துபாய் சபையில் டிசம்பர் மாதக்கூட்டம்

08.12.12 09:11 AM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் டிசம்பர் மாதக்கூட்டம் 6/12/2012 வியாழன் வெள்ளி மாலை நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு  பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A. ஹக்கியுல்காதிரி தலைமை ஏற்று நடாத்தித் தந்தார்.

கண்ணியமிக்க மௌலானாமார்கள் மற்றும் மூத்த சகோதரர் அபுசாலிபு ஹக்கியுல்காதிரி முன்னிலை வகித்தனர்.

இம்மாதக் கூட்டத்திற்கு முன்னிலை வகிப்பது தஞ்சை அபுசாலிபு ஹக்கியுல்காதிரி
நபிப்புகழ்பாடல் மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி மற்றும் கோட்டைக்குப்பம் முகைதீன் ஹக்கியுல்காதிரி
தலைமை உரை முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி
ஏகாந்தம் பாடல் மற்றும் உரை மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துவது கடையநல்லூர் காதர் ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துவது மன்னார்குடி ஷேக்மைதீன் ஹக்கியுல்காதிரி
தனது அனுபவ உரை நிகழ்த்துகிறார் மதுக்கூர் அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துவது அதிரை ஷர்புதீன் ஹக்கியுல்காதிரி
வழுத்தூர் அப்துல்ரஷீது ஹக்கியுல்காதிரி

அப்துல்ரஷீது உரை நிகழ்த்துகையில் இரண்டாவது முறையாக இச்சபையில் பேசுவதாக கூறி, தனது திருமணம்  முடிந்து குழந்தைப் பேருக்காக ஆருயிர் வாப்பா நாயகம் அவர்களின் காருண்யத்தைப் பற்றியும்  மற்றும்  குழந்தைப் பிறந்து, அந்த குழந்தையின் கண்ணில் ஏற்பட்ட குறைபாடு களைவதற்கு, 12 ஆண்டுகள் ஆகும் எனக் கூறிய மருத்துவரின்  கூற்றை சங்கைமிகு வாப்பா நாயகத்திடம் கூறிய போது, அவர்களின் திரு வாயிலிருந்து உமிழ் நீரை எடுத்து குழந்தையின் கண்ணில் தடவியபோது, மறுதினமே அது மறைந்த அதிசயத்தை கண்கலங்க நினைவு கூர்ந்து பேசினார். சமீபத்தில் ஏற்பட்ட எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்றும் வாப்பா நாயகம் தன்னொடு காருண்யமாக அன்புமாறாமல் நடந்துக் கொள்ளும் கருணையையும் மெய்சிலிர்த்து பகிர்ந்துக் கொண்டார்.

உரை நிகழ்த்துகிறார் அதிரை அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துகிறார் திருச்சி அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி

Your content goes here...

நிறைவாக தௌஃபா பைத்துடன் இனிதே இம்மாதக்கூட்டம் நிறைவுப் பெற்றது... அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.


புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

emsabai.ismath