கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

16.01.13 05:51 AM

முத்திரை நபி!!!

பிறை-2

ஹதீஸ்:


ஹதீஸ்ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

 

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-2 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

emsabai.hashim