• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

ஆத்மாவின் தந்தை


மறைஞானப் பேழை நிறுவனர் அஷ்ஷைகுல் காமில்குத்புஸ்ஸமான் ஷ­ம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்



ஆத்மாவின்தந்தை


உடலுக்கும்ரூஹுக்கும்தந்தையர்உளர். உலகிலேமானிடனாய்ப்பிறக்கஉதவியதந்தையைஉடலின்தந்தையென்போம்அவரைவிடவும்மேலாகஆத்துமாவைப்பக்குவப்படுத்திஅவ்வுலகத்தில்துன்பமின்றிவாழவழிவகுத்துத்தந்தசெய்கை (ஞானகுருவை) ரூஹின்தந்தை (ஆத்துமாவின்தந்தை) எனக்கூறுவோம்.



பேரின்பப்பாதைநூலில்


சங்கைமிகு  செய்குநாயகம்அவர்கள்




சிரிக்க சிந்திக்க



நான் உறவினர் வீட்டிற்கு காலை உணவு சாப்பிடச் சென்றேன். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, இது சாஃப்டா (Variety) இருக்கும், சாப்பிடுங்கள் என்றார்கள். நான், சாப்பிட்டா எங்கு இருக்கும்? முடிந்துவிடுமே! என்றேன். அவர்களுக்குப் புரியவில்லை. மீண்டும், அதையே சொன்னார்கள். விளக்கியவுடன் புன்முறுவலுடன் சிரித்தார்கள். 


விருந்து ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, என்னிடம் நீங்கள் எறிச்சி(இறைச்சி) சாப்பிடுவீர்களா? என்றார். நான் இறைக்காமல், ஒழுங்காகத்தான் சாப்பிடுவேன் என்றேன்.


சென்னையில் இருந்து வந்த விருந்தினர் சாப்பிடும் போது, நிறைய (  (vareity) வெரைட்டி வைத்திருந்தீர்கள் என்று சொல்ல, சமையலுக்கு உறுதுணையாக இருந்த பெண், நாங்கள் வெறாட்டி எல்லாம் உபயோகப்படுத்துவதில்லை என்று கூறினாள்!