சங்கை மிகு செய்கு நாயகம் அவர்களின் இந்திய விஜயம்
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் 17.01.2015 அன்று சிறப்பு வருகையாக தமிழகம் வருகை புரிந்தார்கள். விமான நிலையத்தில் கலீபாக்கள் முரீதுகள் திரளாக வரவேற்று மகிழ திருச்சி திண்டுக்கல் சாலை அருகே தங்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்திற்கு விஜயம் செய்து அங்கேயே 31.1.2015 சனிக்கிழமை வரை தங்கினார்கள்.
தினமும் முரீதுகள் அவர்களைச் சந்தித்து நல்வழி காட்டலும் துஆவும் ஆசியும் பெற்றுச் சென்றனர். 20.01.2015 அன்று மதுரஸாவில் நடைபெற்ற திண்டுக்கல் நத்ஹர் வலீ அவர்களின் மகளாரின் திருமண விழாவின் போது தங்கள் இல்லத்தில் மணமக்களை வாழ்த்தி துஆ செய்தார்கள்.
22.1.2015 அன்று திருமுல்லைவாசல் சென்று தங்கள் தந்தை நாயகம் குத்புல் ஃபரீத் யாஸீன் நாயகம் (ரலி) அவர்களை ஜியாரத் செய்து, தங்கள் உறவினர்களையும் சந்தித்து, 25.1.2015. திண்டுக்கல் ஜே.முஹம்மது சதக்கத்துல்லாஹ் பி.எஸ்.ஸி. அவர்களின் “பைத்துன்னதா” புதிய இல்லத்திறப்பு நிகழ்வை நடத்தி துஆவும் ஆசியும் வழங்கி,
30.1.2015 திண்டுக்கல் கலீபா ஆலிம் புலவர் அவர்களின் இல்லத்திற்கு வருகைபுரிந்து 31..01.2015 அன்று திருமணம் நடக்கவிருந்த மணமக்களை வாழ்த்தி துஆவும் செய்து 31.01.2015 சனிக்கிழமை 3.30 மணியளவில் முரீதுப்பிள்ளைகள் பிரியா விடையளிக்க .இலங்கை புறப்பட்டுச் சென்றார்கள்.
இடையே 28.01.2015 அன்று சம்பைப்பட்டினம் சென்று தங்கள் பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா (ரலி) அவர்களை ஜியாரத் செய்து திரும்பினார்கள்.
ஆத்மராகம்குறுந்தகடுபுதியவெளியீடு
சங்கைமிகுசெய்கு நாயகம்அவர்கள்மீதுகலீபாஆலிம்புலவர்எஸ்.ஹுஸைன் முஹம்மதுஹக்கிய்யுல்காதிரிய்யுல்மன்பயீஅவர்கள்இயற்றிவாப்பாநாயகம்அவர்களின்மஜ்லிஸ்களில்பாடப்பட்டுவந்தபுகழ்ப்பாடல்கள்இப்போதுஇசையமைக்கப்பட்டுஇசைத்தேனருவிதேரிழந்தூர்தாஜுத்தீன்அவர்களும் ஆலிம்புலவரும்பாடபதிவுசெய்யப்பட்டுஆத்மராகம்எனும்பெயரில்குறுந்தகடாகவெளிவந்துள்ளது. அனைவரும்வாங்கிப்பயன்பெற்றுஆனந்தம்பெறுமாறுகேட்டுக்கொள்கிறோம். விலைரூ.50/- கொரியர்செலவுதனி.
தொடர்புக்கு.
கலீபாஆலிம்புலவர்எஸ்.ஹுஸைன் முஹம்மதுஹக்கிய்யுல்காதிரிய்யுல்மன்பயீ,
229/4. கலீல்கம்ப்யூட்டர்,
மேற்குரத வீதி,
திண்டுக்கல். 624001
செல்: 99445 76165