• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

தத்துவக் கொத்து

பாகவி பின் நூரி


உள்ளத்தே உணர்

அல்லாஹ்வைத் தேடித் திரியாதே . நெஞ்சத்தினுள் அவன் வீற்றிருப்பதை உணர்ந்து கொண்டிருபக்கத்தில் படுத்துறங்கிய தன் தாயின் மீது வேற்றார் உடையைப் போட்டு யாரோ மூடி விட்டார்கள். எழுந்திருந்த குழந்தை தன் தயைக் காணவில்லையேஎன்று வீடெல்லாம் தேடிப்பார்த்து அழுததாம். தாயினும் சாலப் பரிந்து பராமரிக்கும்பரம் பொருளாகிய இறைவன் ( அல்லாஹ் ) உள்ளத்தினுள் உறைவதை உணர்ந்து கொள் .


கஸ்தூரி மானின் உடலிலிருந்து தான் கஸ்தூரி உண்டாகிறது . எனினும் , அதன் வாசனையைத் தேடி , நாடி , அது பிற காடுகளிளெல்லாம் தேடியலைகிறது . தான் தேடுவது தன்னிடத்தே இருப்பது அதற்குத் தெரியாது . அவ்வாறே மனிதன் , தனது மனத்தகத்து வதியும் இறையைக் கண்டு கெண்டால் , உலகெல்லாம் அதே இறை நிறைந்திருப்பதை அவன் உணர்வான் .


அருள் வேட்கை

நீர் வேட்கை பிடித்த மான் நீரின் பெருட்டு அலைவது போன்று இறைவா !  நான் உன் பெருட்டு வேட்கை கொண்டிருப்பேனாகஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒருவித வேட்கை இருக்கிறது . அதன் பொருட்டு அவன் முயற்சி மிக எடுத்துக் கெள்கிறான் .வேட்கைகளுக்கெல்லாம் , அல்லாஹ்வுக்காக வென்று உண்டாகும் வேட்கையே ஒப்பு உயர்வு அற்றது .


உடம்பு

உடம்பாகிய என்னுள்ளே , உயிராகிய இறைவா !  உன்னை நீ விளக்கியருள்வாயாக .

உயிரை விளக்குவதற்கென்றே உடல் இருக்கிறது. உயிர் இல்லாவிட்டால் உடல் பிணமாய்விடும் . பின்பு , உடம்பினைப் பண்படுத்துமளவு , அதனுள் உயிரானது ஓங்கி மிளிரும் .

 உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண் -
ஒளவையார் .( உத்தமன் - இறைவன் )


உயர்பாடம்

நல்லவரிடமிருந்து நல்ல பாடத்தை நான் கற்றுக் கொள்வேனாக . சமயக்குறவர் ( ஞானி ) ஓருவரைக் குவலயத்தில் காண்பது அரிது . ஒருவேளை நூறு அல்லது ஆயிரம் வருடத்திற்கு ஒரு தடவை ஒருவர் வரலாம் . அத்தகையவர் நல்வாழ்வு வாழ்ந்து , உலகுக்கு நல்வழி காட்டுகிறார் . புத்தகங்களும் , பிரசங்கங்களும் பின்னணிக்குப் போய்விடுகின்றன . எத்தகைய வாழ்வு மனிதன் வாழ வேண்டுமென்று அவர் தாமே வாழ்ந்து காட்டுகிறார் . வாய்ப்பேச்சாலல்ல . வாழ்க்கையின் மூலம் புகட்டும் பாடமே உயர்வானது .


தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக்குதர்க்கம் விட்டு 
நிற்குமவர் கண்ட வழி நேர் பெறு வதெந்நாளோ ?
- தாயுமானவர் .


தந்திரம்

இறைவா ! உன்னை நான் அடைவதற்கான தந்திரத்தை புகட்டியருள்வாயாக . ஒவ்வொரு இயந்திரத்தையும் முறையாகக் கையாளுவதற்கு உற்ற உபாயம் உண்டு . அந்த உபாயத்திற்குத் தந்திரம் என்றும் பெயர் .

உடலென்னும் இயந்திரத்தை இறைவனை அடையும் பொருட்டுக் கையாளுதலே நல்ல தந்திரமா ( உபாயமா ) கும் .
 - தாயுமானவர் 
.

உன்செயல்

இப்பிரபஞ்சத்தில் காண நிகழ்வனதெல்லாம் இறைவா ! அது உன் செயல் தான் . என் செயல் என் செயல் என்று சிலவற்றை மக்கள் உரிமை பாராட்டி , பந்தபாசத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் . என்ன மடமை !

மின்சக்தியால் இயக்கப் பெற்றுச் சக்கரம் சுழல்கிறது . விளக்கு எரிகிறது . ஒலி பெருக்கி ஓலமிடுகிறது . அடுப்பு , வெப்பம் கொடுக்கிறது . அப்படி இறை ஆணையால் ( இயற்கையில் ) யாவும் நடைபெறுகின்றன. இதை அறியாத மனிதன் , தன்னைச் செயலுக்குக் கர்த்தாவாக்கிக் கொள்கிறான் .

பார்க்கின் அண்ட பிண்டப் பரப்பனைத்தும்நின் செயலே 
யார்க்குஞ்செயலிலையே ஐயாபர பரமே .
- தாயுமானவர் 

.

( இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் )