கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த வசந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை கௌரவிக்கும்முகமாக
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் (ஷெய்கு நாயகத்தின் உத்தரவின்பேரில்) ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹானமௌலிது ஓதி அந்தமாதத்தை சங்கைப்படுத்துவதை நம் சபை வழமையாகக் கொண்டிருக்கிறது.
ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் நாளான ஜனவரி 12 சனி மாலை 8.00 மணிக்கு துபாய் சபையில் சுப்ஹானமௌலிது நடைபெற்றது. இன்றைய மௌலிது நிகழ்ச்சிக்குப் பின்பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஹயாத்துன்னபி;என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.
நபிப்புகழ்பாடலைமுஹம்மது தாவூது பாடினார்கள்.
அனைவருக்கும்தப்ரூக் வழங்கப்பட்டது.
புகைப்படம்– அதிரை அப்துல்ரஹ்மான்





