• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)


அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.

 

ஹள்ரத் ரபீஃ அவர்கள் கூறுகிறார்கள்:

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இரண்டு இல்முகள் (அறிவுகள்) முக்கியமானவை என்று ஒருமுறை கூறினார்கள்! அவை யாவை? என வினவப்பட்டது!

1. (உடல் கூறு பற்றிய அறிவு) - இல்முல் அப்தான்

2. (மார்க்கத்தைப் பற்றிய அறிவு) - இல்முல் அதுயான் என்று கூறினார்கள்!

மேலும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

தீனுடைய அறிவு என்பது... ஷ­ரீஅத்துடைய ளாஹிரான வெளிப்படையான வணக்கங்களை அறிவது; அவற்றைச் செயலாற்றுவது ஆகும்.

சரீரங்களுடைய அறிவு என்பது... மனிதனுடைய வியாதிகளையும் அவற்றிற்கான மருந்துகளையும் அறிவது!

மேலும் கல்பியத்தான - மனோ ரீதியான மறைவான வணக்கங்களை அறிவது; அவற்றைச் செயலாற்றுவது ஆகும்!

மேலும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மனிதனே! நீரில்லாத (ஓடுகின்ற ஆறு இல்லாத) நீதியான ஊர்த் தலைவன் இல்லாத - கருணைமிக்க மருத்துவர் இல்லாத ஊரில் நீ குடியிருக்காதே!

இன்னுமொருமுறை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

தீன் மார்க்கத்தைக் கற்றுத் தரும் ஆலிம் (அறிஞர்) இல்லாத - மருந்தைத் தரக்கூடிய மருத்துவர் இல்லாத ஊரில் குடியிருப்பது ஒரு முஸ்லிமுக்கு லாஜாயிஜ் (கூடாது) ஆகுமானதல்ல!

வைத்திய அறிவையும் குல கோத்திர வரலாறையும் அறியாதவன் முழு அறிஞராக முடியாது என்பதாக  இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்!

முஸ்லிம்கள் தங்கள் மூதாதையினரின் அறிவுப் பொக்கிஷ­மான வைத்தியத் தொழிலைப் புறக்கணித்து விட்டு நஸராக்களிடமும் யஹூதிகளிடமும் மருந்துகளுக்கு கைகளை ஏந்தக் கூடியவர்களாக மாறி வருவது மிகவும் மன வேதனையைத் தருகின்றது என்பதாக ஒருமுறை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்!

இனி இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அருளிய சில மருத்துவக் குறிப்புகளைக் காணலாமா?

1. முகம், சிலருக்கு திடீரென மஞ்சனிக்கும். அது ஒரு பெரிய வியாதிக்கான அறிகுறியாகும்! அவ்வாறு முகம் மஞ்சனிக்கக் கண்டால் தேனையும் வெந்தயத்தையும் நாளொன்றுக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்!

2. மொச்சையை அதிகம் தின்பதால் மூளை கூர்மையாகும்! அறிவுக்கூர்மை அதிகமாகும்!!

3. எவ்வகைக் காய்ச்சலாக இருந்தாலும் மாதுளம் பழச்சாறை எடுத்துக் குடித்து வாருங்கள்; சரியாகி விடும்! 

(இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் அறிவுப் பழச்சாறை இன்ஷா அல்லாஹ் இன்னும் பருகுவோம்)