Pezhai » 2014 » Oct2014 » கலீபா பெருந்தகைகள்
கலீபா பெருந்தகைகள்மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி
கலீபா வலிய்யுல் கறீம்
வலிய்யுல் கறீம் அவர்களுக்கு சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் 3.1.1970 இல் அருளிய பட்டோலை ஒன்று இத்தொடரை அலங்கரிக்கின்றது!
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் (வாரிதாத்துல் இலாஹிய்யா) தேவஞான வெளிப்பாடு!
நான் உயரிய வானுலகிலுள்ள பைதுல் மஉமூர் என்னும் பள்ளியாவேன். பாதுகாவலர்களான உயரிய அமரர்கள் அதை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் பூமியின் மத்தியிலுள்ள கஉபதுல்லாவாக உள்ளேன். ஜனங்கள் பெருமையுடன் தொடராக அதை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் இஸ்ரேலிட (தற்காலம்)முள்ள பைதுல் முகத்தஸாவேன். அதுவே வாழ்த்துக்குரிய முதலாவது கிப்லாவாகும்.
நான் உதயசூரியனும் இரவின் பூரணச்சந்திரனுமாவேன். என்னைக் கொண்டு நம்பிக்கையுடைய எதார்த்தங்களின் ஜோதி வெளியாகிறது.
நான் தனித்தன்மையானவர்களாயும் ஒன்றானவர்களாகவும் வந்த யாஸீனாவேன். அவர்களோ ஸீனுடையவும் யே யுடையவும் இரகசியம் கொண்டு வெளியானவர்கள்.
அந்த இரகஸியமாவது அஹ்மது ரசூல் (ஸல்) ஆகிய வலுப்பமான எங்கள் பாட்டனாராகும். பிரகாசம் பொருந்திய இந்தத் திருநாமத் தொடரிலே அவர்களே முந்தியவர்களாகும்.
அதிலே இரண்டாவது யாஸீனாகிய என் தந்தை நாயகம், அடுத்து வருகிறார்கள். அவர்களோ மாபெரும் குத்பும் மக்களின் இரட்சகருமாவார்கள்.
நிச்சயமாக நான் முஹிய்யுத்தீன் அப்துல்காதிராவேன். பொருத்தத்தையுடைய ஜைலானைச் சேர்ந்த மாபெரும் இரட்சகருமாவேன்.
அப்துல் காதிர் என்ற திருநாமம் கொண்டு கீழக்கரையில் வெளியானேன். அதுவாகிறது போர்வைகளாகிய சரீரங்களைக் கொண்டுள்ள குறிப்பாகும்.
சிலோனிலுள்ள வெலிகமாவில் அதன் திருநாமம் கொண்டு உதயமானேன். காதிருடைய அர்த்தங்கொண்டு சுகத்தின் உதவியாக வெளியானேன்.
கலீல் அவ்ன் என்னும் திருநாமம் இடர் (ஆபத்து) களுக்கு கார்மானமாகும். நோயாளிக்கு அந்த நோயை நீக்கி வைக்கும் அவிழ்தமாகும்.