Pezhai » 2015 » Feb2015 » பேரின்ப சாகரம்
பேரின்ப சாகரம் !
முத்தரெல்லாம்வாழியயங்கள்மோனமணித்தாயருளும்
சித்தரெல்லாம்வாழிசுத்தசிவமேநந்தீஸ்வரனே
குணங்குடிமஸ்தான்சாஹிபுஒலியுல்லாஹ் (ரலி)
(முக்தராம்நத்தஹர்ஒலியுடன்சித்தர்கள்சந்திப்பு)
மாலைநேரங்களில்இருள்சூழும்முன்னிரவில்தோட்டத்தில்நின்றுகுந்தவைநாச்சியார்பாடிக்கொண்டிருப்பார். அவரைச்சுற்றிமின்மினிப்பூச்சிகள்அல்லதுநெருப்புப்பொறிகள்பறப்பதுதோழிகளுக்குஅச்சம்தந்தது. தொடர்ந்துநடந்துவந்தஇந்தஅருங்காட்சியைஇன்றுபாபாவிடம்சொல்வதுஎன்றுமுடிவெடுத்தார்கள்.
அதுஅமாவாசைமுன்னிரவுநன்றாகஇருள்சூழ்ந்துவிட்டது. வடதிசையில்தோன்றிமேலேவந்தமேகங்கள்வானப்பரப்பைமுழுவதுமாகமறைத்துவிட்டன. ஆகாசத்தில்ஒருநட்சத்திரம்கூடகண்சிமிட்டவில்லை. ஆனால்குந்தவைபாடத்தொடங்கியதும்மரங்களின்மீதிருந்தும், புதர்களின்மீதிருந்தும்பறந்துவந்ததுபோன்றமின்மினிப்பூச்சிகள்குந்தவையின்முகத்தையும்உடலையும்சுற்றத்தொடங்கின. வியப்போடுஜன்னல்வழியேபார்த்துக்கொண்டிருந்தபெண்கள்பாபாவின்தவச்சாலையினுள்நுழைந்துதங்கள்அச்சத்தைவெயிளிட்டார்கள்.
பாபாதோட்டவாயிலுக்குவந்தார்கள். குந்தவைபாடுவதைக்கேட்டார்கள்.
ஓடிஓடிஓடிஓடிஉட்கலந்தசோதியை
நாடிநாடிநாடிநாடிநாட்களும்கழிந்துபோய்
வாடிவாடிவாடிவாடிமாண்டுபோனமாந்தர்கள்
கோடிகோடிகோடிகோடிஎண்ணிறந்தகோடியே
வானிலும்மண்ணிலும்வாயுநீர்நெருப்பிலும்
தானிருந்தசோதியைகண்டுணர்ந்துகொள்ளவே
லாயிலாஹஇல்லல்லாவைமணக்கஓதடா
ஓய்வில்லாமல்ஓதஓத உன்னகத்தில்ஜோதியே
எண்ணறியசித்தர்இமையோர்முதலான
பண்ணவர்கள்பத்தருள்பாலிப்பதெந்நாளோ
- அருள்மிகுதாயுமானசுவாமிகள்
குந்தவைநாச்சியார்சித்தர்பாடல்களில்ஒன்றைப்பாடவும், அதனைவளர்த்துவந்தகிளிப்பிள்ளைசொல்பிசகாதுதிரும்பக்கூறவும்கண்டுபாபாமகிழ்ந்தார்கள். சேடிகளுக்குபுரியாததுபாபாவுக்குப்புரிந்தது. குந்தவைநாச்சியாரைசுற்றிச்சூழ்ந்துபறந்தவை மின்மினிப்பூச்சிகளுமல்ல, நெருப்புப்பொறிகளுமல்ல.
அதுதவமுயற்சிகளில்ஈடுபடுவோரின்ஜடலத்தைசூக்குமம்மிகைக்கும்போதுஏற்படும்தெய்வீகஒளிச்சுடர்.பாபாதப்லேஆலம்தம்ஆத்துமகுமாரத்திகுந்தவையைநோக்கி, மாமாஜிக்னி - ஒளிபொருந்தியமுகத்தையுடையபெண்ணேஎன்றுசெல்லமாகஅழைத்தார்கள். ஆனால்பாபாதன்மகளைவினவினார்கள். அதுஎன்னமகளேபுதிதாகஒருபாடல்பாடுகிறாய்? தந்தையே! இதுசித்தர்சிவவாக்கியர்பாடல்என்றார்குந்தவை. ஆகிகூவென்றேஉரைத்தஅச்சரத்தின்ஆனந்தம்
யோகியோகிஎன்பர்கோடிஉற்றறிந்துகண்டிடார்
பூகமாய்மனக்குரங்குபொங்குமங்குமிங்குமாய்
ஏகம்ஏகமாகவேஇருப்பர்கோடிகோடியே
தந்தையேஇந்தப்பாடலைத்தான்நான்என்மனதுக்குஇசைந்தபடிமாற்றிப்பாடியுள்ளேன். என்தோழிபைங்கிளிக்கும்கற்றுத்தந்துள்ளேன். சிரித்துக்கொண்டேதொடர்ந்தார்குந்தவை. ஆம்தந்தையே! இன்றுமகாசித்தர்போகரின்தலைமையில்நான்கைந்துசித்தர்பெருமக்கள்தங்களைச்சந்திக்கவந்தார்களே! என்னதான்பேசினீர்கள்? நாள்முழுவதும்அவர்களுக்குவிருந்துதயாரிப்பதிலேயேஎன்நேரம்கழிந்ததால்உங்களுக்குள்நடந்தவாதப்பிரதிவாதங்களைபேச்சுவார்த்தைகளைஎன்னால்முழுமையாகக்கவனிக்கமுடியவில்லை! மாமாஜிக்னியின்வார்த்தைகளைக்கேட்டுமகிழ்ந்தபாபாநடந்தவைகளைச்சொல்லிக்காட்டினார்கள்.
வாதப்பிரதிவாதங்களுக்குஇடமேஇருக்கவில்லை. தமிழர்களின்ஆதிமதமேசித்தர்களின்மார்க்கமென்பதைவிளக்கினார்கள். அப்படிவிளக்கும்போதுஅதுஅடிப்படையில்இஸ்லாமியமார்க்கத்தைத்தவிரவேறெதுவுமில்லை. நீகூறியசித்தர்சிவவாக்கியரின்வேறுசிலபாடல்களைஅவர்கள்கூறக்கேட்டுநானேவியந்துபோனேன். போகருடன்வந்திருந்தஒவ்வொருசீடருமேஅற்புதமானமனிதர்களாகக்காணப்பட்டனர். குறிப்பாககொங்கணர், கருவூரார், புலிப்பாணிபோன்றவர்கள்.
தந்தையேபோகர்முடிவாகஎன்னதங்களிடம்சொன்னார்? நமதுஇடத்தைவிட்டுஅவர்வெளியில்போகும்போதுபாடியபாடலைமட்டும்நான்நினைவில்வைத்துள்ளேன்.
பாடினார்குந்தவைநாச்சியார்:
பாரப்பாநூற்றெட்டுதலமுமாச்சு
பலவிதமாய்பெயர்படைத்துநானும்நின்றேன்
வேரப்பாஇன்னமோர்ஆச்சரியங்கேளும்
விதமானதுளுக்கர்மதம்ஒன்றுண்டாகி
ஆமப்பாஅம்மதத்தின்வெளியாய்நின்றேன்
அநேகவிதரூபமாய்வெளியாய்நின்றேன்
சாரப்பாபராபரத்தின்மார்க்கமாகும்
சார்ந்துபாராஏகரூபம்தானே.
தானென்றுஆதியிலேநந்தியானேன்
தவஞ்செய்துசித்தனயன்மாலுமானேன்
வேனென்றசுப்பிரமணியரூபமானேன்
விண்ணவர்சேனாதிபதியிந்திரனுமானேன்
நானென்றகிருஷ்ணன்வடிவாகிநின்றேன்
நபிரூபமாயுலகமெங்குமானேன்
வானென்றபராபரமாய்நின்றுகொண்டேன்
மாநிலத்தில்போகரென்றுவாழ்த்திட்டேனே.
ஏன்தந்தையே! இப்பாடலில்துளுக்கர்மதமென்றும்அம்மதத்தில்நிறைந்துநின்றேனென்னும்போகர்எதைச்சொல்கிறார், நபிரூபமாயுலகமெங்குமானேன்என்றாரே? என்னதான்நடந்தது?
ஒன்றுமில்லைமகளே. போகர்என்னிடம்விடைபெறும்போதுகலிமாவைச்சொல்லிக்கொடுங்கள்என்றார். நானும்லாயிலாஹஇல்லல்லாஹுமுஹம்மதுர்ரஸூலுல்லாஹிஎன்றுகலிமாவைச்சொன்னேன். இங்குவந்தசித்தர்கள்அனைவரும்அதனைவாயால்உரைத்தார்கள். அவர்களுக்குள்ஏன்இந்தத்தேட்டம்என்பதுஎனக்குத்தெரியாதுஎன்றார்கள்பாபா.
மாமாஜிக்னியாகிவிட்டகுந்தவைநாச்சியார்மீண்டும்பாடினார். கையமர்ந்திருந்தகிளியும்அப்பாமாலையைபிழையின்றிமிழற்றியது.
லாயிலாஹஇல்லல்லாவைவாய்மணக்கஓதடா
ஓய்வில்லாமல்ஓதஓதஉன்னகத்தில்ஜோதியே.
மாமாஜிக்னி வினவினார்.
பாபா! போகரின் குருநாதர்யாராம்?
அகத்தியர்என்றார்கள்மகளே!
அகத்தியர் 15000 ஆண்டுகளுக்குமுந்தியவர்ஆதிசிவனின்சீடர்அல்லவா? இவர்எந்தஅகத்தியரைச்சொல்கின்றார்பாபா?
தெரியவில்லையேமகளே! அகத்தியர்தான்குருஎன்றார். பின்னர்என்அகத்தில்யார்இருக்கின்றார்? நீங்கள்தானேஇருக்கின்றீர்கள்? என்அகத்தியர்தாங்களேஎனக்கூறிவிட்டுப்போகின்றார்மகளே!
குறிப்பு (1) போகர்ஜெனனசாரம்பக்கம் 95 பாடல் 323, 324.
குறிப்பு (2) போகர்என்றபெயரில்பலசித்தர்கள்இருந்ததாகத்தெரிகிறது - ஆசிரியர்)
நன்றி : பேரின்பசாகரம் (நூல்.)
தொகுப்பு: மு.முஹம்மதுஅலிஹக்கிய்யுல்காதிரிய் - திருச்சி.