• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 



பெருமானாருக்குப் பின் இஸ்லாமியப் பேரரசு


. ஹகீம்பாஷா - யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் .


அரசாட்சி தனதாக்கிஅதன் சாட்சி நபியாக்கி, அழகாட்சி கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்அகிலத்திற்கோர் அருட்கொடையாய் வந்துதித்த அண்ணலலெம் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறியவனாக தொடங்குகிறேன் .


நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள் .( எனக்குப் பின் கிலாபத் என்று சொல்லப்படும் ) கலீபாக்கள் ஆட்சி 30 ஆண்டுகள் நடக்கும் . அதன்பின் அரசர்கள் ஆட்சி முறை நடைபெறும் .


( நூல் : அபூதாவூத் 4/4646, திர்மிதி 4/2226, நஸாயீ 5/8155)


நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் யார் யார் ஆட்சி செய்தார்கள், அவர்களின் பிறப்பு , மறைவு , ஆட்சிக்காலம் எவ்வளவு என்ற தகவல்களை இக்கட்டுரையின் மூலம் நாம்அறிந்து கொள்வோம் .


கலீபாக்கள் ஆட்சிக் காலம் ஹிஜ்ரி 11- 40 

1. ஹள்ரத் அபூபக்ர் ஸித்தீக் ( ரலி ) அவர்கள் :

யானை ஆண்டுக்குப் பின் 2 ஆண்டுகள் 1 மாதம்முடிந்த பின் திருமக்காவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி -13, ஜமாதுல்ஆகிர் 12, திங்கட்கிழமை , மாலைநேரம் , தமது 63 - ஆம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி - 11 முதல் 13 வரை சுமார் 2 ஆண்டுகள் 3 மாதம் 10 நாட்கள் .



2. ஹள்ரத் உமர் ( ரலி ) அவர்கள் :


யானை ஆண்டுக்குப் பின் 3 ஆண்டுகள் 1 மாதம் முடிந்தப் பின் மக்காவில் பிறந்தார்கள் . ஹிஜ்ரி -23, துல்ஹஜ்மாதம் -26, புதன்கிழமை , தமது 63 - ஆம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி - 13 முதல் 23 வரை சுமார் 10 ஆண்டுகள் 6 மாதம் 4 நாட்கள் .



3. ஹள்ரத் உஸ்மான் ( ரலி ) அவர்கள் :


யானை ஆண்டுக்குப் பின் 6- ஆம் ஆண்டில் வெள்ளிக்கிழமையன்று மக்காவில் பிறந்தார்கள் . ஹிஜ்ரி -35, துல்ஹஜ் 18, வெள்ளிக்கிழமை , தமது 82- ஆம்வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி - 23 முதல் 35 வரைசுமார் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் .



4. ஹள்ரத் அலீ ( ரலி ) அவர்கள் :


யானை ஆண்டுக்குப் பின் 30- ஆம் ஆண்டில் திருமக்காவில் பிறந்தார்கள் . ஹிஜ்ரி -40, ரமலான் -19, ஞாயிற்றுக்கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்

ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி - 35 முதல் 40 வரை சுமார் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் .


அலீ ( ரலி ) அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய 30 ஆண்டில் மீதி 6 மாதங்கள் இருந்தன . அதனை இமாம் ஹஸன் ( ரலி ) அவர்கள் ஆட்சி செய்து 30 ஆண்டை பூர்த்தி செய்தார்கள் .




உமைய்யாக்கள்ஆட்சிக் காலம் ஹிஜ்ரி 41- 132



30 ஆண்டுகள் கலீபாக்களின் ஆட்சி முடிவடைந்ததும் ஹிஜ்ரி 41 முதல் 132 வரைசுமார் 92 ஆண்டுகள் உமைய்யாக்களின் ஆட்சி தொடங்கியது . யார் ஆட்சி செய்தது , அவர்களின் பிறப்பு , இறப்பு , ஆட்சிக்காலம் எவ்வளவு என்ற தகவல்களைப் பார்ப்போம் .


1. முஆவியாபின் அபீ ஸுப்யான் ( ரலி ):


ஹிஜ்ரத்திற்குமுன் 15- ஆம்ஆண்டு திருமக்காவில் பிறந்து . ஹிஜ்ரி -60, ரஜப்மாதம் , தனது 75 வயதில் , திமஷ்க்நகரில் மறைவு .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 41 முதல் 60 வரைசுமார் 19 ஆண்டுகள் 3 மாதகாலம் .



2. யஜீதுபின் முஆவியா :


ஹிஜ்ரி 26 - ஆம்ஆண்டு பிறந்து ஹிஜ்ரி -64- ஆம்ஆண்டு , ரபீவுல்அவ்வல் மாதம் , பிறை 14, தனது 38 - ஆம்வயதில் இறப்பு .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 61 முதல் 64 வரைசுமார் 3 ஆண்டுகள் 6 மாதக்காலம் ,14 நாட்கள் மிகவும் கேவலமான முறையில்ஆட்சி செய்த நபர் .



3. முஆவியாபின் யஜீத் :


ஹிஜ்ரி 26 - ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -64- ஆம்ஆண்டு , ரபீவுல்அவ்வல் மாதம் , பிறை 14, தனது 38 - ஆம் வயதில் இறப்பு


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 61 முதல் 64 வரைசுமார் 3 ஆண்டுகள் 6 மாதக்காலம் ,14 நாட்கள் மிகவும் கேவலமான முறையில் நடந்த ஆட்சி 



4. மர்வான்பின் ஹகீம் :


ஹிஜ்ரி 2 - ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -65- ஆம்ஆண்டு , ரமலான்மாதம் , தமது 63- ஆம்வயதில் இறந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 64 முதல் 65 வரைசுமார் 10 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார் .



5. அப்துல்லாஹ்பின் ஜுபைர் ( ரலி ):


ஹிஜ்ரி முதலாம் ஆண்டு திருமதீனாவில் பிறந்தார்கள் . ஹிஜ்ரத்திற்குப் பின் பிறந்த முதல் முஹாஜிர் குழந்தை இவர்களே . ஹிஜ்ரி - 73 ஆம்ஆண்டு , ஜமாதுல்அவ்வல் 17, செவ்வாய்க்கிழமை , தனது 73 - ஆம் வயதில் மறைந்தார்கள் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 64 முதல் 73 வரைசுமார் 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .



6. அப்துல்மலிக் பின் மர்வான் :


உஸ்மான் ( ரலி ) ஆட்சியில்ஹிஜ்ரி 26- ஆம்ஆண்டு மதீனாவில் பிறந்து , ஹிஜ்ரி 86 - ஆண்டு , வ்வால்மாதம் , வியாழக்கிழமை தமது 60- ஆம்வயதில் இறந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 65 முதல் 86 வரைசுமார் 21 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .



7. வலீத்பின் அப்துல்லாஹ் பின் மர்வான் :


ஹிஜ்ரி 50 - ஆம் ஆண்டு பிறந்து ஹிஜ்ரி -96 ஆண்டு ஜமாதுல் ஆகிர் 15, தனது 46 வயதில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 86 முதல் 96 வரைசுமார் 9 ஆண்டுகள் 8 மாதக்காலம் ஆட்சி செய்தார் .



8. சுலைமான்பின்அப்துல் மலிக் பின் மர்வான் :


ஹிஜ்ரி 60 ஆண்டு பிறந்து , ஹிஜ்ரி 99 ஆண்டுஸபர் மாதம் 10, வெள்ளிக்கிழமை தனது 33- ஆம் வயதில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 96 முதல் 99 வரைசுமார் 2 ஆண்டுகள் 8 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார் .



9. உமர்பின் அப்துல் அஜீஸ் ( ரஹ் ) அவர்கள் :


ஹிஜ்ரி 61 ஆண்டு மதீனாவில் பிறந்து , ஹிஜ்ரி 101 ஆண்டு , ரஜப்மாதம் 21, தனது 40 - ஆம் வயதில் மறைந்தார்கள் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 99 முதல் 101 வரைசுமார் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்கள் .



10. யஜீதுபின் அப்துல் மலிக் பின்மர்வான் :


ஹிஜ்ரி 72 - ஆம்ஆண்டு பிறந்து , ஹிஜ்ரி -105- ஆம்ஆண்டு ஃபான்மாதம் 25, தனது 33 - ஆம் வயதில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 101 முதல் 105 வரைசுமார் 4 ஆண்டுகள் 1 மாதக்காலம் ஆட்சி செய்தார் .



11. ஹிஷாம்பின் அப்துல் மலிக் பின்மர்வான் :


ஹிஜ்ரி 72 - ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -125- ஆம்ஆண்டு , ரபீவுல்அவ்வல் மாதம் 6, தனது 53 - ஆம் வயதில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 105 முதல் 126 வரைசுமார் 19 ஆண்டுகள் 7 மாதம் 11 நாட்கள் ஆட்சி செய்தார் .



12. வலீத்பின் யஜீது பின் அப்துல்மலிக் :


ஹிஜ்ரி 90- ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -126- ஆம்ஆண்டு , ஜமாதுல்ஆகிர் மாதக் கடைசியில் தனது 36 - ஆம்வயதில் மறைந்தார்


ஆட்சிக்காலம் : ஹிஜ்ரி 125 முதல் 126 வரைசுமார் 1 ஆண்டு 2 மாதம் 1 நாள் ஆட்சி செய்தார் .



13. யஜீதுபின் வலீது பின் அப்துல்மலிக் :


ஹிஜ்ரி 90 - ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -126- ஆம்ஆண்டு , துல்ஹஜ்மாதம் 7- ல்தமது 36 ஆம்வயதில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : இவர்சுமார் 5 மாதம் 1 நாள் மட்டுமே ஆட்சி செய்தார் .



14. இப்ராஹீம்பின் வலீது பின் அப்துல்மலிக் :


இவர் 2 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்



15. மர்வான்பின் முஹம்மது மர்வான் :


ஹிஜ்ரி 72 - ஆம்ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -132- ஆம்ஆண்டு , துல்ஹஜ் மாதக் கடைசியில் மறைந்தார் .


ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 127 முதல் 132 வரைசுமார் 5 ஆண்டுகள் 10 மாதம் 10 நாள்ஆட்சி செய்தார் .


இவர் கொல்லப்பட்டதும் உமைய்யாக்கள் ஆட்சி முடிவடைந்து விட்டது .


( பேரரசு தொடரும் )