உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
(கலிவிருத்தம்)
இவ்வகைவினையு மித்தகைச்செருவிற்
செவ்விதென்றறிகசீரிதேயாகலின்
இவ்விதஞ்செய்கவென்றனர்நாதர்
எவ்வகையாயினுமியற்றுவமென்றனர்.
கொண்டுகூட்டு:
(மேலேசொல்லப்பட்ட) இவ்வகைவினையும்இத்தகைச்செருவிற் (செயின்) அது செவ்விது என்றறிக. சீரிதேஆகலின்இவ்விதஞ்செய்க. (அவ்வாறாயின்) நாதர் வெற்றி பெற்றனர். வீரர்கள்எவ்வகையாயினும்இயற்றுவம்என்றனர்.
பொருள்:
மேலேசொல்லப்பட்டஇவ்விதச்செயல்களைஇப்படிப்பட்டயுத்தகளத்தேசெயின்அதுஒழுங்கானதென்றறிக. இதுதான்ஒழுங்குமுறையாதலின்இப்படிச்செய்க (அவ்வாறாயின்) நாதர்வெற்றிபெற்றனர். வீரர்கள் “எவ்வாறும்யுத்தம்புரிவம்” என்றனர்.
குறிப்பு:
வினை : செயல். செரு: யுத்தம். செவ்விது : நல்லது, நன்று, நேரானது. சீர் : ஒழுங்கு. இவ்விதம் : இவ்வாறு. இயற்றுவம் : செய்வோம்.