அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழா கொடிக்கால்பாளையம் -ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 11.03.2012 அன்று காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்புபேச்சாளர்களாக காயல்பட்டினம் மௌலவி முஹம்மது அப்துல்காதிர் மஹ்ழரி அவர்கள், பேராசிரியர் K.M. காதர் மொய்தீன் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முரீதுகள் ஆன்மிக ஆர்வலர்கள் உள்ளூர் ஜமாஅத்தார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். கொடிக்கால்பாளையம் சபை செயலாளர் ஹாஜி K.P.M. பசீர் அகமது நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.







