திருநபியின் திருப்பேரர்
ஆதிபெரியவனின்அருள்பொழியஅகிலமெங்கும்
சோதிச்சுடர்பரவும்ஜமாலிய்யாமெளலானா
வாழ்வோரின்வழித்துணையாய்வல்லோனின்அருட்கொடையாய்
சூழ்புகழின்நபிகுலத்தோர்ஜமாலிய்யாமெளலானா
பூதுயிலநாதுயிலபுகழோனைத் துதிக்கும்அன்னை
ஃபாத்திமுத்தின்கிளைபழுத்த ஜமாலிய்யாமெளலானா
பேருலகின்பெரும்வீரர்பேரணியாம்அலி (ரலி) யின்
சீர்தருவின்பேர்நிழலாம் ஜமாலிய்யாமெளலானா
அசனாரின்குலவிளக்கேஉசைனாரின்ஒளிவிளக்கே
இசைவார்க்கேஞானமூற்று ஜமாலிய்யாமெளலானா
ஆத்மீகஞானச்சுடர்அரும்அப்துல்காதிர்குலம்
காத்துவரும்வானச்சுடர் ஜமாலிய்யாமெளலானா
வாரிசென்றால்வாரிசன்றோவந்தமணியாஸீன்வலி
சீருலகம்மகிழத்தரும்ஜமாலிய்யாமெளலானா
பேரர்என்றால்பேரரன்றோபெருங்ஞானிகலீல்வலீ
பேருலகின்ஆறுதலாம் ஜமாலிய்யாமெளலானா
அஹமதியமுஹமதியஅருட்சுடருள்பெருஞ்சுடரே
இகமதின்வலிகற்கோனேஜமாலிய்யாமெளலானா
பாரெங்கும்தீன்பரப்பிமறைந்திருந்தேதீன்முழங்கும்
வாரிதாத்துல்அன்பியாவே ஜமாலிய்யாமெளலானா
இமாமுல்அஃளம்மாம்அஸ்ஸையித் ஜமாலுத்தீன்
கமகமக்கும்தங்கள்தந்தை ஜமாலிய்யாமெளலானா
ஆலமெல்லாம்வீசொலியாம்ஸய்யிதாஆபிதாவே
சீலமுறும்தாயாராம் ஜமாலிய்யாமெளலானா
அல்ஆரிஃப்ஸமதானிவல்வலிய்யுல்வஹ்தானி
வல்கெளதுல்ஃபர்தானி ஜமாலிய்யாமெளலானா
அஷ்ஷைகுஅஸ்ஸையிதே முஹம்மதுமெளலானல்
காதிர்ஹஸன்ஹாஷிமிய்யு ஜமாலிய்யாமெளலானா
அதிரைஅருட்கவி - முஹம்மதுதாஹாமதனி.