கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

17.01.13 05:38 AM


 முத்திரை நபி!!!
 பிறை-5

 

ஹதீஸ்

 

ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள், என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தந்தை தம் மீது கடனை (அடைக்காமல்) அப்படியேவிட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரிச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரிச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல் கூட அவரின் மீதுள்ள கடனை அடைக்கும் அளவிற்கு எட்டாது. எனவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்தி ஏசாமளிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரிச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (பரக்கத் எனும் அருள்வளம் வேண்டி) பிரார்த்திதார்கள். பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்திதார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்து கொண்டு, அதை வெளியே எடுங்கள் என்று கூறினார்கள். கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்கு கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகி விட்டது. புகாரி - 3580.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-5 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.


நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

emsabai.hashim