சிறப்புமிக்க நிகழ்ச்சிகள்

05.05.12 07:26 AM

துபாய் சபையில் 03/05/2012 வியாழன் மாலை மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழச்சி நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் சபையில் 04/05/2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.


காலை 9.00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் மௌலிது ஓதி சங்கை செய்யப்பட்டது.

பின் கிராஅத்துடன் சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.


இந்நிகழ்ச்சிக்கு கலீபா முஹம்மது முஸ்தபா தலைமை வகித்தார்கள்.மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள்.

பாதுஷா நாயகத்தின் மௌலிது நிழ்ச்சி
கிராஅத் ஓதுவது மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி
நபிப்புகழ் பாடல் பாடுவது முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
ஏகக்காட்சி தமிழாக்கம் செய்கிறார் மன்னை ஷேக்தாவது ஹக்கியுல்காதிரி
நாகூர் நாயகத்தின் சிறப்புகளை பாடுகிறார் மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
ஞானப்பாடல் மற்றும் தலைமை உரை நிகழ்த்துவது கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி
சொற்பொழிவு ஆற்றுவது மன்னை வைத்தியர் அப்துல்மாலிக் ஹக்கியுல்காதிரி

இந்நிகழ்ச்சியில் புதிதாக இந்த ஆண்டு பைஅத் பெற்ற மதுக்கூர் முஹம்மது ரூமி ஹக்கியுல்காதிரி சொற்பொழிவில் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

சொற்பொழிவு ஆற்றுவது அமீர்அலி ஹக்கியுல்காதிரி
சொற்பொழிவு ஆற்றுவது கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துவது அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி
சிறப்பு சொற்பொழிவு சையதுஅலி மௌலானா ஹக்கியுல்காதிரி
நன்றி உரை நிகழ்த்துவது முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி
நிறைவாக தௌஃபா பைத்

இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் ஊர் ஜமாஅத்திலிருந்து வருகைப்புரிந்து நாகூர் பாதுஷா நாயகத்தின் அருளைப் பெற்றார்கள்.


பகல் 12.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.


புகைப்படங்கள் - முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்

emsabai.ismath