கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

16.01.13 06:05 AM

 முத்திரை நபி!!!

பிறை-4
 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் அவர்களின் வீட்டிற்க்கு வந்து அவர்களுக்கு என்று விரித்து வைக்கப்பட்ட விரிப்பில் ஒய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், வழக்கம் போல் ஒரு நாள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வந்து அந்த விரிப்பில் படுத்து ஒய்வு எடுத்தார்கள். உம்மு சுலைம் அவர்கள் வீட்டிற்க்கு திரும்பியதும் நபி (ஸல்) அவர்கள் ஒய்வு எடுப்பது அறிவிக்கப் பட்டது. அவர்கள் சென்று பார்த்த பொழுது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கடுமையான வியர்வை ஏற்பட்டிருந்தது, அதனால் கீழே விரிக்கப்பட்டிருந்த விரிப்பு முழுவதும் நனைந்து காணப்பட்டது. உடனே அந்த அம்மையார் ஒரு காலியான பாட்டிலை எடுத்துக்கொண்டு அந்த துணியைப் பிழிந்து அந்தப் புனிதமான வியர்வையை காலியான பாட்டிலில் நிரப்பிக் கொண்டிருந்தார். நாயகம் (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து அந்தப் பெண்மணியிடம், என்ன செய்கின்றீர் உம்மு சுலைமே? என்று வினவினார்கள். அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் அவர்களே! இந்த வியர்வையினுடைய அபிவிருத்தி (பரக்கத்) எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நபி (ஸல்) அவர்கள் நீ சரியாகக் கூறினாய் என்று கூறினார்கள். முஸ்லிம் - 5762 .

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-4 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

emsabai.hashim