ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் ஸ்தாபகரும் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் தலைவருமான சங்கைமிக்க இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் 15ம் ஆண்டு அமீரகவருகை ஏப்ரல் 14 லில் நடைபெற்றது.
ஏப்ரல் 15லிருந்து 23 ம்தேதி வரையில் தினம் மஹ்ரிப் தொழுகைக்கு பின் துபை நிர்வாகத் தலைவர் கலீபாஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் மஜ்லிஸ் இஸ்லாமிய ஞான விளக்கங்கள் மற்றும்கேள்வி பதில்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குமுரிதீன்களும் பிற தரீக்காவின் அன்பர்களும் மற்றும் பல அமைப்புகளிலிருந்தும்வருகைப் புரிந்து ஷெய்குனா அவர்களை சந்தித்தும் ஞான விளக்கங்களை கேட்டும்சென்றனர்.
ஏப்ரல் 25அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் துபை சபையின் உதவி தலைவர் அப்பாஸ் ஷாஜகான்இல்லத்தில் ஷெய்குனா அவர்கள் இலங்கை புறப்படும் முன் துவா ஓதினார்கள். இந்ததுவாவில் அனைவரும் கலந்து சங்கைமிக்க ஷெய்குனாவை வழியனுப்பினார்கள்.
இந்த பத்துதினங்களும் பதி அறிந்து, மதி தெளிந்து, மனம் மகிழ்ந்த தினங்களாக வாழ்வில் மறக்கமுடியாத தினங்களாக, எங்கள் எல்லோர் மனதிலும் நிறைந்தது என்று கூறுமளவு ஷெய்குனாவின் வருகையில் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நாட்டத்தால்
ஆனந்தம் நிறைந்திருந்தது.அவர்கள் தேக சுகத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ ஏக இறையிடம் பிரார்த்திக்கிறோம்.
அல்ஹம்ந்துலில்லாஹ்!
இந்த பத்துதினங்களில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை பொறுப்புடன் எடுத்து நடத்திய அனைத்துபொறுப்பாளர்களுக்கும் துபை சபையின் சார்பாக நன்றியை உரித்தாக்குகின்றோம்.
நன்றி!