துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் புனித மிஉராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி 16/06/2012 சனி அன்று ஞாயிறு மாலைமஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A.ஹக்கியுல்காதிரி தலைமை வகித்தார். சிறப்புச் சொற்பொழிவுதிருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா மற்றும் அமீரகம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின்ஒருங்கிணைப்பாளரும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவருமான முஹிப்புல்உலமா கீழை முஹம்மது மஃரூப் அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின்சிறப்பம்சமாக சங்கைமிக்க ஷைய்குநாயகம் இயற்றிய புனித மிஉராஜின் சிறப்பு துஆவை ஓதிநிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீகசகோதரர்களும் மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள். தாமே முன்வந்து இந்நிகழ்ச்சி முழுவதையும்ஒளிப்பதிவு செய்த சங்கமம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், இந்நிகழ்ச்சி சிறப்பாகஅமைவதற்கு ஒத்துழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை சபையின்சார்பாக கூறிக்கொள்கிறோம். ஆடியோ – புகைப்படங்கள் அதிரை அப்துல்ரஹ்மான், முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்.
