15ஆம் ஆண்டு அமீரகம் வருகை ஷெய்கு நாயகம்

15.04.12 06:04 AM
சங்கைமிகு ஷெய்கு நாயகம் 15ஆம் ஆண்டு அமீரக வருகை

 

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 15ஆம் ஆண்டு விஜயமாக ஏப்ரல் 14ம் தேதி  இரவு 10.30 மணிக்கு வருகை புரிந்துள்ளார்கள். அவர்களை வரவேற்பதற்கு துபாய் விமான நிலையத்திலும்  சகோதரர் அப்பாஸ் ஷாஜகான் இல்லத்திலும் ஆன்மீக சகோதரர்கள் குழுமியிருந்தனர்.

அவர்களின் வருகையின் போது எல்லோரும் "யா நபி ஸலாம் அலைக்கும்" பைத் ஓதி அவர்களை சங்கையுடன் வரவேற்று பூங்கொத்து கொடுத்தும்  பொன்னாடைகளை அணிவித்தும் மனம் மகிழ்ந்தனர்.

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் இல்லத்தில் 15/04/2012 ஞாயிற்றுகிழமை முதல் 24/04/2012 வரை தினம் மாலை மஃரிப் தொழுகைக்கு பின் மஜ்லிஸ் நடைபெறும் அனைவரும் வருக!

 

 

 

 

 

 

 

 

emsabai.ismath