்கும். அப்போதுஅன்னவர்களைக் காணலாம் !



பொதுவாக வலிய்யுல் கறீம்அவர்கள் ...................


  • மிகவும் நல்லவர்

  • அன்பானவர்

  • கண்டிப்பானவர்

  • நேர்மையானவர்

  • சபையின் தலைமைத் தனத்திற்கு மிகவும் உரித்தானவர்

  • ரீஅத்தின் கடைமைகளை உரிய நேரத்தில் தவறாது நிறைவேற்றுவதில் முன்னுதாரணமானவர்

  • கர்வம் பெருமையில்லாதவர்

  • யாரும் எப்போதும் எளிதில் கண்டுதம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பவர் .

  • தர்பாருடைய சேவைகளை முறையாக ,முழுமையாக ஒழுங்குபடிச் செய்யக் கூடியவர் .

  • அவ்வாறே ஏனைய முரீதுகளும் செய்திடல் வேண்டும் என்பதில் கண்டிப்பும் உறுதியும் மிக்கவர் !

  • எல்லாவற்றிற்கும்மேலாக .....

    (
    இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ......)