• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

ஜமாலிய்யா மெளலானா (ரலி) 



உங்களில் மறைந்தவர்களின் அழகிய பண்புகளை நினைவு கூருங்கள்! இது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழி!



வாழும் மனிதர்களுக்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வே பெரும் பாடமாக அமைகின்றது! அதிலும் மனிதப் புனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகள் வழிகாட்டியாக - திசைகாட்டியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது!



அதனால்தான் இறைவன் குர்ஆன் ஷ­ரீபில்  நபிமார்களின் வாழ்விலிருந்து பல நிகழ்வுகளை ஆதாரமாகப் பதிவு செய்துள்ளான். அந்த வகையில் நமது தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் மூலமாக அமைந்த சங்கைமிகு கெளதுஸ்ஸமான் அஸ்ஸையித்  முஹம்மத் ஜமாலிய்யா மெளலானா (ரலி) அவர்களின் வாழ்வு அவசியம் நினைவு கூரப்பட வேண்டியதே!



அவர்கள் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையில் பக்தாது நகரில் பைதுஷ் ஷீரஃபா என்ற இடத்தில் பிறந்து, மலர்ந்து, மணம் வீசி, பாரதத்துக்கு வருகை புரிந்தார்கள்.  வாகன வசதிகள் குறைந்த அக்காலத்தில் பல ஊர்களுக்குச் சென்று இஸ்லாத்தை மக்களுக்கு போதித்தார்கள். குறிப்பாக தரீக்கா எனும் ஆன்மீக ஞானத்தை  மக்கள் மனதில் விதைத்தார்கள். 



அவர்களின் கரம் பற்றி  4000-க்கும் அதிகமானோர் தீனுல் இஸ்லாத்தைப் பெற்றார்கள் என வரலாறு கூறுகிறது.  அற்புதங்கள் பல விதைத்த அவர்கள் அநேக நூற்களையும் எழுதி அவர்களே அச்சியற்றியதையும் அறிய முடிகிறது.



அவர்களின் அகமிய அந்தரங்கமே குத்புல் ஃபரீத் யாஸீன் நாயகர் (ரலி) அவர்களாக வெளியாகியது! அவர்களின் அந்தரங்கமே இன்றைய காலத்தின் அதிபரான கலீல் அவ்ன் நாயகராக வடிவெடுத்துள்ளது.இந்த இரண்டு ஜோதிகளும் வெளியாகக் காரணமான மூல ஜோதியாக ஜமாலிய்யா மெளலானா (ரலி) அவர்கள் திகழுகின்றார்கள்.



அவர்களின் நினைவு தினக் கந்தூரிவிழா இன்ஷா அல்லாஹ் வரும் ஜமாதுல் அவ்வல் பிறை 1 அன்று (21.02.2015) சம்பைப்பட்டினம் தர்ஹா ­ரீஃபில்  நடைபெறவிருக்கின்றது.  அந்த நாளில் சம்பைப்பட்டிணத்தில் அவர்களின் கந்தூரி விழாவைச் சிறப்பாக நடத்துவோம்! அங்கு அனைவரும்  கூடி அவர்களை நினைவு கூர்வோம்!  ஆன்மீக அருள் தரங்களைப் பெறுவோம்!