• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுத மொழிகள்


துபையில் கலீபா ஏ.பி. ஸஹாபுத்தீன் பி.இ.எம்.பி.ஏ. ஹக்கிய்யுல் காதிரிய்அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை


வன்காஃபிர்கள்!

குர்ஆன் ­ஷரீபில் அல்லாஹூ தஆலா மனிதர்களைப் பார்த்து “திக்ரு செய்யுங்கள்” எனக் கட்டளையிடுகின்றான். ஆனால் வஹ்ஹாபிகளோ நீங்கள் திக்ரு செய்யாதீர்கள் என மக்களிடம் கூறுகின்றனர். அல்லாஹ்வின் கட்டளையை யாராவது மறுத்துக் கூற முடியுமா? முஃமீன்களே! நீங்கள் சலவாத்துக் கூறுங்கள் என அல்லாஹூதஆலா கட்டளையிடுகின்றான். அதுவும் எப்படிக் கூறுகிறான்? நானும் என் மலாயிகாமாரும் சேர்ந்து சொல்கிறோம். எனவே நீங்களும் ஸலவாத்துச் சொல்லுங்கள் என அருளுகின்றான். யாரை நோக்கிச் சொல்கின்றான்? ஈமான் கொண்ட முஃமீன்களைப் பார்த்து சொல்கின்றான். அப்படியெனில் ஈமான் இல்லாதவர்கள் யார்? காபிர்கள் தாம்! எனவே அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காமல் சலவாத்துக் கூறாமல் இருப்பவர்கள் யார்? அல்லாஹ் - மலாயிகாமார் -  நபிமார்கள் - வேதங்கள் - மறுமை நாள் நன்மை தீமைகள் இறை நாட்டத்தில் ஏற்படுவன. மெளத்துக்குப் பின் கேள்விகளைக் கேட்டல் என இத்தனை விஷயங்களையும் ஈமான் கொள்ள வேண்டும். இவ்வாறு ஈமான் கொள்ளாதவனை முஸ்லிம் எனச் சொல்ல முடியுமா? இதில் முதலாவது விஷ­யம் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வது! அவ்வாறு ஈமான் கொண்டவர்களுக்குச் சுவனம் இருக்கிறது. 

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டாலே வி­ஷயம் சரியாகி விட்டது. எனினும் அவனது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொள்வது மேலும் சிறப்பாகும். எனவே அல்லாஹ் எல்லோரையும் ஸலவாத் சொல்லுங்கள் என ஆணையிட வஹ்ஹாபியோ நீ ஸலவாத்துச் சொல்லாதே எனச் சொல்கிறான். பாங்கு சொல்லும் நேரத்தில் - குர்ஆன் ஓதும் நேரத்தில் மற்றும் இது போன்ற பல நேரங்களிலும் ஸலவாத்துச் சொல்லாதே என்கின்றான். நேரத்தை விட்டுவிடுங்கள். அது மொத்தத்தில் ஸலவாத்துச் சொல்லாதீர்கள் என்பதே அவனது பேச்சு. இவனை எவ்விதம் முஸ்லிமாக்க இயலும்? அவன் காபிர்தான்! காபிருக்கு எவ்விதம் சுவனம் கிடைக்கும்? இறந்தவுடனேயே நேரே நரகுக்குப் போக வேண்டியதுதான்.


தொடர்பு வேண்டாம்!

இத்தகையோரிடம் நாங்கள் தொடர்பு வைப்பது நல்லதா? இது எவ்வகையிலும் சரியல்ல! அவன் சலாம் சொன்னாலும்... என்ன செய்வது? பழகிய மனிதனாக இருக்கின்றானே என மறுக்க முடியாமல் பதில் கூற வேண்டியுள்ளது! ஆனால் அவனுக்கு ஸலாம் கூடச் சொல்லக் கூடாது. அவர்கள் காபிர்கள் தான்! காபிர்களிலும் வெறுமனே காபிரல்ல! கொடுங் காபிர்கள்! யஹுதி நஸராக்களைப் பார்த்து காபிர் எனச் சொன்னாலும் இவர்களைப் பார்த்து கொடுங் காபிர்கள் என்றே கூற வேண்டும்.  மக்கள் பழக்கத்திலே வன் காபிர்கள் எனச் சொல்வார்கள். வன் என்றால் கொடிய என்று பொருள். அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது! அவர்கள் எதிர்பட்டால் மறு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு போய்விட வேண்டும். 

வஹ்ஹாபிகளாக - தப்லீக் காரர்களாக யாராக இருந்தாலும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விரோதமானவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு ஸலாம் கூறக் கூடாது. பதில் கூறக் கூடாது. வீட்டில் ஒரு மகன் அப்படி இருந்தால் அடித்து விரட்ட வேண்டும்! எப்படி அவனை முஸ்லிம் எனக் கூற முடியும்?


சுன்னத் வல் ஜமாஅத்தினரில் இது போன்று - விளக்கமே இல்லாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். சுன்னத் வல் ஜமாஅத்தில் சிலர் ஹள்ரத் அலீ (ரலி) அவர்களைப் போற்றலோ -புகழலோ -  பின்பற்றலோ கூடாது எனக் கூறுகின்றார்கள்.  ஏனெனில் ஷீஆக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்களாம்! இப்படிக் கூறுகிறவர்களை எப்படி சுன்னத் வல் ஜமாஅத் எனக் கூற முடியும்? நாம் எப்போதும் வஹ்ஹாபிகளை வஹ்ஹாபிக் காபிர்கள் என்றே கூறுவோம்! அவர்கள் தாம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சலவாத்துச் சொல்லாதீர்கள் என விஷேசமாகச் சொல்பவர்கள்.

எங்கள் ஊர்ப் பள்ளியில் முஅத்தின் ஒருவர் பாங்கு சொல்லி வரும்போது ஒரு ஆள்... அவன் டெல்லி போய் வந்தவன்.. அங்கு போய் வந்தால் வஹ்ஹாபிக் காபிராகத்தான் திரும்பி வருவார்கள். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என முஅத்தின் சொல்லும் போது முழங்கையால் அவரை இடித்து சொல்லாதே... ஸலவாத்துச் சொல்லாதே எனத்தடுத்தானாம். அவன் எவ்வளவு பெரும் காபிர். இப்போது அவன் செத்துப் போய் விட்டான். இது போன்றவர்களை மெளத்தானவர்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வது பாவம்.  அவன் மகனாக இருந்தாலும் சரி! ரஸூலுல்லாஹ்வுக்கு அத்துணை விரோதிகள் அவர்கள்.


பொறாமை நஞ்சு!

ஒரு காலத்தில் எங்களைக் கண்டால் சிலருக்குப் பிடிக்காது. சில மெளலானாமார் ஏதோ குழப்பங்களைச் செய்தவர்களை வைத்து எல்லோரையும் ஒன்றாக எண்ணி இப்படிச் செய்கிறார்களோ என எண்ணினோம். பின்னால் சிந்தித்துப் பார்க்கும் போது ரஸூல் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதுள்ள பொறாமை - காழ்ப்புணர்வால் அவர்களைத் தாக்குகின்றனர். அதே தொடர்பாக எங்களையும் தாக்குகின்றனர். ரஸூல் ஸல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மீது எப்போதும் நாங்கள் ஓதிவரும் மெளலூது ­ஷரீபை ஓத வேண்டாம் என்றும் அவர்களைப் புகழாதே என்றால் என்ன பொருள்? அவர்களைப் புகழாதே என்றால் யாரைப் புகழ்வது?அத்தாவைப் புகழ்வதா? அம்மாவைப் புகழ்வதா? இன்று முஸ்லிம்கள் இத்துணை கண்ணியமாக - மரியாதையாக - ஒழுங்கு முறையாக இருப்பதற்குக் காரணம் ரஸூல் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம்!


பணியாத ஷைத்தான்!

அல்லாஹு தஆலா மலக்குகளை அழைத்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சஜ்தா செய்யுங்கள் எனக் கட்டளையிட்டான். அமரர்கள் அப்படியே பணிந்து சஜ்தா செய்தார்கள். ஆனால் ஷைத்தான் மட்டும் வணங்காமல் மறுத்து நான் உனக்கு மட்டுமே வணங்குவேன். ஆதத்துக்கு ஸஜ்தா செய்ய மாட்டேன்.  ஆதமோ மண்ணால் படைக்கப்பட்வர். நானோ நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றான். அல்லாஹ் என்ன செய்தான்! நீ காஃபிர். எனவே இங்கிருந்து போவென்று விரட்டிவிட்டான். அதே போலத்தான். பெருமானார் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் என அல்லாஹ் உத்தரவிட்டு, நான் சொல்ல மாட்டேன் என மறுப்பவனை அல்லாஹ் என்ன சொல்வான்? நீ காஃபிர்! என்றுதானே சொல்வான்? இறைவனே சொன்ன பிறகு அவனது அடியார்களான நாங்கள் என்ன சொல்ல வேண்டும்? ஸலவாத்துச் சொல்லாதவனே! நீ காபிர்! நீ போ! என்றுதானே சொல்ல வேண்டும்!


நேரே நரகம்!

எனவே இவர்கள் சொர்க்கத்துக்குப் போகப் போவதில்லை. போகும்போதே நேரே நரகத்துக்குப் போவார்கள். நல்ல ஈமானுடன் மரணிப்பவர்களை அவர்களின் தாய் தந்தையர் உறவினர்கள் வந்து சந்தோ­ஷமாக அழைத்துச் செல்வார்கள்.  இப்படிக் காஃபிராக இருப்பவர்களுக்கு இருட்டுக் குகைதான் எதிரே இருக்கும்.  அச்சமாக இருக்கும். இருட்டுக் குகைக்குள் டார்ச் எடுத்துக் கொண்டு போனால் கூட பயம் இருக்கத்தானே செய்யும்! உள்ளே என்ன இருக்குமோ? விஷ­ஜந்துக்கள் இருக்குமோ என அவன் பயந்து பயந்து கஷ்டத்தை அனுபவிப்பான்.    

(அமுதம் மேலும் பொழியும்)